Monday, March 4, 2013

ஆண்டுகளும் விழாக்களும்

ஆண்டுகளும் விழாக்களும்

    01 வது ஆண்டு     கடதாசி விழா
    02 வது ஆண்டு    பருத்தி ஃ பஞ்சு விழா
    03 வது ஆண்டு    தோல் விழா
    04 வது ஆண்டு    பூ விழா
    05 வது ஆண்டு    மர விழா
    06 வது ஆண்டு    சர்க்கரைஃ கற்கண்டு விழா
    07 வது ஆண்டு    கம்பளி ஃ செம்பு விழா
    08 வது ஆண்டு    வெண்கல விழா
    09 வது ஆண்டு    மண்கல விழா
    10 வது ஆண்டு    தகரம் ஃ அலுமினிய விழா
    11 வது ஆண்டு    எஃகு விழா
    12 வது ஆண்டு    லினன் விழா
    13 வது ஆண்டுp    பின்னல் விழா
    14 வது ஆண்டு    தந்த விழா
    15 வது ஆண்டு    படிக விழா
    20 வது ஆண்டு    பீங்கான் விழா
    25 வது ஆண்டு    வெள்ளி விழா
    30 வது ஆண்டு    முத்து விழா
    40 வது ஆண்டு    மாணிக்க விழா
    45 வது ஆண்டு    நீலக்கல் ஃ இரத்தின விழா
    50 வது ஆண்டு    பொன் விழா
    55 வது ஆண்டு    மரகத விழா
    60 வது ஆண்டு    மணிஃ வைர விழா
    75 வது ஆண்டு    பவள விழா
    80 வது ஆண்டு    அமுத விழா
    100 வது ஆண்டு  நூற்றாண்டு ஃதசரத ஃசகாப்த விழா

திணிவசைவுகள்

கல்விக்கதிர் கல்வி நிலையம்                                                    பாரதீ கல்வி நிலையம்
   
புவியியல்
உயர்தர மாணவர்களுக்கான வினாத்தொகுப்பு 
தொகுப்பு : ல.த.மயூரன்                                                                                          0772657122


திணிவசைவுகள்

1.    திணிவசைவுகள் என்றால் என்ன?   .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
2.    திணிவசைவு செயற்பாட்டை தூண்டும் காரனிகள் எவை?
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

3.    தகடுகழுவுதல் என்றால் என்ன?
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

4.    வானிலையால் அழிதல் செயற்பாடு எவ்வாறு திணிவசைவு செணற்பாட்டை தூண்டுகின்றது?
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

5.    1968 இல் திணிவசைவுகள் பற்றிய முதன்மைக் கருத்தினை வெளியிட்டவர் யார்?
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

6.    திணிவசைவுக்கான பிரதான காரணிகள் எவை?
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

7.    நீரானது திணிவசைவு செயற்பாட்டினை எவ்வாறு தூன்டுகின்றது?
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


8.    ஒரு பிரதேசத்தின் அதிகமான நீர்த்தன்மை காணப்படும் ஆயின் அது எவ்வாறு திணிவசைவு செயற்பாட்டை ஏற்படுத்தும் ? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

9.    திணிவசைவின் வகைகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

10.    ஊர்தல் செயற்பாடு என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

11.    வெற்றுக்கண்களால் அவதானிக்கமுடியாத திணிவசைவுகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

12.    ஊர்தல் செயற்பாடு நிகழும் பகுதிகள்pல் ஊக்கப்படுத்தும்  அல்லது எதிர்க்கும் காரணிகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

13.    ஊர்தல் செயற்பாட்டை தூன்டுகின்ற காரணிகள் எவை?அவற்றை தனித்தனியாக ஆராய்க? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

14.    கட்டிட நிர்மாணத்துரையினருக்கு பெறும் அச்சுறுத்தலாக அமையும் திணிவசைவுகள. ஏவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

15.    நிலவழுக்கை அல்லது நீர் வீழ்ச்சி என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

16.    நிலவழுக்கையில் செல்வாக்கு செழுத்தும் மானிடக் காரணிகள் எவை? இயற்கைக்காரணிகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

17.    நிலவழுக்கை செயற்பாட்டின் வகைப்பாடுகளும் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

18.    நில இறக்கம் அல்லது ஸ்லம்ஸ் என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

19.    ரூர்னேகெயின் 'வுரசநெயபயin ளடரஅp' நில இறக்கம் என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

20.    நில இறக்க செயற்பாடு அதிகமாக நிகழும் பகுதி? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

21.    சமவெளிச் சாய்வு அல்லது ஸ்ரேஸ்ரோம் என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

22.    சமவெளிச் சரிவுக்கு இணையான வேறு அசைவுகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

23.    சமவெளிச்சரிவின் சிறப்பான இயல்புகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

24.    பாறை வடு;க்கைகள் என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

25.     நிலப்பாய்ச்சல் என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

26.     நிலப்பாய்ச்சல் முறமையினைக் கொண்டு அவற்றை வகைப்படுத்துக? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

27.     சேற்றுப்பாய்வுகள்  என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

28.    நீருடன் சேறும் சிறுகற்கள் அரித்து வரப்படும் சறுபாறைகள் என்பன நிரம்பிய நிலைக்கு வந்ததும் சாய்வின் வழியே பாய்வுக்கு உற்படுவது எவ்வாறு அலைக்கப்டும் ? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

29.    சறுகள் பாய்ச்சல் செயற்பாட்டை துரிதப்படுத்டதும் காரணிகள் எவை? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

30.    புவிப்பாய்ச்சல் அல்லது நிலப்பாய்ச்சல் என்றால் என்ன? .....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................



இப்பாடத்தின் தொடர் வினாக்கள் அடுத்த கல்விக்கதிரில் வெளியாகும்

நன்றி

அன்பே சிவம்


ல.த.மயூரன்.
திருக்கடலுர்.

ஈழத்து இலக்கிய வரலாறு
அறிமுகம்


16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடச்சியாக நடைபெற்றிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச்  சரசோதிமாலை என்னும் சோதிட நூலும் ஈழத்துப் பூதந்தேவனார் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனாருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. சங்கத்தொகை நூல்களான அகநானூறு குறுந்தொகை நற்றிணை என்பவற்றில் இப்புலவர் பெயரால் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 68 231 .307 ; குறுந்தொகை 34 189 360; நற்றிணை 366 ஆகிய பாடல்கள் ஈழத்துப் பூதந்தேவனாருடையவை. ஈழம் என்ற சொல்லே இப்புலவரை ஈழத்தவராகக் கொள்ள இடமளிக்கிறது. எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொண்டால் சங்ககால நூல்களின் பின்னெல்லையான கி.பி. 3ம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்தனவாகவே இப்பாடல்கள் அமையும்..
•    தம்பதேனியா மன்னர் 3-ஆம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு போசராச பண்டிதர் என்பவர் சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினார்.
•    ஈழத்துப் பூதந்தேவனாருக்குப்பின் சரசோதிமாலை இயற்றப்பட்டது வரை எமது இலக்கிய வரலாறு இருண்டதாகவே உள்ளது. இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இலக்கியங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவையே.
•    இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர் வதியும்போதிலும் 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எதுவும் அப்பகுதிகளிலிருந்து எழுந்ததாகத் தெரியவில்லை..
•    13-ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனிராச்சியமாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380 - 1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் வகுத்துள்ளார்.


•    செகராசசேகரம்:- (இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறியப்படுகிறது)
•    சோமசன்மாவின் செகராசசேகரமாலை பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்லூலை இயற்றுவித்தான என்பர்)
•    பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புராணம்
•     சகவீரர் இயற்றிய கண்ணகி வழக்குரை
•    கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புராணம்
•    கதிரைமலைப்பள்ளு (இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை).
•    அரசகேசரியின் இரகுவம்சம்
•     வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல்
•     வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம்
•    முத்துராச கவிராயரின் கைலாய மாலை
முதலியவை 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும். இந்நூல்களை  சமய சம்பந்தமான நூல்கள்  யாழ்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள்  சோதிடம்  வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம்.

•     முதலாவது பிரிவில் தக்கிணகைலாசபுராணம்  திருக்கரசைப்புராணம்  கதிரை மலைப்பள்ளு வியாக்கிரபாதபுராணம்  கண்ணகி வழக்குரை என்பன அடங்கும்.
•    இரண்டாம் பிரிவில் வையா பாடல்  கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
•    18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல்தற்போதுகிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன்காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது.
•    மூன்றாவது பிரிவில் செகராசசேகரமாலை  செகராசசேகரம்  பரராசசேகரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம்பந்தமான நூல்களாகும்.
•    மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமய சம்பந்தமான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மை. நிலவுடமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது.




யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வெளித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வெளித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர்இ ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த பகுதிகளில் ஸ்திரம் பெற்றிருந்தது. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போத்துக்கேயர் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தமது ஆட்சியை நிறுவினரெனினும் 1620ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பாணத்துத் தலைநகரான நல்லூரை அவர்கள் கைப்பற்றினர். அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த பகுதிகளில் தமது நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ள மதமாற்றத்தையும் முக்கிய சாதனமாகக் கொண்டனர்.
கத்தோலிக்க மதகுருமாரின் மதம்பரப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் போ த்துக்கேயர் மேற்கொண்டனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவியோருக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கத்தோலிக்கரான சுதேசிகள் சிற்சில வரிகள் இறுப்பதிலிருந்து விலக்கபட்டனர். கத்தோலிக்கரானோருக்கு நீதி வழங்கும் விடயத்தில் கூட சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றைவிட சைவர்கள் பொது இடங்களில் வணங்குவதும் தடைசெய்யப்பட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் சலுகைகளுக்கிணங்கியும்இ நிர்ப்பந்தத்தினாலும் சைவர்கள் பலர் கிறித்தவராயினர். மன்னார்இ யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவாகிய பிரான்சிஸ்சேவியர் இப்பகுதிகளிலே கத்தோலிக்க மதம் நிலைபெற முயன்று உழைத்தார்.
 போத்துக்கேயரின் பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சியைக் கைப்பறிய ஒல்லாந்தரும் தமது மதப் பிரிவாகிய புரொட்டஸ்தாந்து கிறித்தவத்தைப் பரப்ப பல்வேறு முயற்சிகளையுமெடுத்தனர். எவ்வாறாயினும் இவ்விரு இனத்தவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் சமயம் சார்ந்ததாகவேயமைந்தது. 16ஆம் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் போத்துக்கேயர் காலம் (1505 - 1658) ஒல்லாந்தர் காலம் (1658-1798) என இரு பிரிவுகளாக அமையினும் தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இவை ஒருகாலகட்டமாகவே நோக்குதற்குரியன. இரு வேறு இனங்களின் ஆட்சி என்பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. இவ்விரு நூற்றாண்டுகளிலும் கிறித்தவ சமயப் பொருளடக்கம் கொண்ட நூல்கள் தோன்றத் தொடங்கியதைத் தவிர இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க புதிய போக்குகள் எவையும் காணப்படவில்லை. இக்காரணங்களினால் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகள் ஒரு காலகட்டமாகவே அமையத்தக்கவை.
இக்காலப் பிரிவில் கிறித்தவ சமயத்தாக்கத்தினால் எழுந்த நூல்களை முதலில் நோக்குவது பொருத்தமாகும்.
ஞானப்பள்ளு கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக்கும் நூல். இதை இயற்யிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. இது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. இப் பள்ளு நூலில் இடம் பெறும் புனிதத் தலங்கள் செரு சேலமும் உரோமாபுரியுமாகும். இக்காலக் கிறித்தவ இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் ஆ. சதாசிவம் கூறுவது இந்நூலுக்கும் பொருந்துவதாகும்.

'அக்கால இலக்கியங்களெல்லாம் கத்தோலிக்க மத நூல்களாகையின் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வருணனைகளெல்லாம் உரோமாபுரி செருசேலம் முதலிய மேல் நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசியக் கருத்துக்கள் அந் நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளிலே நாட்டு வளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.ஞானப்பள்ளினைவிட வேறு சில நூல்களும் குறிப்பிடத்தக்கன.

    பேதுருப்புலவர் இயற்றிய அர்ச்யாகப்பர் அம்மானைஇ தொன்பிலிப்பு இயற்றிய ஞானானந்தபுராணம்இ பூலோக சிங்க முதலியாரியற்றிய திருச்செல்வர் காவியம் என்பன இவற்றுட் சில. இவற்றுடன் சந்தியோகுமையூர் அம்மானைஇ திருச்செல்வர் அம்மானைஇமருதப்பக்குறவஞ்சி ஆகியவையும் அடங்கும். இக் கிறித்தவ மத இலக்கியங்கள் பெரும்பாலன சமூகத்தின் கீழ்மட்ட மக்கள் தொடர்புடைய சிற்றிலக்கிய வடிவங்களிலே அமைந்துள்ளன என்பதும் சுவையான அவதானிப்பாகும்
    19ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதம் பரப்பியோர் பரவலான மக்களை எட்டக்கூடியதாக வசன நடயைப் பயன்படுத்தியதற்கும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் அதே தேவைக்கு இச் சிற்றிலக்கியவடிவங்கள் பயன்படுத்தப்பட்டவைக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு போலும். மேற்கண்டவாறு கிறித்தவ சமயப் பிரசாரநோக்குடன் இலக்கியங்களியற்றப் பெறுதல் புதிய பண்பாகக் காணப்படினும் தொடர்ந்து சைவசமயச்சார்பான நூல்களும் பெரு வாரியாக எழுந்துள்ளன. இந் நூல்கள் அனைத்தையும் இங்கு குறிப்பிடுதல் சாத்தியமன்று. இவற்றை அவதானிக்கும் போது தலபிரபந்தங்கள்இ விரதமகிமைஇகிரியை விளக்கம் ஆகியவை பற்றியெழுந்த நூல்கள்இ சமயத் தெடர்பான வடமொழி இலக்கியங்களின் தழுவல்ஃ மொழிபெயர்ப்புகள் என வகைப்படுத்தலாம்.
சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையமகவந்தாதிஇ மறைசையந்தாதிஇ பறாளைவிநாயகர் பள்ளுஇ கூழங்கைத் தம்பிரானின் நல்லைக்கலிவெண்பா வீரக்கோன் முதலியாரின் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதலியன முதலாம் பிரிவுக்கு உதாரணங்காயமையும்
. வரத பண்டிதரின் சிவராத்திரி புராணம்இ ஏகாதசி புராணம் முதலியன இரண்டாம் பிரிவுக்கும் இராமலிங்க முனிவரின் சந்தானதீபிகை போன்றவை மூன்றாம் பிரிவுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். இவற்றை நோக்கும் போது தொடர்ந்து சைவசமய இலக்கியங்களே தமிழிலக்கிய மரபில் கோலோச்சி வந்தமை புலப்படுகி




 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமைஇ 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமைஇ சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமைஇ ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமைஇ பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமைஇ நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம் தபால் தந்திச் சேவைகளும் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை முதலியன இலங்கை வரலாற்றுக்குப் புதிய தோற்றத்தையளித்தன. சமூக வகுப்புகளிடையேயும் புதிய அம்சங்கள் தோன்றின. புதிதாக ஆங்கிலக் கல்வி கற்க அரசாங்க சேவையில் ஈடுபட்ட மத்தியதர வர்க்கமொன்று தோன்றியது. இவ்வர்க்கத்தினரிடையே கிறித்தவ மத மாற்றம் அதிக அளவில் நடைபெற்றதுஇ இது மட்டுமன்றி இவ்வகுப் பினரிடையிலேயே மேனாட்டு மயப்படுத்தலும் (றுநளவநசnணையவழைn) நிகழ்ந்தது.

இத்தகைய புதிய நிலைமைகளின் தாக்கம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கவே செய்தது. 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் நடந்தது போலவே 19ம் நூற்றாண்டிலும் கிறித்தவ மிசனரிமாரின்மதமாற்றமுயற்சிகள் மிகத் தீவிரமாக நடந்தன. கத்தோலிக்கஇ புரொட்டஸ்தாந்து மிசனரிடமாருடன் கூட அமெரிக்கஇ வெசிலியன் மிசனரிமாரும் ஆங்கிலேயரது ஆட்சிகாலத்தில் மதப் பிரசாரப்பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ மதம்இ ஆங்கிலக் கல்விஇ உயர்பதவி வாய்ப்பு ஆகியன ஒன்றுடனொன்று இணைந்திருந்தன. இதனால் ஆங்கிலக்கல்வியையோ உயர் உத்தியோகத்தையோ நாடுவோர் கிறித்தவர்களாவதும் இயல்பாயிற்று. பல்வேறு சலுகைகளை கருதிக் கிறித்தவரானோர் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு அந்நியப்படும் நிலைமையும் ஏற்பட்டது. முத்துக்குமாரகவிராசரின் (1780-1851) பாடலொன்று இந்நிலையை நன்கு பிரதிபலிக்கிறது.


' நல்வழி காட்டுவோம் உடு புடவை சம்பளம்

நாளு நாளுந் தருவோம்
நாஞ் சொல்வதை கேளும் எனமருட்டிச் சேர்த்து


பாரம்பரிய நிலவுடமைச் சமூக அமைப்பின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கிய சூழலே 19ம் நூற்றாண்டு இலக்கியத்தின் சமூக அடித்தளமாக அமைந்தது எனில் மிகையாகாது.

19-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தொகையான இலக்கியங்கள் சமய உள்ளடக்கம் கொண்டனவாகவே அமைந்தன. தெய்வங்கள் மீதும் திருத்தலங்கள் மீதும் பாடப்பெற்ற இலக்கியங்களே இவற்றிற் பெரும்பான்மையன. இவற்றைவிட கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்குடன் எழுதப்பட்டவையும்இ கிறிஸ்தவ சமயத்தை மறுத்து சைவ மதத்தை நிலைநிறுத்தும் நோக்குடன் எழுதப்பட்டவையும் 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாய் அமைந்தன.

கிறிஸ்தவ மதப்பிரசாரமும் அதற்கு எதிரான முயற்சிகளும் தீவிரமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கல்வி கற்றோரை மட்டுமன்றி மற்றோரையும் எட்டும்படி அவை சம்பந்தமான ஆக்கங்கள் அமையவேண்டிதாயிற்று. இத்தகைய நிலை 19ஆம் நூற்றாண்டு இலக்கிய வசன நடை பிரதானம் பெறவும் வளர்ச்சியடையவும் வழியமைத்தது. உரைநடையைச் சமயப் பிரசாரத் தேவைகளுக்குப் பயன்படுத்தியோரில் கிறிஸ்தவரே முன்னின்றனர். மிசனரிமாரே முதலில் யாழ்ப்பாணத்தில் அச்சுக் கூடங்களை நிறுவினர்.

சமயத் தேவைக்காகப் பத்திரிகைகள்இ துண்டுப்பிரசுரங்கள் முதலிய தகவற் தொடர்புச் சாதனங்களை அவர்கள் பயன்படுத்தினர். 1923ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத் துண்டுப் பிரசுர சங்கம் (துயககயெ வுசயஉவ ளுழஉநைவல) நிறுவப்பட்டதுஇ இதன் மூலம் கிறிஸ்தவ மத சம்பந்தமான பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. சமய உண்மைகளின் விளக்கங்கள்இ சமய கண்டனங்கள் ஆகிய பலவும் இத்துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றன. கிறிஸ்தவரின் இதே வழியினைச் சைவரும் கைக்கொண்டனர்.
ஆறுமுகநாவலரும் அவரைத் தொடர்ந்து சங்கரபண்டிதர்இ செந்திநாதையர்இ தாமோதரம் பிள்ளைஇ கைலாயபிள்ளை போன்றசைவப்பெரியார்களும் சிறு பிரசுரங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளனர்.


19ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பகுதிகளில் உருவாகிய பத்திரிகைச் சூழல் சமய அடித்தளம் கொண்டது. கிறிஸ்தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841இல் அமெரிக்க மிசனரி சார்பில் வெளிவந்தது. கத்தோலிக்கபாதுகாவலன்இ இலங்காபிமானி ஆகியனவும் 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் கிறிஸ்தவ சமயச்சார்புடன் வெளிவந்த பத்திரிகைகளாகும். எனினும் இப்பத்திரிகைகள் சமய எல்லையுள் மட்டும் நின்றுவிடாது பல்வேறு விடயங்கள்பற்றியும் எழுதின. உதயதாரகை தனது முதலாம் இதழ் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தது.

'.......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கைஇ சரித்திரம்இ பொதுவானகல்விஇ பயிர்ச்செய்கைஇ அரசாட்சிமாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்'.

சமயசம்பந்தமாகத் தோன்றிய பத்திரிகைகளாயினும் இவை தமது கோட்பாட்டெல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டமை குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தவர் பத்திரிகைகளை ஆரம்பித்தது போன்று சைவர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கைநேசன்இ சைவாபிமானிஇ சைவ உதயபானுஇ இந்துசாதனம் ஆகியவை சைவர்களால் வெளியிடப்பட்டவை. இவற்றுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சி நோக்கில் முஸ்லிம் நேசன்இ சைபுல் இஸ்லாம் ஆகிய பத்திரிகைகளும் கொழும்புஇ கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வெளியிடப்பட்டன.

 பொதுத் தகவற் சாதனமாகிய பத்திரிகையின் பரவலான தோற்றம் தமிழ் வசன நடையின் துரிதமான பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு வழிகோலிற்று. இலக்கண இலக்கிய தத்துவ நூல்களில் உரை வடிவங்களிலே கட்டுண்டு கிடந்த தமிழ் வசனநடை தனது பண்பாட்டெல்லைகளை விரிவுபடுத்திஇ புதிய வனப்பும் வளர்ச்சியும் பெற்றமைக்குரிய பிரதான காரணிகளுள் பத்திரிகைத் துறையும் ஒன்றாய் அமைந்தது. அச்சுரூபத்தில் பல நூற்றுக் கணக்கான பிரதிகள் வெளியிடப்படும் போது இலக்கியம். தவிர்க்க முடியாதபடி பரந்துபட்ட மக்களை எட்டவேண்டி ஏற்படுகிறது. இது நவீனயுகத்தில் அச்சில் வெளிவரும் இலக்கியங்களின் நிலை பேற்றுக்குரிய விதியாகும். பத்திரிகைகளின் தோற்றத்துடன் தமிழிலக்கியம் பொதுத்தகவற் தொடர்புச் சாதனப் பண்பைப் பெற்றதை இவ்வகையிலேயே விளக்கலாம்.

அச்சுவசதிஇ வசன நடை வளர்ச்சிஇ பத்திரிகையின் தோற்றம் என்பவற்றுடன் கூட இக்காலத்தில் பரவலாகிய கல்வித் துறையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை குறிப்பிடக் கூடியதாகும். குறிப்பாக ஆங்கிலக் கல்வியின் மூலம் மேல்நாட்டு இலக்கியத்துடன் தொடர்பு எற்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நாவல்இசிறுகதை ஆகியவை தோன்றி வளர்வதற்குரிய சூழல் ஏற்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவும் இதற்கு உதவின. 1856-ல் Pயசடநல வாந Pழசவநச என்ற ஆங்கில நூல் காவலப்பன் கதை என்ற பெயரில் தமிழாக்கப்பட்டது. ழுசளழn யனெ எயடயவெiநெ என்ற போத்துக்கேய நூல் ஊசோன்பாலந்தை கதை என நெடுங்கதையாய் வெளிவந்தது. இவற்றைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டு நாவலிலக்கியத்துக்கு முன்னோடிகளாயமையக் கூடிய அஸன்பேயுடைய கதை (1885) இ மோகனாங்கி (1895) முதலிய நெடுங்கதைகளும் வெளியிடப்பட்டன.

இதுவரை 19ஆம் நூற்றாண்டுக்குரியனவாக மேலே பார்த்த புதிய வளர்ச்சிகள் வசன இலக்கிய வழியமைந்தவையே. செய்யுள் மரபுரீதியான போக்கிலேயே சென்றது. தலபிரபந்தங்களையும்இ சமயக்கிரியை விளக்க நூல்களையும் வடமொழி இலக்கியங்களின் தழுவல்களையுமே செய்யுட்துறையில் தொடர்ந்து காணலாம். பொருளடக்கம் மட்டுமல்லாது இலக்கிய உத்திஇ மொழி நடை ஆகியவை கூட மரபு நெறிப்பட்டதாகவே அமைந்தன. வசன நடையில் புதுமையைப் புகுத்திய ஆறுமுகநாவலர் கூடச் செய்யுளை மரபுவழி நின்று 'புனிதப் பொருளாகவே' நோக்கினார். நீண்ட பாரம்பரியத்தையுடைய செய்யுளில் புதுமைசெய்ய இலக்கிய ஆசிரியர் தயங்கினர். ஆனால் தமது கண் முன்னே வளர்ந்த வசன நடையுடன் அதிக சொந்தம் பாராட்டி மாற்றங்கள் செய்ய அவர்கள் தயங்கவில்லை'. இந்நிலைமை ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பொதுப்பண்பாகும்.

19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் பத்திரிகைகள் போன்ற பொதுத் தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியும் இலக்கியத்தைப் பரந்த மக்கள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தின. இதனால் இலக்கியம் உயர்நிலை மக்களைப் பாத்திரங்களாகவும் வாசகர்களாகவும் கொள்ளும் நிலையிலிருந்து விடுபடத் தொடங்கியது. இன்னொரு வகையில் கூறினால் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் காணப்படும் நவீன பண்புகள் பல பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது எனலாம்.. ஈழத்து இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டையடுத்து இருபதாம் நூற்றாண்டு தனிக் காலகட்டமாயமைகிறது.

ஈழத்துத் தமிழரின் சமய கலாசார தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண்டிருந்தவர். 1856ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட நல்லறிவுச் சுடர் கொழுத்தல் என்ற பிரசுரத்தில் இதனை அவதானிக்கலாம். சி.வை. தமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே நல்லறிவுச் சுடர் கொழுத்தலில் ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.

இருப்பினும் 1950ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டைப் பரவலாக்கியதுடன்தான் எழுத்தாளர்இ வாசகர்இ விமரிசகர் ஆகிய மூன்று மட்டங்களிலும் இவ்வுணர்வு செறிந்து பிரபலம் பெற்றது. இக்கால கட்டத்தில் இலங்கையின் சமூகஇ அரசியல்இ பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இக்கோட்பாட்டின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவின. தேசிய நலனை அபிவிருத்தி பண்ணும் வகையிலேயே சகல நடவடிக்கைகளும் அமையவேண்டும் என்ற அரசின் கொள்கை கலாசாரத் துறையில் தேசியக்கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவிற்று
 ஈழத்து இலக்கியத்தில் வெறும் பற்று மட்டும் அன்றி இலக்கியம் தேசியப் பிரச்சினைகளை எடுத்தாளவேண்டும் என்றும்; குறிப்பாக அடிநிலை மக்களின் வாழ்க்கை இலக்கியப் பொருளாக வேண்டும் என்றும் இத்தேசிய இலக்கியக் கோட்பாடு வற்புறுத்திற்று. இக்கருத்தைப் பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. எனினும் தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு பெற்ற இம்முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஈழத்துத்தமிழிலக்கியப் போக்கைக் குறிப்பிடத்தக்களவு வழிநடத்தியுள்ளது.இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதற்கு முற்பட்ட இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட சில பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளது.

 இக்காலத்தில் நிகழ்ந்தேறிய பாரிய சமூக மாற்றங்களே இதற்குக் காரணமாக அமைந்தன. பிரித்தானியரின் வருகையினாலும் அவர்கள் இங்கு புகுத்திய வர்த்தகப் பொருளாதார முறையினாலும் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு சிதைவடையஇ அதன் சிதைவில் இருந்து தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூக முறையும்இ அதன் விளைவான நவீன மயமாதலும்இ அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களுமே இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இயக்கு சக்தியாக அமைந்தன.


19ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ சமூக கலாசாரத்தின் அடிப்படை அம்சமான சமயமே இலக்கியத்தின் உள்ளடக்கமாக அமைந்தது. சாதாரண மனிதனும் அவனது அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளும் இலக்கியத்துக்குப் புறம்பாகவே இருந்தன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சாதாரண மனிதன் பொது வாழ்வில் முக்கியத்துவம் பெறத் தொடங்க 20ஆம் நூற்றாண்டு இலக்கியம் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வைப் பொருளாகக் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதாவது தெய்வங்களும்இ திருத்தலங்களும்இ சமயானுஷ்டானங்களும் பெற்ற இடத்தை பொதுமனிதனும்இ நடைமுறைவாழ்வும் பெற்றன. சுருக்கமாகச் சொல்வதானால் இலக்கியம் சமய நெறியில் இருந்து சமூகநெறிக்கு மாறியது. இது 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பண்பாகும்.


இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இதனாலேயே 19ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்துவந்த உலாஇ பிள்ளைத்தமிழ்இ பள்ளுஇ குறவஞ்சி போன்ற பிரபந்த வடிவங்களும் புராணங்களும் வழக்கிறக்க நவீன ஆக்க இலக்கிய வடிவங்களான நாவல்இசிறுகதைஇ நாடகம்இ (நவீன) கவிதை போன்றன தோன்றின. இவை ஈழத்தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்த வளர்ச்சி பெற்றன. ஆரம்பத்தில் இவற்றை இலக்கியங்களாக அங்கீகரிக்காத பண்டித மரபினர்கூட இன்று இவற்றின் இலக்கிய அந்தஸ்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


ஈழத்து மொழிவழக்குகளும் ஈழத்துப் பண்பாட்டு அம்சங்களும் 20ஆம் நூற்றாண்டிலேயே இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. முந்திய நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களில் மிக அரிதாகக் காணப்பட்ட இத்தனித்துவக்கூறுகள்இ இந்த நூற்றாண்டு ஈழத்து இலக்கியத்தின் மிகப்பிரதான அம்சமாக மாறின. இவை தமிழக இலக்கியத்திலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை வேறுபடுத்தி அதற்கு ஒரு தேசியத் தன்மையை வழங்கின.

இந்த நூற்றாண்டின் பின்பகுதியில் அதாவது 1950-க்குப் பிறகு இந்நாட்டில் ஏற்பட்ட சமூகஇ அரசியல்இ பொருளாதார மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சமூக அரசியல் பிரக்ஞையை அளித்தன. இக்காலப்பகுதியில்இ பொருளாதார விடுதலையும்இ சம உடைமைச் சமூக அமைப்பும் கோரிய அடிநிலை மக்களின் அரசியல் விளிப்புணர்வுஇ மார்க்ஸீயக் கட்சிகளை மட்டுமன்றி எல்லா அரசியல் கட்சிகளையும் தவிர்க்கமுடியாதவாறு சோசலிசக் கோட்பாட்டை கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தித்தது.

இலக்கியமும் சமூக அரசியல் பிரக்ஞையில் இருந்து பிரிந்து ஒதுங்கமுடியாது போயிற்று. இந்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர்களின் பிரச்சினைகளையே தங்கள் படைப்புக்களின் பொருளாகக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தே சில எழுத்தாளர்களும் தோன்றினர். இவ்வகையில் முற்போக்கு இலக்கியம் இந்நாட்டின் பிரதான இலக்கிய நெறியாக மாறியது. முற்போக்கு இலக்கியக்கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எழுத்தாளர் பலர் இங்க இருப்பினும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதான போக்காக இருப்பது முற்போக்கு நெறியே என்பதை அழுத்திக் கூறலாம். இடதுசாரி இயக்கத்தில் அரசியல் பிளவுகள் ஏற்பட்ட போதிலும் கூட இது இலக்கியு நெறியை அதிகம் பாதிக்கவில்லை.மறுவகையில் இலக்கியத்தின் சமூகப்பெறுமானத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம் சிலவேளை அதன் கலைப் பெறுமானத்தைப் பாதித்துள்ள நிலையையும் இங்கு அவதானிக்க முடிகின்றது. சமீபகாலத்தில் இது பற்றிய சர்ச்சைகள் ஈழத்து இலக்கிய உலகில் அதிகம் நடை பெற்றுள்ளன.

 இலக்கியத்தின் சமூகப் பெறுமானமும் கலைப்பெறுமானமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை இன்றுஇ ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அதிகம் உணர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள இம்முற்போக்கு இலக்கிய நெறி தமிழக இலக்கியத்தைப் பொறுத்தவரை மிகப் பிற்பட்ட வளர்ச்சியே என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தக்க பிறிதொரு அம்சம் வர்த்தக மயமாகாமை எனலாம். தமிழ்நாட்டைவிட ஈழத்தில் எழுத்தறிவு விகிதம் மிக அதிகம் எனினும் இங்கு வர்த்தகரீதியான பெரும் சஞ்சிகைகள் வளர்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் சந்தையாக ஈழம் தொடர்ந்தும் இருந்து வருவதே இதன் காரணம் எனலாம். மலிவான ரசனைக்குத் தீனிபோடும் பொழுது போக்கு ரகக் கதைகள் தமிழகத்தில் மலிவாக உற்பத்தி செய்யப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. நூல்வெளியீட்டு வசதியும்இ நூல் சந்தைப்படுத்தல் முறையும் விருத்தி அடையாத நிலையில் அவற்றோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு இங்கு வர்த்தக இலக்கியம் வளர்ச்சி அடைய முடியவில்லை. சிங்கள மொழியில் வர்த்தக இலக்கியங்கள் பெருகியதைப் போன்று இலங்கைத் தமிழில் பெருகாமைக்கும் இதுவே காரணம் எனலாம். இவ்வாறு கூறுவதனால் ஈழத்துத் தமிழில் வர்த்தக ரீதியான இலக்கியேமாஇ சஞ்சிகைகளோ இல்லையென்று பொருள்படாது.
 1970 க்குப் பின்னர் சுமார் ஏழு ஆண்டுகாலம் இந்தியப் புத்தகங்கள்இ சஞ்சிகைகள் இறக்குமதிக்கு இருந்த தடையைப் பயன்படுத்திஇ வீரகேசரிஇ ஜனமித்திரன் போன்ற வர்த்தக ரீதியான வெளியீட்டு நிறுவனங்கள் தோன்றி ஈழத்துத் தமிழ் இலக்கியம் வர்த்தக மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் காணப்படுவது போல் வர்த்தக இலக்கியத்துக்கும் உயர் இலக்கியத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்வெளியீட்டு வசதியும்இ நூல் சந்தைப்படுத்தும் முறையும் வளர்ச்சியடையாமையால் வர்த்தக இலக்கியத்தின் எழுச்சி தடைப்பட்டிருப்பது மட்டுமன்றி காத்திரமான இலக்கிய முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் காணப்படும் பொதுவான மந்தநிலைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். பிரபல எழுத்தாளர்கள்இ கவிஞர்களின் சிறந்த படைப்புகள் பல இன்னும் வெளியிடப்படாமலேயே உள்ளன. பிரசுர வசதிக் குறைவினால் எழுத்தார்வம் மறைமுகமாகத் தடை செய்யப்படுகின்றது. எனினும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்இ வாசகர் சங்கம்இ முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்இ யாழ். இலக்கிய வட்டம் போன்ற எழுத்தாளர் கூட்டுப் பதிப்பு முயற்சிகள் நம்பிக்கை தருவதாக உள்ளன............................