Wednesday, March 6, 2013

பல்லவர் காலம்


கி.பி ஆறாம் நூற்றாண்டின் பகுதியோடு முடிந்ததாகக் கூறிய சங்கமருவிய காலப்பகுதிக்கும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழராட்சிக் காலப் பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலம் எனப்படும். அது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளைக் கொண்டது.


சங்கமருவிய காலத்து பிற்பகுதியிலே தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த களப்பிரரின் ஆட்சி கி.பி ஆறாம் நூற்றாண்டில் வலி குன்ற பாண்டியர் அவருடன் போர் செய்து பாண்டி நாட்டைக் கைப்பற்றினர். அந்த நூற்றாண்டில் பல்லவர் தமிழ்நாட்டிற் புகுந்தனர். பல்லவர்கள் என்போர் தமிழ்நாட்டிற்கு வடக்கே சாதவாகன வம்சத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்தில் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்த சில மாகாணங்களுக்கு தலைவராய் இருந்து வந்த ஒரு வகுப்பினர்.


தமிழ்நாடு கலைவளம் பெற்று விளங்கிய காலம் பல்லவராட்சிக் காலம். சிற்பம், ஓவியம், இசை, நடனம் முதலிய நுண்கலைகள் இவர் காலத்தில் உயர்வு நிலை பெற்றிருந்தன என்பது அவர் குடைந்தெடுத்த கோயில்களில் இருந்தும், அக்காலத்துச் சிலாசனங்களிலிருந்தும் அறியக்கிடக்கின்றது.


சைவம் வைணவம் ஆகிய வைதீக சமயங்கள் புத்துயிர் பெற்றுத் தளைத்த பல்லவராட்சிக் காலம் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு சிறந்த காலப்பகுதி எனக் கருதப்படுகிறது. நாயன்மார், ஆழ்வார் எனும் சொற்களுக்கு முறையே தலைவர், இறைவனுடைய குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர் என்பன பொருளாகும். பல்லவர் காலத்தில் வாழ்ந்த முக்கியமானவர்களாக கருதப்படுபவர் திருஞானசம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் நாயணார், திருநாவுக்கரசர், திருமூலர், ஐயடிகள் காடவர்கோன் முதலியோர் ஆவார். பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் மூவரும் மொழிந்த திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், கோதையார், தொண்டரடிப்பொடியாழ்வார்,  குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார். மதுர கவி ஆழ்வார் ஆகிய ஒன்பதின்மரும் பல்லவர் காலத்தோர் ஆவார். நாயன்மார்கள் பாடிய பக்திப் பாடல்களை சோழப்பெருமன்னர் காலத்திலிருந்த நம்பியாண்டார் நம்பி தேடிப்பெற்று அவற்றை திருமுறையாக வகுத்தமைத்தது போலவே அக்காலத்திலிருந்த நாதமுனிகளும் ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை தேடிப்பெற்று நாலாயிர திவ்ய பிரப

ந்தம் எனத் தொகுத்துள்ளனர்.



உலகியற் காதலாகிய அன்பினைந்தியைதான் கவிதைக்கு பொருளாக அமைதல் வேண்டும் என்பது தமிழ் மரபாகும். அம்மரபு பிறளாமல் இக்காலப்பகுதியில் எழுந்த இலக்கிய நூல்களும் சிலவுள. அவற்றுக்கு திருச்சிற்றம்பலக் கோவையாரை ஓர் உதாரணமாகக் கூறலாம். அந்நூலில் தலைவன் தலைவியர் மாட்டு நிகழும் உலகியற் காதலே கூறப்படுகின்றதெனினும் இறையன்பும் அதனோடு அழகுற இணைக்கப்பட்டுள்ளது

. பாண்டிக் கோவை, முத்தொள்ளாயிரம் எனும் நூல்களில் உலகியற் காதலே கூறப்படுகின்றதெனினும் அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வீரச்செயல் முதலியனவற்றை பாராட்டிக் கூறுதற் பொருட்டு அகத்திணைப் பொருள் கருவியாக கொள்ளப்பட்டிருத்தலைக் காணலாம்.



பல்லவர் காலம்



தேவாரம்



திருஞானசம்பந்தர்



சீர்காழியில் சிவபாதவிருதயார்க்கும், பகவதிக்கும் பிறந்தவர். மூன்று வயதில் ஞானப்பால் அருந்தி, முதல் தேவாரத்தைப் பாடியவர். காலம் 7ஆம் நூற்றாண்டு. இவர் பாடிய பதிகங்கள் 384. ஒரு பதிகம் பதினொரு பாடல்களைக் கொண்டது. இப்போது உள்ளவை 4181 பாடல்கள் மட்டுமே.(இவர் பாடிய பதிகங்கள் 16 ஆயிரம் என்பர்). மிகச்சிறிய வயதிலேயே சிவபதம் அடைந்தவர். தற்காலத்தில் திருவிடைவாய் மற்றும் கிளியன்னவூரின் கல்வெட்டிலிருந்து இவரது இரு தேவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.



(திருவையாறு)



புலன்ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
    அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
    அருள்செய்வான் அமரும் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
    முழவதிர மழை என்றஞ்சிக்
சில மந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே



புலன்கள் ஐந்தும் தத்தம் செயல் மறந்து இயக்கம் குழம்ப, அறிவோ கலங்கிப் பேதலிக்க, சளி மேல் உந்தி வந்து மரண காலம் அணுகித் தவிக்கும் போது அஞ்சாதே என்று துணைவரும் அருட்கடல் அவன். அத்தகைய கருணாமூர்த்தி குடிகொண்்ட திருவையாற்றின் கோயிலில், நாட்டிய மகளிர் நடனமாட ஆட்டத்துக்கு இசைக்கும் முழவொலி கேட்டு இடியோ என அஞ்சிய சில குரங்குகள் மரம் ஏறி முகில் பார்த்து திகைத்து நிற்கும்.


(திருச்சிராப்பள்ளி)



வெய்தண்சரல் விரி நிறவேங்கைத் தண்போது
செய்ய பொக்சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலோர்பாகம் மகிழ்வார் நஞ்சுண்பார் தலையோட்டில்
ஐயமும் கொள்வார் ஆர்இவர் செய்கை அறிவாரே



அடர்நத கிளைபரப்பிய வேங்கை மரங்கள் பொன்வண்ண மலர் பூத்துக் குலுங்கும் குளிர்ந்த சாரலை உடைய சிராப்பள்ளியில் கோயில் கொண்டவன் எம் பிரான். அவன் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியாதவன். உயிர்களுக்கு அமுதமான உமையை ஒரு பாதியில் வைத்து அவனே உயிர் கொல்லும் நஞ்சையும் குடிக்கிறான். அன்னபூரணியாம் அவளையே ஒரு பாதி கொண்ட அவன் கபால் ஓடேந்திப் பிச்சையும் எடுக்கிறானே? இவனது லீலைகளை யார் அறியக் கூடும்?



திருநாவுக்கரசர்



இவர் காலம் 7ஆம் நூற்றாண்டு திருமுனைப்பாடி நாட்டின் திருவாமூரில் பிறந்தவர். இயற்பெயர் மருள்நீக்கியார். தந்தை புகழனார், தாய் மாதினியார். இளம் வயதில் சமணத்தை தழுவினார். இவர் அந்த மதத்தில் ‘தருமசேனர்’ என அழைக்கப்பட்டார். கடும் வயிற்று நோவால் துன்புற்றார். அவர் தமக்கை திலகவதியார் திருவதிகை ஈசனை வணங்கி திருநீறு தடவி நோயைப் போக்கினார். அது முதல் சைவராகி திருப்பதிகம் பாடி சிவத்தொண்டு செய்தார். பல்வவர் ‘மகேந்திர வர்மனை’ சைவராக்கினார். ஞானசம்பந்தரால் அப்பர் என அழைக்கப்ட்டவர். இவரது தேவாரங்களின் எண்ணிக்கை 3066.



(பொது)
அங்கத்தை மண்ணுக்காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போது இங்குற்றேன் என் கண்டாய்



நிலையற்ற இந்த உடலை மண்ணுக்கு தந்தேன். என் பக்தியையும் ஆர்வத்தையும் உனக்கே அளித்தேன். இந்த உலகின் மீது நான் கொண்ட பற்றை நீக்கி உன்னையே பற்றிக் கொண்டேன். சங்கு போன்ற வெண்மேனிச் செல்வமே!! எம் இறைவா! உன்னையே விசுவாசிக்கின்ற நாயனே ஆகிய நான், சாகும் போது எங்கே சென்றாய் எம் இறைவா என்று உன்னை அழைப்பேன். அப்போது “இதோ வந்தேன்!” என்று என்னை அணுகி அருளல் வேண்டும்.


தேவாரம் : சுந்தரர்


திருமுனைப்பாடி நாடு திருநாவலுhரில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் பிறந்தவர். இயற்பெயர் நம்பி ஆரூரர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம். இறைவனுடன் தோழமை நிலையிலிருந்து பாடியமையால் ‘தம்பிரான் தோழர்’ எனவும் இவரின் முரட்டு பக்தி காரணமாக ‘வன்றொண்டர்’ எனவும் அழைக்கப்பட்டார். ஏழாம் திருமுறையில் உள்ள இவரது தேவாரங்களின் எண்ணிக்கை 1026.



(திருச்சோற்றுத்துறை)



ஓதக் கடல்நஞ் சினை, உண்டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண் டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே



பேதமை என்பது பயன்தரு பொருளைக் கைவிட்டு பயனற்ற சக்கையாக பொருளைக் கைக்கொள்ளுதல். முழங்குகின்ற பார்க்கடலில் தோன்றிய திருமகள் முதல் அமுதம் வரையிலான பல்வேறு சிறந்த பொருள்களில் ஒன்றையும் கொள்ளாது, அக்கடலில் விளைந்த கொடிய ஆலகாலத்தினை ஏற்ற பேதையான பெருமான் இவன். இவன் பேதை விரும்பி வசிக்கும் பதியான சோற்றுத்துறையும் இவன் குணம் போன்றதாகவே உள்ளது. இவ்வூரில் உள்ள மாந்தோப்புகளில் உள்ள மாமரங்கள் குளிர்ச்சி மிக்க நீரைக்குடித்து நெருப்பு போன்ற தளிரை வெளியிடுகின்றன.


திருவாசகம்


மாணிக்கவாசகர்


இவரது அற்புத நூலான திருவாசகப் பாடல்களின் எண்ணிக்கை 656. திருக்கோவையார் 400 பாடல்களைக் கொண்டது. மணிவாசகர் என்று அழைக்கப்படும் இவரது இயற் பெயர் ‘திருவாதவூரர்’. காலம் 9ம் நூற்றாண்டு. பாண்டியன் அரிமர்த்தனின் அமைச்சராக இருந்து பின்னர் பதவி விலகி சமயத்தொண்டு செய்தார்.



திருச்சதகம்


(நீத்தல் விண்ணப்பம்)



கார்உறு கண்ணியர்ஐம் புலன்
    ஆற்றங்கரை மரமாய்
வேர்உறுவேனை விடுதி கண்டாய்
    விளங்கும் திருவாரூர்
உறைவாய் மன்னும் உத்தர
    கோசமங்கைக்கு அரசே
வார்உறுபூண் முலையாள் பங்க
    என்னை வளர்ப்பவனே



ஆற்றங்கரையில் வேர்விட்டு நின்ற மரம் பெருவௌ்ளத்தில் மண் அரித்து ஆற்றுடன் சென்று விடும். அது போல் அழகு விழி மாதரால் பெருகிய காம வௌ்ளத்தில் ஐம்புலன்களும் அடித்து செல்லப்பட்டு அழிகிறேன். என்னைக் கைவிடாததே. திருவாரூரில் உறைவோனே!! நிலை பெற்றுள்ள உத்தர கோச மங்கைக்கு அரசனே. கச்சணிந்த முலையாளை தன் பாதியாய் கொண்டோனே. புலனின்பமாம் ஆபத்திலிருந்து காப்பாய்.

திருமந்திரம்


திருமூலர்


இவர் திருமூலநாயனார் என்று வழங்கப்படுகிறார். இந்நூலில் 3071 பாடல்கள் உள்ளன. இது 9 தந்திரங்களாகவும் 232 அதிகாரங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளது. பழந் தமிழிலிருந்த ஆகம நூல்களில் ஒன்பதைத் தழுவி இந்நூலைப் படைத்தார். இவர் சித்தர்களுள் முதன்மையானவராய் காணப்பட்டார். இவர் பாடல்களில் உலகளாவிய மனிதாபிமானத்தையும் விரிந்த அன்பு சார்ந்த ஆன்மீகத்தையும் காணலாம்.



ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு
சூரையங் காட்டிடை கொண்டு போய்சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே



சாவுக்கு ஊரெல்லாம் கூடியது. கிடக்கிற உடலுக்கு பெயரில்லை. வெறும் கட்டைக்கு ஒரே பெயர் பிணம். பெயர் வைத்தது போலவே பெயரை நீக்கி பிணப்பெயரை இட்டது ஊர், ‘வீட்டில் வைக்க வழங்காது் துhக்கு துhக்கு’ என்று துரிதப்படுத்தினர். சுடுகாட்டில் கொண்டு போய் சுட்டுச் சாம்பலாக்கி செத்தவன் நினைவுக்கும் சேர்த்து தலைமுழுகி மறந்து போனார்கள்.



அன்பும்சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பாய் சிவமாய் அமர்ந்திருந்தாரே



சர்வஜீவப் பொருள்களிலும் வேறு பாடின்றிப் பொங்கித் ததும்புகின்ற அன்பாகிய சிவம். அன்பே வடிவான சிவத்தை பூசை போன்ற கிரியைகளால் மட்டுமே பற்ற முனைந்து. சர்வ ஜீவ சமபாவனை இல்லாதோர், அன்பும் சிவமும் வேறென்ற அஞ்ஞானத்தில் மூழ்குவர். இத்தகைய சமபாவம் உருவானதும் அன்பும் சிவமும் பிரிக்க முடியாதவை என்ற ஞானத்தை அடைவர். இத்தகைய பேருணர்வைத் தழுவியோர் அன்பே வடிவாகி தாமே சிவமாகி விடுவர்.


திருவாய்மொழி


நம்மாழ்வார்


திருவாய்மொழியை எமக்கு அருளிய நம்மாழ்வர் இணையற்ற மகாகவி ஆவார். இவரது காலம் 9ம் நூற்றாண்டு. இவர் பிறந்தது பாண்டிநாட்டின் திருக்குருககூர் என அழைக்கப்படும் ஆழ்வார் திருநகரில். இவரை காரிமாறன், சடகோபர், வகுளாபரணன், பராங்குசன் என்ற பெயரில் அழைப்பர்.


(ஏழாம் பத்து)


என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை, ஆதியாய்
நின்ற என் சோதியை, என் சொல்லி நிற்பேனோ?



காலமெல்லாம் நான் உய்ந்து பிழைக்கும்படி என்னைத் தன் அடிமையாய் அவன் மீட்டுச்சென்றான். ஒவ்வொரு நாளும் தன்னைப்போல என்னை துhயோனாக்கி தனக்குள் சேர்த்துக் கொண்டான். என்னைக் கொண்டே இனிய தமிழில் தன்னை பாடிக்கொண்டான் எம்பிரான். இப்படிப்பட்ட எனது இறைவனை, என்னை ஜோதி ஆக்கிய ஜோதியை நான் என்ன சொல்லி துதிப்பேன்.


பெருமாள் திருமொழி


குலசேகர ஆழ்வார்


சேரர் அரசர் வழி வந்தவர். பிறந்தது திருவஞ்சைக்களம். தமிழ் தவிர சமஸ்கிருதத்தில் முகுந்தமாலை என்ற நூலை இயற்றியவர். இவர் 9ம் நூற்றாண்டு காலத்தவர்.



(ஆய்ச்சியர் கூற்று)


தாய்முலைப் பாலில் அமுதிருக்கத்
தவிழ்ந்து தளர் நடைஇட்டுச் சென்று
பேய் முலைவாய் வைத்து நஞ்சையுண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப
யான்விட வந்த என்துhதியோடே
நீமிகு போகத்தை நன்கு உகந்தாய்!
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே



யசோதையின் முலைகள் சுமந்த அமுதப்பாலை குடியாதபடி தவழ்ந்து சென்று அரக்கி பூதகியின் நஞ்சு தடவிய முலை சுவைத்து பால் குடித்த பித்தன் உன்னை எல்லோரும் ஏசினர். அந்தக் குணம் உனக்கு இன்னும் நீங்கவில்லை போலும். நான் உனக்காக காத்திருக்க. நான் அனுப்பிய துhதுப்பெண்ணை புணர்ந்தாயே. இதுவும் உன் குறும்பு செய்கைக்கு ஏற்றது போலும்.


பெரிய ஆழ்வார் திருமொழி



பெரியாழ்வார்


இயற்பெயர் விஷ்ணுசித்தர். பிறந்த ஊர் வில்லிபுத்துhர். காலம் 9ம் நூற்றாண்டு. மகாகவியாக ஆண்டாளை எடுத்து வளர்த்தவர். இவரது பாசுரங்களின் கவிதைப் போக்கு, கண்ணனுடனான இவரது கொஞ்சல், கெஞ்சல்கள் யாவும் தனி அழகு பெற்றவை.



புறம் புல்கல்


வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க-
மொட்டு நுனையில் முளைகின்ற முத்தேபோல்-
சொட்டுச் சொட்டு என்னைத் துளிக்க துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்



இந்திர நீலமணிபோன்ற விதைகளும், அவற்றுக் மேல் மலர்ந்த மாணிக்க மொட்டுப் போன்ற குறியும், குறியின் நுனியிடத்தே ஒளி பொருந்திய முத்துக்கள் முளைத்தாற் போல துளிர்க்கும் சிறுநீர், சொட்டுச் சொட்டாய் சிந்த நடந்து வந்த என் குழந்தை. என் கோவிந்தன். என் பின்புறமாய் வந்து என்னை முதுகோடு புல்லித் தழுவுவான்.


நாச்சியார் திருமொழி


ஆண்டாள்


9ம் நூற்றாண்டு காலத்தவர். பெரியாழ்வாரால் நந்தவனத்தில் கண்டெடுத்து வளர்க்கப்பட்டவள். இவள் திருப்பாவை மிகப் பிரசித்தி பெற்றது என்றாலும் நாச்சியார் திருமொழியே இவளது மிகச்சிறந்த படைப்பு


கண்ணன் என்னும்
    கருந் தெய்வம்
காட்சி பழகிக்
    கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்-
    தால் போலப்
புறம் நின்றழகு
    பேசாதே,
பெண்ணின் வருத்தம்
    அறியாத
பெருமான் அரையில்
    பீதக
வண்ண ஆடை
    கொண்டென்னை
வாட்டம் தணிய
    வீசீரே!


கரிய நிறத்தோன் கண்ணனையே என் மனக்கண்ணில் கண்டு தவித்துக் கிடக்கின்றேன். நீங்களோ துhரத்தே நின்று என் காதில் படும்படி ஏளனம் பேசுகின்றீர். பிரிவென்னும் என் மனப் புண்ணில் உங்கள் ஏளனம் புளியாய் காந்துகிறது. நீங்கள் பெண்களா?? பெண்ணின் வருத்தம் அறிய மாட்டீரா.?? போங்கள், கண்ணன் உடுத்தியிருந்த ஆடையைப் கொண்டு வந்து அந்த ஆடையால் விசிருங்கள். அந்த திருமேனி படிந்த ஆடையின் காற்று பட்டு என் வாட்டம் நீங்கட்டும்.


திருமாலை


தொண்டரடிப் பொடியாழ்வார்


பிறந்தது சோழநாட்டின் திருமண்டங்குடி. சோழியபிராமண குலம். இயற்பெயர் விப்ர நாராயணர். காலம் 8ம் நூற்றாண்டு. ஒரு தாசியின் வலையில் சிக்கி எம் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு தொண்டரடிப் பொடியாழ்வார் ஆனார்.



திருப்பாணாழ்வார்


சோழநாட்டின் உறையூரில் பாணர் குடியில் பிறந்தவர். தாழ்த்தபட்டவரான இவர் வெகுதுhரத்திலிருந்தபடி அரங்கன் கோவிலின் கோபுர தரிசனம் செய்து பாடி வந்தவர். லோக சாரங்கன் என்ற தலைமை அர்ச்சகர் இவர் வழியில் நிற்பது கண்டு விலகச் சொன்னார். இவரோடு வந்தவர்கள் வீசிய கல் ஆழ்வார் நெற்றியில் பட்டு இரத்தம் வர கோயிலில் அரங்கன் நெற்றியிலும் இரத்தம் பெருகிற்று. அதன் பிறகு ஆழ்வார் சந்நிதியை அடைந்து ‘அமலனாதி பிரான்’ என்று தொடங்கும் பாசுரம் பாடினார்.


பெரிய திருமொழி


திருமங்கையாழ்வார்


சோழ தேசத்தின் திருவாலி நாட்டில் உள்ள திருக்குறைக்காலுhரில் பிறந்தவர். சோழனிடம் படைத்தலைவனாக இருந்தவர். காலம் 9ம் நூற்றாண்டு. மன்னனுக்கு தரவேண்டிய கப்பத்தை வைஷ்ணவ அடியாருக்கு அன்னதானம் செய்து மன்னனால் சிறைப்பட்டு அரங்கன் அருளால் மீண்டவர்.



பெருங்கதை


கொங்குவேளிர்


குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் எழுதப்பட்ட பிருகத்கதா என்ற நூலை  அடிப்படையாகக் கொண்டு சமஸ்கிருதத்தில் துர்விநீதன் ஒருநூலை எழுதினார். அந்த வடமொழிநூலே கொங்குவேளிர் இயற்றிய இக்காவியத்தின் முதல்நூல். கொங்குவேளிர் கொங்குநாட்டு விசயமங்களம் என்ற ஊரின்  வேளாள குல சிற்றரசன் என்று கருதப்படுகின்றார்.இவர் சமண மதத்தினர். காலம் ஏழாம் நூற்றாண்டு. இந்த நூலின் முதலும் முடிவும் கிடைக்கவில்லை.


முத்தொள்ளாயிரம்


சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று வேந்தர்களையும் 2700 பாடல்களில் சிற்பிக்கும் நூல்். இந்த நூல் காலத்தால் அழிய அதிலிருந்த 109 பாடல்கள் மட்டும் தொகை நூலான புறத்திரட்டில் திரட்டப்பட்டுள்ளன. இந்நூலின் காலம் 6ம் நூற்றாண்டு என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டு என்று சிலரும் வாதிடுவர். திரட்டப்பட்ட பாடல்கள் 1905ம் ஆண்டு செந்தமிழ் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 



போரகத்துப் பாயுமா!
    பாயாது, உபாயமாய்
ஊரகத்து மெல்ல
    நடவாயோ - கூர்வேல்
மதவெங் களி யானை
    மாறன் தன் மார்பம்
கதவம் கொண்டு யாமும்
    தொழ?


ஏ குதிரையே! போர்க்களத்தில் பாண்டியனைச்சுமந்து புயல் வேகத்தில் பாய்வது போல இங்கும் ஓடாதே. ஊருக்குள் நீ மெல்ல மெல்ல நடந்து வா. அப்போதுதான் மதயானை போன்ற மன்னன் மாறனின் பேரழகை நின்று நிதானமாக இரசித்து மகிழ்ந்து தொழ முடியும். பைய நட குதிரையே… பைய நட…



நந்திக் கலம்பகம்


சிற்றிலக்கியப் பிரவுகளில் ஒன்று. பதினெட்டு உறுப்புக்களைக் கொண்டது. மிகப் பழமையான கலம்பகம். கி.பி 847 முதல் 872 வரை ஆண்ட பல்லவன் மூன்றாம் நந்தி வருமன் மீது பாடப்பட்டது. கலம்ப நூல்களுள் இதுவே முதல் நூல் எனப்படுகிறது.

பல்லவர் காலம்









பல்லவர் காலம்
    கிபி ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியோடு முடிந்ததாக கூறிய சங்கமருவிய காலத்திற்கும் கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த சோழராட்சிக் காலப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலம் எனப்படும்
பல்லவர் என்பவர் தமிழ் நாட்டிற்கு வடக்கே சாதவாகன வமிசத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்தில் தம் ஆட்சிக்குட்பட்டிருந்த சில   மாகணங்களுக்குத் தலைவராயிருந்து வந்த வகுப்பினர் . சாதவாகனப் பேரரசு நிலை தளரவே பல்லவர்  தாம் தலைமை வகுத்த மாகாணங்களுக்கு தாமே அரசாகிப் பிறநாடுகளை ஆட்சிபுரிய தொடங்கினர்.
    களப்பிரரை வென்ற சிம்ம விஷ்னு(கிபி 557-615) காலம் தொடக்கம் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன்  (கிபி 850-882) வரை ஏறக்குறைய மூந்நூறு ஆண்டுகளுக்குத் தமிழ் நாட்டில் நிலை பெற்றிருந்தது அக்காலப்பகுதியை பல்லவர் காலம் என்பர்
    ..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
சமயநிலை
    சமயம் சம்பந்தமான தோத்திரப்பாடல்களே பல்லவர் ஆட்சிக் காலத்து தமிழிலக்கிய வரலாற்றில் விசேடமாக குறிப்பிடத்தக்கவை ஆகவே அக்காலத்து இலக்கியப்போக்கினை அறிந்து கொள்வதற்கு அக்காலத்து சமயநிலையினை பற்றி ஒரளவாயினும் அறிந்து கொள்ளவேண்டும்.

    சங்கமருவிய காலப்பகுதியின் ஆரம்பத்தில் ஒன்றோடொன்று பகைமை பாராட்டாது வளர்ந்து வந்த  சைவம்,வைணவம,;சமணம்,சாக்கியம் ஆகிய நால்வகைச் சமயங்களும் இவற்றில் சமண சமயம் இறுதிக்காலப்பகுதியில் முதன்மை பெற்றது
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
    கல்வி அறிவிலும் தவவொழுக்கத்திலும் சிறந்து விளங்கிய சமணர்கள் பள்ளிகூடங்களை அமைத்தும்,கல்விகற்பித்தும்,அறத்தைப்போதித்தும் பிரசார நூல்களை இயற்றியும் மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.
...............................................................................................................................................................................................................................................................................
    அவை அரசர் மனதையும் வேகமாக கவர்ந்தன அதனால் மக்களையும் கவர்ந்தது  உம் : பல்லவ அரசன் மகேந்திர வர்மனும்,பாண்டிய அரசன் நின்ற சீர் நெடுமாறனும்
    சிவனுக்கும் திருமாலுக்கும் அக்காலப்பகுதியில் கட்டப்பட்ட கோவில்கள் யாவும் செங்கல்லாலனவை அவற்றை போற்ற யாரும் இல்லாமையினால் அவை விரைவில் அழியத்தொடங்கின.
    தமிழ் நாட்டு அரசர்களுள் மகேந்திர வர்மனைத் திருநாவுக்கரசரும்,
நின்றசீர் நெடுமாறனை திருஞான சம்பந்தரும் சைவராக்கினர்.
............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................ ...............................................................................................
    சமணத்தை எதிர்த்து போராடியபோது ஒன்றாக நின்ற சைவம் வைணவம் . சமணம் வலிமை இழந்ததும் தமக்குள் பகையை ஏற்படுத்தின அவை கூட இலக்கிய.சமய வளர்ச்சிக்கு காரணமாயின.
இலக்கியப்பண்பு
    தமிழ் நாடு கலை வளமும் பெற்று விளங்கிய காலம் பல்லவராட்சிக்காலமாகும்
    நாடெங்கும் பல மடங்கள் கட்டப்பட்டது அவை துறவிகளுக்குத் தங்குமிடமாகவும்  திக்கற்றவர்களுக்கு புகலிடமாகவும் மாணவர்கள்  உண்டியும் உறையும்  கொடுத்து கலை பயிலும் இடமாகவும் காணப்பட்டது
    திருஞாணசம்பந்த சுவாமிகள் முதலிய சைவப்பெரியார்கள் சிவனடியார்களுடன் ஊர்கள் தோறும் சென்று தங்கியிருந்து சமயத் தொண்டு செய்வதற்கு அக்காலத்தில் இருந்து சைவ மடங்கள் பெரிதும் உதவின .
    சிறிது சிறிதாக தமிழ் இலக்கியங்களில் வடமொழியிலக்கியப் போக்குத் தழுவுதலைப் பல்லவர் காலத்திலெழுந்த இலக்கியங்களில் காணமுடியம்
    மகேந்திர வர்மன் முதலான பல்லவ அரசர்கள் வடமொழிப் புலவாகளை பெரிதும் போற்றினர்
    வடமொழி தமிழ் நாட்டில் பெருமதிப்பு பெற்று இருந்தது அக்காலப்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் வடமொழிக்கருத்துக்களைப் அதில் உள்ள இதிகாசப் புராணக் கதைகளையும் அமைத்துப் செய்யுள் படைத்தனர்.
    சொற்களையும் கருத்துக்களையும், இலக்கணங்களையும் யாப்பு அமைதிகள் என்பன தமிழில் இடம் பெறத்தொடங்கின.
    தமிழுக்கு சிறப்புக்குரியதும் சங்கமருவியகாலத்தில் பெருவழக்காகவும் இருந்த வெண்பா யாப்பு பின்தள்ளப்பட்டு பல்லவர் காலத்தில் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாயுள்ள விருத்தப்பாவினையும் வேறு சில செய்யுள் வகையினையும் போற்றத் தொடங்கினர்
    வினாவுக்கு விடையைப் போன்று  சொற்சுருக்கமும் பொருட் செறிவுள்ள வெண்பாயாப்பு ஒழுக்க நெறிகளைக் கூற சிறந்தது .  
இறைவனிடம் அடியவர் கொண்டுள்ள பக்திப் பெருக்கை  புலப்படுத்துவதற்கு விருத்தம் சிறப்பானது
    காரைக்கால் அம்மை திருவந்தாதியை  வெண்பாவில் பாடினார் இதில் பக்கிப் பெருக்கு மிகுதியாக காணப்படுகின்றது.
    காரைக்கால் அம்மையாரைப் போல யாராலும் வெண்பாவில் பக்தி பாட முடியவில்லை.
    வெண்பா முழுமையாக ஒழிக்கப்படவில்லை உம்: பாரதவெண்பா (இதிகாசம்)
    வடமொழியைப் பின்பற்றியதனால்  செய்யுள் இலக்கணம் கூற வேண்டிய நிலையில் யாப்பு இலக்கண நூல்கள் இக்காலத்தில் தோன்றின
    பக்தி இலக்கியம் தமிழுக்குரிய பெரும் சிறப்பாகும்
    இக்காலப்பக்தி இலக்கியத்தை இரண்டு வகைப்படுத்தலாம்  
தனித்தனிப் பதிகம்  , பிரபந்த பதிகம்
    பிரபந்தங்களிலே பாத்திரப் அமைத்தல் ,மனோபாவங்களை கூறல் தம் பக்தியை ப்பாடுதல்
    பெரும்பாலான பிரபந்தங்கள் அகத்திணை சார்ந்தவை 
    சிறுபான்மையான தனிப்பதிகங்கள் அகத்திணை சார்ந்தவை
    புறத்திணைக்குரிய செவியறிவுறூஉ  முதலியதுறைகளைப் பின்பற்றி தனிப்பதிகம் பாடப் பெற்றது,
    கைக்கிளை , பெருந்திணை  அதிகம் கையாளப்பட்டது
    பதிகம் என்பது பத்துப்பாக்களைக் கொண்டுள்ளது  பதினொரு பாக்களைக் கொண்டுள்ள பதிகங்களும் உள்ளன. அவ்வாசிரியர்கள் வேண்டியவாறு செப்பம் செய்து தம் உள்ளக் கருத்தினை ,உணர்ச்சிகளையும் தெளிவாக புலப்படுத்தினர்
உம் : அப்பர் சிறிய பதிகத்தில் தொடங்க மாணிக்கவாசகர் பெரிய பதிக அமைப்பில் பாடினார்.
 
    உலகியற் காதல் தெய்வீக காதலாக உருவெடுத்தது
அகத்திணைப் பொருளில் அமைந்த பக்திப் பாடல்கள் பெரும்பாலும் தலைவி கூற்றாகவும் தோழி கூற்றாகவும் செவிலி கூற்றாகவும் அமைந்தது. 
    உலகியற் காதலாகிய அன்பினைந்திணைதான் கவிதைப் பொருளாக அமைய வேண்டும் என்பது தமிழ் மரபாகும் அம்மரபு இக்காலப்பகுதியில் வெளிப்படுகின்றது. உம் : திருச்சிற்றம்பலக் கோவை
அரசர்களின் வீரச்செயல் முதலியவற்றைப் பாராட்டி கூறுவதற் பொருட்டு அகத்திணை பொருள்  கருவியாக கொள்ளப்படடுள்ளதை அறியலாம்.
உம்: பாண்டிக்கோவை..................................................................................................................
முத்தொள்ளாயிரம்............................................................................................................... வடமொழி புராணங்களை நாயன்மார்களும் .பாகவதம்,இராமாயணம் மகாபாரத்தை ஆழ்வாரும் பின்பற்றினர்.
உம் : தீக்கோலம் ,தசரதன் புலம்பல் தேவகிபுலம்பல் கண்ணன்லீலை
பாமர மக்களிடையே வழங்கப்பட்டு வந்த சில நாட்டுப்பாடல் வகைகளைத் தழுவிப் பதிகங்கள் தோன்றின மக்கள் வழக்கிலிருந்த பாடல் முறையில் பதிகங்கள் காணப்பட்டன எனவே அவ்முறையில் தேவாரங்கள் படைக்கப்பட்டன
உம் :   திருவாசகத்திலுள்ள திருவம்மானை , திருச்சாழல் ,திருப்பொன்னூசல்   உம் : பெரியாழ்வார் பாடிய கண்ணன் குழல்வாரர்க் காக்கையை அழைத்த பதிகம்
    ஓசை நயம் மிக்க பாடல் வடிவமாக இவை காணப்பட்டன உம் : சுந்தரர் பாடல்
   
    மன்னர்; வடமொழி புலவரை ஆதரித்தனர். அதனால் தமிழ் புலவர் வெறுப்படைந்தனர் இதனால் உலகியலை பாட முடியவில்லை.

    நாயன்மார். ஆழ்வார்  என்பதன் பொருள்
    நாயன்மார்
    ஆழ்வார்
    நம்பியான்டார் நம்பி
நாதமுனிவர் :
    தொகுப்பின் சிறப்பு :
    சமண பௌத்த முனிவர்கள் கொண்ட புறவேடங்களில் ஒருவன் பெரும்பயன் யாது மில்லை  இறைவனை நாடோறும் நினைந்து நைந்து உள்ளங் கசிந்துருகினாலன்றி அவனருளை பெறமுடியாது என்பதை தம் மக்களுக்கு தம் வாழ்க்கை மூலம் எடுத்துக்காட்டினர்

    துறவறம்பூண்டு பழுத்தநுபவம் வாய்க்கப்பெற்றவரின் பாடல்களில்

    தங்கு தடையின்றி திருநாமங்களை ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கிச் சொல்லும் மரபு திருத்தாண்டகத்தில் காணலாம் இதில் கவிதைப் பெருக்கு அதிகமாக காணப்படுகின்றது

    திருநாவுக்கரசர் பாடல்களில்



    திருஞானசம்பந்தர் பாடல்களில்;
    சுந்தரர் பாடல்களில்; : அப்பர் சம்பந்தர் பாடல்களை சுந்தரர் நன்று கற்றிந்தார்,
    மாணிக்கவாசகர் பாடல்களில் : தாயை நினைத்தழும் பிள்ளையைப் போல மனங்கலங்கி பாடிய பாடல்கள் சிறப்பானவை
    இறைவன் மீது கொண்ட பேரின்பக் காதலை தலைவன் தலைவி என்னும் இருவருக்கும் இடையேயுள்ள  உலகியற் காதலோடு இணைத்துக் காட்டுவதில் ஒப்புயர்வு அற்று விளங்கும்
    திருச்சிற்றம்பலக் கோவையார்
    திருமூலர் : முக்காலம் உணர்ந்த முனிவராகிய திருமூலநாயனார் சித்தர் கணத்துட் சிறந்தவர்
    நாக் கொண்டு மானிடம் பாடாத 'திருமிழிசையாழ்வார்' இவரை பக்தி சாரர் என அழைப்பர்.: 'என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்று இருந்தும் நெடுமாலை '

    'பச்சை மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரறே ஆயர்தம் கொழுந்தே ....'
    ' இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே ,.............' .........................................................................................................
    திருப்பாவையையும் திருவெம்பாவையையும்' தமிழ் நாட்டுப் பெண்கள் போற்றினர்
    வரிப்பாடல்,பரிபாடல் என்பனவற்றின் ஊடாக வளர்ச்சி பெற்றவை விருத்தப்பா.
    முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன் திருவாரூர்;பதிகத்தில் அப்பர்
    சுந்தரர் உம்மையே நம்பியிருப்பவரை மோசம் செய்கின்றீரே' நகச்சுவை
    தூது கடவுளிடம் தூது அனுப்புதல் சம்பந்தர் சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு பால்'
    உருவம் கொடுத்து பாடும் முறை
    அந்தாதி மாலை. பதிகம் வளர்ச்சி கண்டன
    தாழிசை துறை விருத்தம் போன்ற பாவினங்கள் பெருவழக்காகக் கையாளப்பட்டது
    கலம்பகம் மடல் எழுகூற்றறிக்கை மறம் முதலிய பிரபந்தங்கள் ஆரம்பமாயின


பல்லவர் கால இலக்கியவகைப்பாடு

சைவ இலக்கியம்
    தேவாரம்
    திருவாசகம்
    திருவிசைப்பா
    திருப்பல்லாண்டு
    திருமந்திரம்
திருவெம்பாவை 
பொன்வண்ணத்தந்தாதி
    திருக்கைலாயஞானவுலா
    திருச்சிற்றம்பலக்கோவையார்
வைணவஇலக்கியம்
    திருமாலை
    திருப்பள்ளியெழுச்சி 
    திருவெழுக்கூற்றிருக்கை 
    திருக்குறுந்தாண்டகம்
    பெரியதிருமடல்
திருப்பாவை
திருவிருத்தம்
    திருவாசிரியம்
    பெரியதிருவந்தாதி
    திருவாய்மொழி 
    பெரியதிருமொழி
    பெரியாள்வார் திருமொழி
    நாச்சியார்திருமொழி
    பெருமாள் திருமொழி
பிறநூல்கள்
    சங்கயாப்பு
    பட்டியல் நூல்
    பெருங்கதை 
    நந்திக்கலம்பகம்
    பாரதவெண்பா
    முத்தொள்ளாயிரம்
    பாண்டிக்கோவை
வினாத் தொகுதிகள்
பல்லவர் கால இலக்கியப் பண்பு முன்னைய காலப்பதி இலக்கியத்தை எவ்வாறு பின்பற்றின?  
பின்னைய காலப்பகுதி இலக்கியத்துக்கு எவ்வாறு வழி வகுத்தது?
உம் :
சங்ககாலம் : ......................................................................................................................
சங்கமருவிய காலம் :.............................................................................................................
பல்லவர் காலம் :..................................................................................................................
சோழர் காலம் :...................................................................................................................
நாயக்கர் காலம்: .................................................................................................................

வடமொழி இலக்கியங்கள்
பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.


தமிழிலக்கியங்கள்
பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே

கடந்த கால வினாக்கள்
1.    .பல்லவர்கால இலக்கிய மரபின் செல்வாக்கு சோழப் பெருமன்னர் காலக் காவியங்களிலே காணப்படுமாற்றை விளக்குக? (2005)
2.    .பல்லவ மன்னர்கள் காலத்துப் பக்தி இலக்கியங்களின் பண்புகளைக் கூறுக? 
3.    பல்லவர் காலத்துக்குப் பின்னர் தமிழில் எழுந்த சமய இலக்கியங்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக? (2003)
4.    .பல்லவர் கால இலக்கியப் பொருள் மரபினை விளக்குக?
5.    .சங்கமருவிய கால இலக்கியங்களுக்கும் பல்லவர் கால இலக்கியங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
6.    .பல்லவர் காலப்பக்திப் பாடல்களின் முக்கிய பண்புகளைத்தருக?
7.    சோழப்பெருமன்னர் கால இலக்கிய வளர்ச்சிக்கும் பல்லவர் காலம் எவ்வௌ; வகைகளில் உதவியதென்பதை எடுத்துக் காட்டுக? (1997)
8.    பல்லவர் காலத்துப் பக்திப் பாடல்களிலே சோழர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்ளின் தோற்றுவாய்களை கானலாம்' இக்கூற்று பொருந்துமோவென ஆராய்க ?
9.    பல்லவர் காலத்துப் பக்திப் இலக்கியங்களின் சிறப்பியல்புகளை கூறுக?
10.    .பல்லவர் கால இலக்கிய வளர்ச்சிக்கு ஆண்டாள் ,மாணிக்கவாசகர் ஆற்றிய பங்களிப்பினை மதிப்பிடுக?
11.    பல்லவர் கால பக்தியாளர்களுக்கு காரைக்கால் அம்மையார்,முதல் மூன்று ஆழ்வார்கள் எவ்வாறு வழிகாட்டினார்?
12.    பல்லவர்கால இலக்கியங்களில் இயற்கை வர்ணனைகள் மிகுந்து காணப்படுகின்றது?

நன்றி
அன்பே சிவம்