Sunday, April 7, 2013

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
பெப்ரவரி 21  – சர்வதேச தாய்மொழி தினம்
மார்ச் 8     – சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 21    - இனப்பாரபட்ச ஒழிப்பு தினம்
மார்ச் 22    - உலக நீர் தினம்
மார்ச் 23    – உலக வளிமண்டலவியல் தினம்
ஏப்ரல் 7    – உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22 - உலக புவிதினம்
ஏப்ரல் 23   – உலக புத்தக தினம்
மே 3      – உலக பத்திரிகை சுதந்திர தினம்
மே 15     - உலக குடும்ப தினம்
மே 17     – உலக தொலைத்தொடர்பு தினம்
மே 22     - உயிரின பல்வகைமை தினம்
மே 31     – உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்
ஜுன் 4     – சர்வதேச சிறுவர் தினம்
ஜுன் 5    – உலக சுற்றாடல் தினம்
ஜுன் 17   – காடுகள் தினம்
ஜுன் 20    – உலக அகதிகள் தினம்
ஜுன் 26    – போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
ஜுலை 11   – உலக சனத்தொகை(குடித்தொகை) தினம்
ஆகஸ்ட் 9   – ஆதிவாசிகள் தினம்
ஆகஸ்ட் 12   – சாவதேச இளைஞர் தினம்
செப்டம்பர் 16 - சர்வதேச ஓசோன் தினம்
ஒக்டோபர் 1  - சர்வதேச முதியோர் தினம்
ஒக்டோபர் 5  – உலக ஆசிரியர்கள் தினம்
ஒக்டோபர் 9  – உலக தபால் தினம்
ஒக்டோபர் 10  – உலக மனநல திம்
ஒக்டோபர் 16  -  உலக உணவு தினம்
ஒக்டோபர் 17  – வறுமை ஒழிப்பு தினம்
ஒக்டோபர் 24  – ஐக்கிய நாடுகள் தினம்
ஒக்டோபர் 24  – உலக அபிவிருத்தி தகவல் தினம்
நவம்பர் 16  – சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
நவம்பர் 26  – ஆபிரிக்க கைத்தொழில் மயமாக்கல் தினம்
நவம்பர் 21  – உலக தொலைக்காட்சி தினம்
நவம்பர் 25  – பெண் வண்முறை எதிர்ப்பு தினம்
டிசம்பர் 1  – சர்வதேச எயிட்ஸ் தினம்
டிசம்பர் 2  – அடிமைத்தன ஒழிப்பு தினம்
டிசம்பர் 3  – வலது குறைந்தோர் தினம்
டிசம்பர் 10  – மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 18  – சர்வதேச இடப்பெயர்வாளர் தினம்

நீர்மாசடைதல்

 நீர்மாசடைதல்

நீரானது அதன் பௌதீக. இரசாயண உயிரியல் அம்சங்களில் மாற்றமடைகின்றபோது  நீர் மாசடைதல் எனப்படுகின்றது. அதாவது ஏரிகள் ஆறுகள்இ கடல்கள்இ நிலக்கீழ் நீர் முதலிய நீர் நிலைகளில் காணப்படும் நீர் மனித நடவடிக்கைகளால் அதன் தூய்மையை இழந்து குறிப்பிட்ட பிரதேச் சூழல்தொகுதியின் பயன்பாட்டிற்கு உதவாதமுறையில் மாற்றமடைகின்ற தன்மையினை நீர் மாசடைதல் எனக் குறிப்பிடலாம்.

இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பஇ அல்காப்பெருக்கம்இ புயல்இ நிலநடுக்கம்இ வரட்சி போன்றவற்றாலும் நீரின் தரத்திலும் அதன் சூழலியல் நிலைமையிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. இருந்த போதிலும் மிக அதிகளில் மனித செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு மனித பயன்பாட்டிற்கு உதவாமலும்இ உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலை நீர் மாசடைதலினால் ஏற்படுகின்றது.

நீர் மாசடைதலை ஏற்படுத்தும் மாசுக்களின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஓரிட மூல மாசடைதல். அதாவது ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதினால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகின்றது. இரண்டாவது பரந்த மூல மாசடைதல். அதாவது இது ஒரு பரந்த இடப்பரப்பிலிருந்து சிறிது சிறிதாக சேகரிக்கப்படும் மாசுக்களால் உருவாகின்றது.

1)                  நீர் மாசடையும் வழிமுறைகள்:-

•           விவசாய நடவடிக்கைகள் - விவசாய நடவடிக்கைகளினால் பல்வேறு விதத்தில் நீர் மாசாக்கம் அடைகின்றது. விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள்இ பீடை நாசினிகள்இ மற்றும் இரசாயண உரங்கள் என்பவற்றின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட நிலத்தினூடாக நீரானது வெள்ளக் காலங்களில் பாய்ந்து செல்லும்போதோ அல்லது நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கூடாக ஆறுகளில் இந்த நீர் கலக்கின்றபோது அத்தகைய மாசுக்களை கழுவிசேர்த்த வண்ணமே நகர்கின்றது. மேலும் இரசாயண கிருமிநாசினிஇ பீடை நாசினி என்பவற்றின் கொள்கலன்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் விடப்படுகின்றபோதும் நீர் மாசடைவதற்கு வழிவகுக்கின்றது. வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை விவசாய நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதனால் இத்தகைய மாசாக்கம் இடம்பெறுகின்றது. குறிப்பாக இந்தியாஇ இலங்கை முதலிய நாடுகளைக் குறிப்பிடலாம்.

•           கைத்தொழில் நடவடிக்கைகள் - இன்று உலகின் அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழிலாகவும்இ அதிக தொழில்வாய்ப்பை உருவாக்கின்ற ஒரு துறையாகவும் கைத்தொழில்துறை காணப்படுகின்றது. கைத்தொழில்துறையில்பல்வேறு விதத்தில் வெளியேறும் கழிவுகள் நீர்நிலைகளில் சேர்க்கப்படுவதனால் நீர் நிலைகள் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயணப் பொருட்கள் தயாரித்தல்இ இலத்திரணியல் கழிவுகள்இ உணவு பதனிடல் கழிவுகள்இ மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களைக் குளிரவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு  பின்னர் நீர்நிலைகளில் விடப்படும் சூடானநீர் போன்றவற்றின் காரணமாக நீர்நிலைகள் மாசடைகின்றன.

•           நகராக்கம் - நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப்பகுதிகளில் இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமது வீடுகளில் செரும் கழிவுகளை அயலிலள்ள நீர் நிரைகளில் வீசிவிடுகின்றனர். மேலும் நகரப்பகுதிகளில் இருந்து மிதமிஞ்சிய அளவில் சாக்கடைகளுக்கூடாகப் போய்ச் சேரும் மாசுக்களாலும் நீர் மாசடைகின்றது. இவற்றை விட நகரப்பகுதிகளில் பெரும்பாலும் அருகருகில் அமைக்கப்பட்டிரக்கும் மலசலகூடக்கழிவகளினாலும் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது. குறிப்பாக தரைக்கீழ் நீhவளம் கொண்ட கரையோர நகரப் பிரதேசங்களில் இந்நிலைமையினை அவதானிக்கலாம்.

•           கண்டல் தாவரங்கள் மற்றும் முருகைக்கற்பாறைகளை அகற்றுதல் - கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் கண்டல்தாவரங்களும் முருகைக்கற்பாறைகளும் உவர்நீர் தரைக்கீழ் நீருடன் சேர்ந்துவிடாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இவற்றை அகற்றுகின்றபோது அல்லது அழிக்கின்றபோது தரைக்கீழ் நீருடன் நேரடியாக உவர்நீர் கலந்து தரைக்கீழ் நீரில் உவர்த்தன்மையை அதிகரிக்கின்றது.

•           எண்ணெய்க்கசிவு- ஏரிகளுக்கூடாக அல்லது கடலிலே பயணம் செய்கின்ற கப்பல்களிலிருந்து எண்ணெய்க்கசிவகள் ஏற்படுகின்றபோதும் நீர் மாசடைகின்றது. அமெரிக்காவில் பேரேரி போன்ற ஏரிகள் போக்குவரத்திற்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினூடாகப் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து எண்ணெய் கசிகின்றபோது நீரின் தன்iயை மாற்றியமைக்கின்றது. கடலிலெ பயணம் செய்யும் கப்பல்களினாலும் மற்றும் எண்ணெய் கிணறுகளின் கசிவினாலும்  கடற்கரை நீர் மாசடைகின்றது. குறிப்பாக 2010 இல் மெக்சிக்கோ குடாவினுள் எற்பட்ட பாரிய எண்ணெய் கசிவினால் பெருமளவில் கடற்கரை நீர் மாசடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

•           வெப்பமடைந்த நீர் – நீர்மின்சாரம்இ தொழிற்சாலைகளில் இயந்திரங்களை குளிர்ச்சிப்படுத்துவதற்காக நீரானது பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் நீர்த்தொகுதியுடன் இணைகின்றபோது அந்நீர் வெப்படைந்த நீராக மாற்றமடைகின்றர்து. குறிப்பிட்ட நீரில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை உருவாவதுடன்இ அது வேறோர் நீர்த்தொகுதியில் கலக்கின்றபோதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கரையோரங்களில் அமைக்கப்படுகின்ற அனல் மின் நிலையங்களினால் இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் கடலினுள் விடப்படுகின்றது. இதனால் மீன்வளம் பாதிப்படைவதுடன்இ அயற்சூழலிலும் இது தாக்கத்தை தோற்றுவிக்கின்றது.


2)                  நீர் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள்:-

•           மாசடைந்த நீரை பருகுவதனாலும்இ மாசடைந்த நீர் சூழலில் காணப்படும் போதும் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாசடைந்த நீரைப் பருகுவதனால் வாந்திபோதிஇ வயிற்றோட்டம்இ வயிற்றுளைவுஇ நெருப்புக் காய்ச்சல்இ தைபோயிட்டுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் மாசடைந்த நீர் சூழலில் காணப்படுவதனால் மலேரியாஇ டெங்குஇ யானைக்கால்இ மஞ்சட்காய்ச்சல்இ தைவசுக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

•           நீர் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். நீரில் இரசாயண மாசுக்கள் கலப்பதனாலும்இ நீர் வெப்பப்படுத்துவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதனால் அதனை உட்கொள்ளும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வெப்பப்படுத்திய நீர் நீர்த்தொகுதியுடன் கலப்பதால் உயிரினங்கள் இறப்பதுடன்இ குடம்பிநிலையிலுள்ள பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிவடைகின்றன.

•           ஒரு பிரதேசத்தில் மாசடைந்த நீர் காணப்படுகின்றபோது அப்பிரதேச குடிநீர் வளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சில பிரதேசங்களில் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வளமாகவே நீர்நிலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆறுகள்இ குளங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மாசடைகின்றபோது அப்பகுதி மக்களின் நீர்வளம் மாசடைகின்றது. சில இடங்களில் மலசலக்கூடகுளிகள் அருகருகெ அமைந்திருப்பதனால் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற வகையில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இலங்கையின் பொரும்பாலான நகரங்களில் அதுவும் மட்டக்களப்பில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இவ்வாறு பொருத்தமற்றதாக கிணறுகளில் குடிநீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

•           பயிர்விளைச்சலிலும் நீர்ப்பாசண நடவடிக்கைகளிலும் நீர் மாசடைதலானது பாதிப்பபை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக நீர் உவர்த்தன்மை அடைவதனால் நீரானது பயிர்விளைச்சலைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். யாழ்ப்பாணப் பகுதியில் அதிகளவில் கிணற்றுவழி நீர்ப்பாசணத்திற்காக தரைக்கீழ் நீர் பயன்படுத்தப்பட்டதனால் தற்போது சில பகுதிகளில் நீரின் உவர்த்தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக இது கிணற்றுவழி நீர்ப்பாசணத்தில் இனவரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்;. இதனால் இவ்வாறு நீர்ப்பாசண நடவடிக்கையை நம்பி மேற்கொள்ளப்படுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

•           உணவுற்பத்தி நிறுவனங்களுக்கு மாசடைந்த நீரினால் பெருமளவில் செலவு ஏற்படும். நீரின் துணையுடன் உணவுற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் சில நிறுவனங்களுக்கு இவ்வாறு பாதிப்புகள் எற்படும். குறிப்பாக இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள்இ குடிபாணங்கள் தயாரிக்கம் நிறுவனங்கள்இ கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இவை தமது பொருட்களைச் சுத்ததப்படுத்துவதற்கும்இ கலவையாக பயன்படுத்துவதற்கும் நீரினைப் பயன்படுத்துகின்றன. இதற்கு சுத்தமான நீர் கிடைக்காதபோது சுத்தமாக்கி நீரைப் பயன்படுத்துவதற்கரிய இயந்திரங்களை அதிக செலவில் கொள்வனவு செய்யவேண்டி ஏற்படும்.


3)                  நீர் மாசடைதலைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள்:-

•           நீர் நிலைகள் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்காக தகுந்த நீர்த்தேக்க முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.

•           தகுந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்தையும் கழிவு நீர் அகற்றும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்துதல்.

•           அதிக மாசடைவை உண்டு பண்ணும் கைத்தொழில்களை கட்டுப்படுத்தவதுடன்இ அதற்கு மாற்றுவழிகளை சிறப்பாக நீர் சுத்திகரிக்கும் தொகுதிகளைக் கொண்டதாக அமைத்தல்.

•           விவசாயத்தில் இரசாயண உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அண்மைக்கால்ததில் விருத்தியடைந்துள்ள உயிரியல் தொழில்நுட்பத்துடனான உள்ளீடுகளையும்இ சேதனப் பசளைகளையும் பயன்படுத்துதல்.

•           நகர மற்றும் மக்கள் குடியிருப்புகள் அடர்த்தியாயுள்ள பிரதேசங்களில் முறையான மலசலக்கழிவு வெளியேற்றத்திற்கான பாதாளக் குழாய்களை அமைத்தல்.

•           நீர்பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துதலும் தண்டனை வழங்குதலும்.

•           நீர்வளத்தின் முக்கியத்தவம்இ அது மாசடையும் வழிமுறைகள்இ அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்.

•           சர்வதேச நீர் தினத்தன்று (மார்ச் 22) விழிப்பணர்வு திட்டங்களை முன்னெடுத்தல்.


4)                  இலங்கையில் நீர் மாசடைதல்:-

•           சில தசாப்தங்களுக்கு முன் எமது நாட்டிலுள்ள மேற்பரப்பு நீர்இ மற்றும் தரைகீழ் நீர் மனிதநடவடிக்கைகளுக்கு முழுமையாக பயன்படுத்த முடியுமாக இருந்தது. ஆனால் தற்போது ஆறுஇ நீர் நிலைகள்இ குளம்இ திறந்த நீர் ஊற்றுக்களில் காணப்படும் நீரை பயன்படுத்த முடியாதுள்ளது. நீர் மாசடைவு காரணமாக நீர் அசுத்தமாவதை போன்றே நீரின் தரமும் குறைகின்றது. இயற்கையாக  நீரின் தரம் குறைவடைதல்இ மனித நடவடிக்கை காரணமாக நீர் மாசடைதல் ஆகியன இலங்கையில் நீர் மாசடையும் பிரதான காரணகளாகவுள்ளன.

5)            இலங்கையில் நீர் மாசடையும் வழிமுறைகள்:-

•           கடல்நீர் கலத்தல் - கரையோரப் பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகளின் மூலம் நன்னீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. மழைவீழ்ச்சி குறைவாகக் காணப்படும் காலங்களில் தரைகீழ் நீர்மட்டம் கீழ் இறங்குவதன் காரணமாக உவர் நீர் அவற்றுக்குள் ஊடுருவுகின்றன. புத்தளம்இ கற்பிட்டிப் பகுதிகளில்  ஆழமற்ற கிணறுகளுக்குள் உவர் நீர் கலப்பது இதற்கு உதாரணமாகும்.

•           கழிவுகள் கலத்தல்:- இயற்கையான முறையில் பல்வேறு கழிவுப் பொருட்கள் நீருடன் கலப்பதனாலும் நீர் மாசடைகின்றது. நீரானது மேற்பரப்பு நீராகவும்இ தரைக்கீழ் நீராகவும் வழிந்தோடும்போது விலங்குக் கழிவுகள்இ நுண்ணங்கிகள்இ கனியுப்புக்கள் போன்றன நீருடன் கலந்து மாசடைய வைக்கின்றன.

•           விவசாய நடவடிக்கைகள் மூலம் கிருமிநாசினிஇ களைநாசினிஇ வளமாக்கிகளின் பயன்பாட்டினால் நீர் மாசடைதல்.

•           தூய்மையற்ற வாயு வகைகள் நீரில் கலத்தல். (வாகனப் புகைஇ கைத்தொழிற்சாலைகளின் புகைகள்)

•           கைத்தொழில் கழிவுப்பொருட்கள்

•           இரசாயன கழிவுப் பொருட்கள்

•           வீட்டுக் கழிவுகள் சேருதல்

•           ஆற்று மண் அகழ்தல்

•           களிமண் எடுத்தல்


6)                  இலங்கையில் நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்:-

•           தற்போதைய உலக சனத்தொகையில் 33மூ ஆனோர் அடிப்படைத் தேவைகளுக்குத் தூயநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். 2025 ஆம் ஆண்டளவில் 60 வீதமானோர் நீரைப்பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வர்.

•           எமது நாட்டில் குடிநீர் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாறிவருகிறது. அதிகமான பிரதேசங்களில் மேற்பரப்பு நீரையும் தரைக்கீழ் நீரையும் குடிப்பதற்குப் பயன்படுத்தமுடியாதுள்ளது. (உதாரணம்- யாழ்ப்பாணம்இ அனுராதபுரம்)

•           கழிவுப் பொருட்கள் நீரில் கலப்பதனால் நீர்வாழ் உயிரினங்கள்இ செடி கொடிகள் பாதிப்புக்குஉள்ளாகின்றன.

•           களனி கங்கையில் மணல் அகழ்வதன் காரணமாக ஆற்றுப்படுக்கை ஆழமாகின்றது. இதனால் வறண்ட காலங்களில் அம்பத்தளை நீர் வடிகால் தேக்கம் வரை கடல் நீர் உள்வருகின்றது. இதனால் பாரிய கொழும்புப் பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்புக்குள்ளாகின்றது.


7)         இலங்கையின் நீர்வளப்பாதுகாப்பு:-

•           நீர் வளப்  பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.     1.நீரினை அநாவசியமாக பயன்படுத்தாதிருத்தல் இ  2.நீரினை மாசுபடுத்தாதிருத்தல்.  நீர் வள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

•           வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தும் நீரினைப் பாதுகாத்தல்.

•           குளித்தல்இ பிடவை கழுவுதல்இ  மலசல கூடத்திற்காக பயன்படுத்தும் நீரினை வீணாகப் பயன்படுத்தாது இருத்தல்.

•           பயன்படுத்தும் நீரினை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீளவும் பயன்படுத்தல்.

•           விவசாய நடவடிக்கைகளில் சரியான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.

•           பயிரிடப்படும் பயிர்களின் வகைகளுக்கேற்பஇ தேவையான நீரினை மட்டும் பயன்படுத்தல்.

•           கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தும் நீரினை வீணாக்காது பயன்படுத்தல்.

•           நீர் மாசடைதலை தடுப்பதும் நீர்வளப்பாதுகாப்பில் முக்கியம் பெறுகிறது.

•           நகர் பிரதேசங்களில்இ வாகனம்இ புடவைகளைச் சுத்தப்படுத்தும் நிலையங்களில்நிகழும் நீர் மாசடைதலை தடுத்தல்.

•           விவசாயம்இ கைத்தொழில்களில் நிகழும் நீர் மாசடைதலை தடுத்தல்.

•           மழைநீர் சேகரித்தலை மேம்படுத்தல் - இலங்கையில் உலர் வலயப் பிரதேசங்களில்  நீர் சேகரிக்கக் கூடிய தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இத்தகைய முறைகளை அதிகரித்து மழைநீரினைச் சேகரிப்பதை மேம்படுத்தலாம்.


8)         நீர்வளப் பாதுகாப்பின் எதிர்கால நோக்கு:-

•           அதிக சனத்தொகை வசிக்கும் ஆசியநாடுகளில் நீர் மாசடைதல் ஒரு பொதுப் பிரச்சினையாகவுள்ளது.  உதாரணம் : இந்தியாஇ மலேசியாஇ இந்தோனேசியாஇ சிங்கப்பூர். இந்நாடுகளில் ஆற்றுப்படுக்கைகளைப் பாதுகாக்கும் செயற்றிட்டங்களின் மூலம் தரைமேல் நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணம் : 1977 இல் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடத்தில் முடிவுற்ற சிங்கப்பூர் ஆற்று மற்றும் கலாத் நீர்ப்படுக்கை தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்.

•           இந்தியாவில் கங்கை ஆற்றைச் சார்ந்த ஆற்றுத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்.

•           இலங்கையின் மேற்பரப்பு நீர்இ தரைக்கீழ் நீர் வளத்தைப் பாதுகாக்கும் செயற்றிட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படுல் வேண்டும்.




2012-ல் உலகை உலுக்கிய சம்பவங்கள்

    2012-ல் உலகை உலுக்கிய சம்பவங்கள்
2012-இந்த வருடத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆம் வரலாற்றின் மிக முக்கியமான இடத்தில் 2012 இருக்கும் என்றால் அதில் ஜயமில்லை. இந்த ஆண்டில் உலகம் சந்தித்த சாதனைகளும்இ சர்ச்சைகளும்இ சவால்களும் மிகவும் ஏராளம். 2012 என்றதுமே உலக மக்கள் அனைவரின் மனதிலும் உதித்த எண்ணம் 21.12.2012 அன்று உலகம் அழிந்துவிடும் என்பதுவே.
ஒரு பக்கம் அறிவியல் ரீதியான சான்றுகளும்இ நாசாவின் தகவல்களும் மறுபக்கம் உலக முடிவைக் காட்டும் மாயன் காலெண்டர் என மக்களை சற்று புரட்டித்தான் போட்டன. மிகுந்த சர்ச்சையையும்இ பயத்தையும் ஏற்படுத்திய விடயம் என்றே சொல்லலாம்.
இதுதவிர சிரியாஇ ஈரான் இரகசியமான அணு ஆயுதத்தை தயாரிப்பதுஇ அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்இ புயல்- சூறாவளிஇ பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம்இ தென் சீன கடல் விவகாரம்இ எல்லை பிரச்னைஇ ஆப்கான்- ஈரான்- பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் என அனைத்துமே உலகை அச்சுறுத்தி கொண்டு இருந்தன. எனினும் இதற்கு மத்தியிலும் பல்வேறு சாதனைகளும்இ விஞ்ஞான ரீதியாகஇ தொழில்நுட்ப ரீதியாக மனிதர்கள் அதி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தனர் என்றால் அது மிகையல்ல.
ஜனவரி 18 - வீக்கிபீடியா வேலைநிறுத்தம்
இன்றைய நவீன உலகில் எந்த தகவல்களையும்இ எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் என்ற அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம். இதே நேரத்தில் இணையத்தில் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக தகவல் களஞ்சியமான விக்கிபீடியாஇ ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டது.
.
வீக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்
ஜனவரி 26 - பூமியை தாக்கிய சூரியப்புயல்
உலக அழிவை நினைவூட்டும் விதமாக 2012ம் ஆண்டில் பல்வேறு அரிய கிரகணங்களும்இ சூரியப் புயல்களும் பூமியை தாக்கின. குறிப்பாக ஜனவரி மாதமே பூமியின் வடமுனையை சூரியப் புயல் தாக்கி மக்களை அச்சுறுத்தியது. இதனால் வானில் பிரகாசமான ஒளி தோன்றியதுடன்இ அயர்லாந்துஇ இங்கிலாந்துஇ ஸ்காட்லாந்து மற்றும் நோர்வே போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. இதேபோன்று மார்ச் மாதம் 8ம் திகதியும் மற்றொரு சூரியப்புயல் பூமியை தாக்கியது. இதனால் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
1. பூமியின் வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் பிரகாசமான ஒளி தோன்றியது
2. பூமியை தாக்கியது சூரியப் புயல் (வீடியோ இணைப்பு)
பெப்ரவரி 12 - இசை உலகின் தங்க பெண் மரணம்
பிரபல பொப் இசை பாடகியும்இ ரசிகர்களால் செல்லமாக இசை உலகின் தங்க பெண் என்றும் அழைக்கப்பட்ட ஒய்ட்னி ஹோஸ்டன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில்இ போதைப் பொருளை அதிகளவு உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது. இருப்பினும் இவரது மரணம் ரசிகர்கள் மட்டுமல்லாதுஇ இசைத்துறைக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல பொப் பாடகி ஹூஸ்டனின் இறுதிச்சடங்கு
மார்ச் 04 - ரஷ்யா ஜனாதிபதி தேர்தல்
ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தல்இ விளாடிமிர் புடின் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜனாதிபதியானார். இத்தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பெற்றுஇ புடின் அபார வெற்றி பெற்றார். எனினும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறிஇ எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் செர்ஜி உள்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஇ பின் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: புதின் அபார வெற்றி
ஏப்ரல் 01 - மியான்மர் நாடாளுமன்ற தேர்தல்
2012ஆம் ஆண்டில் மியான்மர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முக்கிய இடத்தை பிடித்தது. ஏனெனில் 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தஇ ஜனநாயகப் போராட்டத் தலைவர் ஆங் சான் சூகி போட்டியிட்டார். இத்தேர்தலில் மக்களின் பேராதரவுடன் ஆங் சாங் சூகி அபார வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன்பின் மியான்மரில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுடன்இ உலக நாடுகளும் மியான்மர் மீதான தடையை சற்று தளர்த்தின.
1. மியான்மர் இடைத்தேர்தல்: ஆங் சான் சூகி வெற்றி
2. ஆங் சாங் சூகி இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

ஏப்ரல் 15 - டைட்டானிக் 100வது நிறைவு தினம்
1514 பேரை பலி கொண்ட டைட்டானிக் கப்பல் மூழ்கிஇ 100 ஆண்டுகள் நிறைவடைந்தது அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக டைட்டானிக் கப்பல் விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்துஇ பயணிகள் கப்பல் ஒன்றில் சவுதாம்ப்டன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் சரியாக அதிகாலை 2.20 மணிக்கு கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
டைட்டானிக் கப்பல் விபத்து: 100ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று அனுசரிப்பு

மே 07 - பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்
பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசியை தோற்கடித்துஇ பிராங்காய்ஸ் ஹோலண்டே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கடந்த 1995ஆம் ஆண்டிற்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் தெரிவான முதல் ஜனாதிபதி என்ற பெருமையை ஹோலண்டே பெற்றார்.
பிரான்சின் ஜனாதிபதியானார் ஹோலண்டே
யூன் 02 - எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை
எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக முபாரக் பதவி விலகினார். இதனையடுத்து இவர் மீது போராட்டம் நடந்த காலகட்டத்தில் 846 பேரை கொன்று குவித்தது உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது. இதில் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர் தவிர மகன்கள் அலாஇ கமால் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 அதிகாரிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
846 பேரை கொன்ற வழக்கு: எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை
யூன் 05 - ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டம்
இந்த ஆண்டில் பிரிட்டன் மட்டுமல்லாது உலகளவில் பெரும்பாலான மக்களின் கொண்டாட்டமாக இருந்தது ராணி எலிசபெத்தின் வைர விழா தான். பிரிட்டன் ராணி எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டுஇ வைர விழா நிகழ்வுகள் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்தன. இவ்விழாவின் ஒரு பகுதியாக பிக் பென் கோபுரத்தின் பெயர் எலிசபெத் கோபுரமாக மாற்றப்பட்டது. மேலும் இளவரச தம்பதிகளான வில்லியம்- கேத் மிடில்டன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
1. ராணியின் வைரவிழா கொண்டாட்டம்: தேம்ஸ் நதிக்கரையில் படகுச்சவாரி
2. பிரிட்டனில் ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியது
ஓகஸ்ட் 06 - நாசாவின் கியூரியாசிட்டி
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காகஇ நாசாவால் அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் 8 மாத பயணத்திற்கு பின்னர்இ வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதன்பின் அங்குள்ள பாறைகளையும்இ மண்ணையும் ஆய்வு செய்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இப்படங்களின் மூலம் நாசா விஞ்ஞானிகளுக்கு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
1. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி: முதல் படத்தை எடுத்து அனுப்பியது
2. செவ்வாய் கிரகத்தில் மனிதக்குரல்: கியூரியாசிட்டி சாதனை
ஓகஸ்ட் 15 - அசாஞ்ச் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம்
அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இராணுவ இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ்ச். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும்இ சுவீடனில் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இவரை கைது செய்யும் படி சுவீடன் அரசு உத்தரவிடவேஇ பிரிட்டன் பொலிசார் அசாஞ்சை கைது செய்ய முயன்றனர். கைதிலிருந்து தப்பிக்கஇ லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அதன்பின் ஈக்வடார் அரசும் இவருக்கு தஞ்சமளிக்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.
1. அசாஞ்சை கைது செய்வது தற்கொலைக்கு சமம்: ஈக்வடார் ஜனாதிபதி
2. தேர்தலில் போட்டியிட விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் முடிவு

ஓகஸ்ட் 26 - நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.
நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்(வீடியோ இணைப்பு)
ஒக்ரோபர் 09 - மலாலா துப்பாக்கி சூடு
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காகவும்இ தலிபான்களுக்கு எதிராகவும் போராடிய மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மிக மோசமான நிலையில் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்ட மலாலாவுக்குஇ லண்டனில் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இச்சிறுமியின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய்இ ஐ.நா சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மலாலா தலிபான்களுக்கு எதிராக பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இன்று மலாலா நாள்: ஐ.நா கௌரவிப்பு(வீடியோ இணைப்பு)
ஒக்ரோபர் 29 - சாண்டி புயலின் கோரத் தாண்டவம்
வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் சேதத்தை ஏற்படுத்தியது சான்டி புயல். இப்புயலால் 5 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்இ 12 மாகாணங்கள் முழுமையாக சேதமடைந்தது. இதனால் 13 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதுடன்இ நியூயார்க்இ நியூஜெர்ஸி மாகாணங்கள் உட்பட 8 இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவை புரட்டி போட்ட சான்டி புயல்: மீட்பு பணிகள் தொடக்கம்
நவம்பர் 06 - அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்
2012ஆம் ஆண்டு முழுவதுமே அமெரிக்கா மக்கள் முணுமுணுத்த விடயம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்? என்பது தான். இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும்இ குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கியதுடன்இ பல்வேறு சலுகைகளையும் மக்களுக்கு அறிவித்தனர். முடிவில் 303 வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார் பராக் ஒபாமா.
வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை (வீடியோ இணைப்பு)
நவம்பர் 18 -யாசர் அரபாத் மரணத்தில் சர்ச்சை
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்இ பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தார். இதனையடுத்து இவரது உடைகளை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள்இ பொலோனியம் விஷம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இவரது கல்லறை உடைக்கப்பட்டது.
இன்று யாசர் அராபத்தின் கல்லறை உடைப்பு
நவம்பர் 30 - பாலஸ்தீனத்திற்கு அந்தஸ்து
ஐ.நாவில் முதன் முறையாக உறுப்பினர் அல்லாத கண்காணிப்பாளர் அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் இத்தீர்மானத்தை அமெரிக்காஇ இஸ்ரேல்இ ஜேர்மனி உட்பட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன்இ இஸ்ரேல் எல்லைப்பகுதியில் 3000 வீடுகளை கட்ட தீர்மானித்தது. இஸ்ரேலின் இத்திட்டத்திற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
1. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நாவில் வாக்கெடுப்பு: அமெரிக்காஇ ஜேர்மனி எதிர்ப்பு
2. பாலஸ்தீனத்திற்கு எதிராக 3000 வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்: அமெரிக்கா கடும் கண்டனம்
டிசெம்பர் 04 - இளவரசி கேட் கர்ப்பம்
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமானது பிரிட்டன் மக்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. குறிப்பாக சூதாட்டக்காரர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது என்றே சொல்லலாம். உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. மகிழ்ச்சியான தருணத்திற்கு மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திய விடயம்இ கேட் மிடில்டன் கர்ப்பதிற்காக சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஜெஸிந்தா மர்மமான முறையில் இறந்தது தான்.
1. இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பம்: அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது
2. செவிலியர் மரணம்: கண்ணீருடன் வருத்தம் தெரிவித்த அறிவிப்பாளர்கள்

டிசம்பர் 14 - அமெரிக்க படுகொலை
அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில்இ 20 வயது மதிக்கத்தக்க நபர் ஆடம் லான்சா நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அமெரிக்காவில் உள்ள துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக பெரும் கண்டனங்களும் எழுந்தன.
1. அமெரிக்காவில் பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி (வீடியோ இணைப்பு)
நாட்டை உருகுலைக்கும் முடிவில்லா பிரச்சனை - சிரியா
2012-ல் மிக முக்கியமாக துனிஷியாவில் தொடங்கிய அரபு நாடுகளின் போராட்டம் எகிப்துஇ பஹ்ரைன்இ லிபியா என ஆரம்பித்து சிரியா வரை சென்றது. சிரியா ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த 21 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க சிரியா அரசு நடத்திய தாக்குதல்களில் இதுவரையிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன்இ லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
குறிப்பாக சிரியா அரசு பொதுமக்கள் மீது இரசாயன குண்டுகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இரத்தம் என்ற நிலையே சிரியாவில் உள்ளது. குறிப்பாக ஒன்றுமே அறிந்திராத பச்சிளம் குழந்தைகளையும்இ அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தான் தாக்குதல்கள் நிகழ்கின்றன.
இவர்கள் தவிர செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கும் இதே கதிதான். சிரியாவில் மட்டும் இந்த ஆண்டு 36 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.