Thursday, September 6, 2018

இயற்கைப் பேரழிவு




இயற்கைப் பேரழிவு 

இயற்கைப் பேரழிவு (ஆங்கிலம்Natural disaster) அல்லது பெருங்கேடு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். (எடுத்துக் காட்டாக, வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு போன்றவை), இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்ச்சேதம், உயிர்ச்சேதம்,ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது. 

இதனால் ஏற்படும் பெரும் நட்டத்தை தாங்கிக் கொள்வது சுலபமல்ல, அதன் சுவடுகள் வாழ்நாள் முழுதும் பாதிப்படைந்தவர்களை துன்பத்திலும், துயரத்திலும் ஆழ்த்தினாலும், ஒரு வகையில் இந்தக் கட்ட நட்டங்களைத் தாங்கி மீள்வதற்கான செயல்பாடுகளை அந்நாட்டு மக்களும் சமூகமும் எடுக்கும் விரைவான நடவடிக்கைகளை மிகவும் சார்ந்தே, சுற்றுப்புற சூழ் நிலைகளை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த, தெளிவான வழியாகும். 

அது மட்டுமன்றி பேரழிவில் இருந்து மீண்டும் எழுவதற்கும், அதைத் துணிந்து போராடுவதற்கும், மக்கள் தன்னம்பிக்கையுடன் அதைப்புச்சத்தியுடன் துணிந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகும். 

மக்களின் ஆதரவு, அவர்கள் திறமையுடனும் விரைவாகவும் எடுக்கும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள், பதட்டப்படாமல் ஒற்றுமையுடன் செயல்படுதல், நேரம் காலம் பாராமல் அனைவரும் தமது பங்கை அளித்து சிரமங்களைப் பாராமல் செயல்படுவதால் நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள சாத்தியமாகும், மேலும் நட்டங்களையும், பாதிப்புகளையும், ஓரளவிற்கு குறைக்கவும் வழி செய்யலாம்.[1] நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கூற்று இதுவேயாகும்: "காற்றானது சீற்றமடைந்து ஆல மரத்தையே வேரோடு சாய்ப்பது போலவே, அளவு கடந்த இடர்பாடுகள் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக நிகழும் பொழுது, அதுவே பேரழிவாக ஊறுபட்டு பேரழிவுகளுக்கு வித்திடுகிறது."[2] இயற்கையாக எழும் இடர்பாடுகள் சில பாதிப்படையக் கூடிய இடங்களில் மிகையாக நிகழும் போது மட்டுமே பேரழிவிற்கு வழி வகுப்பதாகக் காணப்படுகிறது, இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது என்னவென்றால், மக்கள் வசிக்காத இடங்களில் கடுமையான நில நடுக்கம் ஏற்படுவதில்லை. இவ்விடத்தில் இயற்கை என்ற சொல்லே பிற்பாடு விவாதத்திற்குரியதாக உள்ளது, ஏன் என்றால் அழிவுச் சம்பவங்கள், இடையூறுகள் அல்லது இடர்ப்பாடுகள் அனைத்துமே மனிதர்கள் சம்பந்தப் பட்டு இருந்தால் மட்டுமே அர்த்தமுடையதாயிருக்கும், என்ற விவாதமே.[3] சொல்லப் போனால், மக்கள் வசிக்காத இடங்களில் நடைபெறும் சம்பவங்களைக் குறித்து மனிதர்கள் தெரிந்து கொள்ளாமலும், அக்கறை காட்டாமலும் இருக்கலாம்.