Monday, March 11, 2013

இலங்கையின் காலநிலை

இலங்கையின் காலநிலை

Climate
காலநிலை
யாதேனுமொரு இடத்தில் நீண்ட காலமாக (ஒரு மாதத்தில் இருந்து பல மில்லியன் ஆண்டு காலம் வரையில், எனினும் பொதுவாக 30 வருட காலம் வரையில்) வளிமண்டலத்தில் காணப்படும் நிலை காலநிலை என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. காலநிலை என்பது வலிமண்டலத்தின் மூலப்பொருட்கள் (மற்றும் அவற்றின் மாற்றங்கள்) அதாவது சூரியக் கதிர்கள், வெப்பநிலை, ஈரத்தன்மை, மேகம், மழைவீழ்ச்சி (விதம், தெளிவு, அளவு) வளிமண்டல அமுக்கம் மற்றும் காற்றின் (வேகம் மற்றும் வீசும் திசை) ஆகிய இவற்றின் சேர்மமாகும்.
மத்திய கோட்டிற்கு வட அகலாங்கு 50 55' முதல் 90 51' வரையிலான இடைவெளிக்குள் கிழக்கே நெட்டாங்கு 790 42' முதல் 810 53' இற்கும் இடைப்பட்ட இலங்கை அமைந்துள்ளதன் பிரகாரம் நாட்டின் காலநிலையானது மத்திய கோட்டு காலநிலை தன்மைகளைக் கொண்டுள்ளன.
புவியியல் தன்மைகள்
நாட்டின் தெற்குப் பிரதேசத்தின் மத்திய பகுதியில் 25 கி.மீ. விடவும் உயரமான மலைகளைக் கொண்ட பிரதேசமாகும். மத்திய மேட்டு நிலங்கள், மலைத் தொடர்கள், மலை உச்சிகள், மேற்தகடு போன்ற வித்தியாசமாக புவியியல் தன்மைகளைக் கொண்டுள்ளது. நாட்டின் மீதமுள்ளப் பிரதேசங்களைச் சேர்ந்த தாழ்நிலங்கள் இடையிடையே காணப்படுகின்ற சிறிய மலைகள் தவிர பொதுவாக சமவெளியாகவேக் காணப்படுகின்றன. முக்கியமாக பருவப்பேர்ச்சிக் காற்று காலங்களில் ஏற்படுகின்ற காற்றின் தன்மை, காலத்திற்குரிய மழை வீழ்ச்சி, வெப்பநிலை, ஒப்பீட்டளவிலான ஈரத்தன்மை மற்றும் ஏனைய காலநிலைத் தன்மைகளுக்கு இந்த புவியியல் தன்மையானது பெரிது தாக்கம் செலுத்துகின்றது.
மழைவீழ்ச்சி
இலங்கையின் மழைவீழ்ச்சியில் பல்லினத் தன்மையான காரணிகளின் செல்வாக்குக் காணப்படுகின்றன. வருடாந்த மழைவீழ்ச்சியில் அதிகமானவை பருவப்பெயர்ச்சிக் காற்று, வெப்பச் சலனம், சூறாவளி ஊடான மழைவீழ்ச்சியினைக் கொண்டுள்ளது. வருடாந்த நடுத்தர மழை வீழ்ச்சியானது மிகவும் வறண்ட பிரதேசங்களுக்கு (வட கிழக்கு மற்றும் தென் கிழக்கு) சுமார் 900 மி.மி. இற்குக் குறைவான அளவிலிருந்து மிகவும் ஈரப் பிரதேசங்களுக்கு (மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவு பிரதேசத்திற்கு 5000 மி.மி. இற்கும் அதிகமான அளவு வரையில் மாற்றம் அடையக் கூடிய பல்வேறு அளவினைக் கொண்டுள்ளது. (வரைபடம் 01)
Annual Rainfall in Sri Lanka
வரைபடம் 01. இலங்கையின் வருடாந்த மழைவீழ்ச்சி
வெப்பநிலை
இலங்கையின் உயர் வளிமண்டல வெப்பநிலையில் காணக்கூடியதாக உள்ள பிராந்திய மாற்றங்களுக்கு முக்கியமாக அகலாங்குகளை விட நெட்டாங்குகளின் மாற்றமே தாக்கம் செலுத்துகின்றது. காலத்திற்குக் காலம் சூரியனின் பயணத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட ஒருசில புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாதாந்த சராசரி வெப்பநிலையில் சிறிதளவு வேறுபடும். இலங்கையின் வருடாந்த சராசரி வெப்ப நிலையினை உற்றுநோக்கும் போது தாழ் நிலப் பிரதேசத்தில் பொதுவாக சமநிலையான வெப்ப நிலையும் மேட்டு நிலங்களில் விரைவாக குறைவடையக் கூடிய வெப்ப நிலைத் தன்மை ஒன்றினையும் வெளிக்காட்டுகின்றது. தாழ் நிலங்களில் 27.50C வருடாந்த வெப்ப நிலையுடன், 100 மீ. முதல் 150 மீ. நெட்டாங்கு வரையில் 26.50C முதல் 28.50C வரையில் இடையில் இருப்பதுடன், வருடாந்த சராசரி வெப்பநிலை மாறுபடும். மேட்டு நிலப் பகுதியில் நெட்டாங்கு அதிகரிப்பதனால் மிகவும் விரைவாக வெப்ப நிலையானது குறைவடைகின்றது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ இற்கு மேலே அமைந்துள்ள நுவரெலியாவின் வருடாந்த சராசரி வெப்ப நிலையானது 15.90C ஆகக் காணப்படுகின்றது. மாதாந்த சராசரி வெப்ப நிலையின் பிரகாரம் மிகவும் குளிரான மாதமாக ஜனவரி மாதம் விளங்குவதுடன், மிகவும் சூடான மாதங்கள் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் என்பனவாகும்.
கரையோரத் தாழ் நிலப் பிரதேசங்களின் வருடாந்த சராசரி வெப்ப நிலையானது 270C முதல் (கடல் மட்டத்திலிருந்து 1900 மீ. இற்கு மேல்) மத்திய மலை நாட்டின் நுவரெலியா 60C இற்கு இடையிலும் மாறுபடும். சூரிய ஒளி அதிகம் காணப்படும் கடற்கரை பிரதேசம் நாட்டின் உள்நாட்டு மழைக் காடுகளில் காணப்படுகின்ற வித்தியாசமான தன்மையானது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக் கூடிய தன்மையினைக் கொண்டுள்ளது.
Annual temperature
காலநிலை மாற்ற கால எல்லைகள்
நாட்டிலே மேற்குறிப்பிட்ட புவியியல் தன்மை மற்றும் தென்மேல் மற்றும் வடகீழ் பருவக் காற்று பிரதேச ரீதியிலான காற்று என்பன இலங்கையின் காலநிலையில் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாகக் காணப்படுகின்றன. இலங்கைக்கு 12 மாத காலப் பகுதியினுள் தாக்கம் செலுத்தும் கால நிலை மாற்றத்தினை பின்வருமாறு 04 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  1. முதல் இடை பருவக் காற்றுக் காலம் : மார்ச் - ஏப்ரல்
  2. தென்மேல் பருவக் காற்றுக் காலம் : மே, செப்தெம்பர்
  3. இரண்டாவது பருவக் காற்றுக் காலம்: ஒக்தோபர் - நவம்பர்
  4. வடகீழ் பருவக் காற்றுக் காலம் : செப்டம்பர் - பெப்ரவரி
முதல் இடை பருவக் காற்றுக் காலம் : (மார்ச் - ஏப்ரல்)
இந்த காலத்திற்கு தனிச் சிறப்புமிக்க காலநிலை அறிகுறியானது விசேடமாக பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக் கொண்ட காலநிலையாகும். இந்தக் காலத்தினுள் மழை வீழ்ச்சியின் பரவலானது தென்மேல் பள்ளத் தாக்குகளின் சில இடங்களுக்கு 700 மி.மீ. மழை வீழ்ச்சியை மேலதிகமாகப் பெற்றுக்கொடுப்பதுடன், (காரகல 771 மி.மீ.) மலைநாட்டின் முழுமையான தென்மேல் பகுதிக்கும் 250 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைப்பதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணக் கூடிய தெளிவான வேறுபாடு (யாழ்ப்பாணம் 78 மி.மீ., ஆணையிறவு 85 மி.மீ.) தவிர நாடு முழுவதும் எல்லாப் பிரதேசங்களினதும் மழை வீழ்ச்சியின் அளவு 100 மி.மீ. இருந்து 250 மி.மீ. வரை மாறுபடுகிறது.
First Inter-monsoon Season (March - April)
தென்மேல் பருவக் காற்றுக் காலம் : (மே, செப்தெம்பர்)
இந்தப் பருவக் காற்றுக் காலத்தினுள், காற்றுடன் கூடிய காலநிலையானது முதல் பருவக்காற்றுக் காலம் முழுவதும் காணப்பட்ட சூட்டைத் தணிக்கும். இரவு பகல் இரண்டிலும் தென்மேல் பருவக் காற்றின் மூலம் தென்மேல் பகுதிக்கு இடையிடையே மழை வீழ்ச்சியினை எதிர்பார்க்கலாம். இந்த காலப் பகுதியினுள் கிடைக்கும் மழைவீழ்ச்சியானது 100 மி.மீ. இருந்து 3000 மி.மீ. வரையிலான அதிக மழைவீழ்ச்சி வரையில் மாறுபடும். மேற்குப் பள்ளத் தாக்குகளின் மத்திய உயர் நிலங்களிற்கு அதிக மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. மேற்குப் பள்ளத்தாக்குகளின் மத்திய மேட்டு நிலங்களிற்கு உயர் மழைவீழ்ச்சியும் கிடைக்கின்றது. (கினிகத்ஹேன 3267 மி.மீ., வட்டவளை 3252 மி.மீ., நோர்டன் 3121 மி.மீ.) இந்த உயர் பிரதேசங்களில் இருந்து மிகவும் உயர்ந்த மேட்டுநிலப் பிரதேசங்கள் வரையில் விரைவாக மழைவீழ்ச்சி குறைவடைவதுடன், இந்நிலை நுவரெலியாவில் 853 மி.மீ. வரை குறைவடைகின்றது. தென்மேல் கரையோரப் பிரதேசங்களிற்கு இந்த மாற்றமானது மிகவும் குறைந்த வேகத்தில் காணப்படுவதுடன், இந்த ஐந்து மாதத்தினுள் தென்மேல் கரையோரப் பகுதிக்கு 1000 மி.மீ. முதல் 1600 மி.மீ. வரையான மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. குறைந்த அளவு வடக்கு மற்றும் வடகிழக்கு பிரதேசங்களில் பெறப்பட்டுள்ளது.
Southwest -monsoon Season (March - April)
இரண்டாவது பருவக் காற்றுக் காலம்: (ஒக்தோபர் - நவம்பர்)
பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை இந்தக் காலத்திற்குரிய காலநிலை அறிகுறியாகும். முதல் பருவக்காற்று காலத்தைப் போன்றல்லாது, வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் மற்றும் சூறாவளி என்பன இந்த இரண்டாம் பருவக் காற்றுக் காலத்தில் அரிதானதாகவே காணப்படும். இந்த நிலையின் கீழ் ஒரு சில சந்தர்ப்பங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு என்பவற்றிற்கு முகம்கொடுத்து நாடு முழுவதும் கடும் புயல் மற்றும் பரந்து காணப்படும் மழை உடனான காலநிலைத் தன்மைக்கு முகம்கொடுக்கும். ஒக்தோபர் - நவம்பர் பருவப் பெயர்ச்சிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையிலே மிகவும் சிறந்த சமநிலையான மழைவீழ்ச்சித் தன்மையொன்றினைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. சுருங்கக் கூறின் நாடு முழுவதிலும் இந்தக் காலப் பகுதியில் 400 மி.மீ. வரையிலான மேலதிக மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுடன், தென்மேல் பள்ளத்தாக்கு 750 மி.மீ. முதல் 1200 மி.மீ. பரப்;பினைக் கொண்ட உயர் மழைவீழ்ச்சி ஒன்றினைக் கொண்டுள்ளது. (யட்டியாந்தோட்டை வேவெல்தலாவ தோட்டத்தில் 1219 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
Second Inter-monsoon Season (October-November)
வடகீழ் பருவக் காற்றுக் காலம் : (செப்டம்பர் - பெப்ரவரி)
அதிகம் குளிரான காலை நேரம் தவிர்ந்த ஏனைய காலங்களில் மிகவும் விரும்பத்தக்க சிறந்த காலநிலையினைக் கொண்டு நாட்டின் அதிகமான பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் குளிரான எனினும் வெப்பமான காலநிலைத் தன்மை ஒன்றினை கொண்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து வீசக் கூடிய உலர்ந்த குளிர் காற்று நாட்டிலே குடிகொண்டிருக்கும். மேகங்களற்ற வானத்திலிருந்து பிரகாசமாக சூரிய ஒளியுடன் கூடிய பகல் பொழுதும் விரும்பத்தக்க குளிரான இராக் காலத்தையும் கொண்டு காணப்படும். இந்த காலப் பகுதியினுள் கூடிய மழைவீழ்ச்சி மலை நாட்டின் வடகீழ் பள்ளத்தாக்குப் பிரதேசங்களிலும் நக்கில்ஸ்ஃரன்கல மலைத் தொடரின் கிழக்கு பள்ளத்தாக்குகளிலும் காணப்படும். இந்த காலப் பகுதியினுள் அதிகப் படியான மழைவீழ்ச்சி கொபோநெல்ல தோட்டத்திலும் (1281 மி.மீ.) மிகக் குறைந்த மழைவீழ்ச்சி புத்தளத்தை அண்டிய மேற்குக் கரையோரப் பிரதேசத்திலும் (177 மி.மீ.) பதிவாகியுள்ளது.
Northeast -monsoon Season (December - February)
Northeast -monsoon Season (December - February)
இலங்கையானது வடக்கே அகலாங்கு 5 – 10 இற்கும் இடையே அமைந்துள்ளமையால் நாட்டிற்கு இளஞ்சூடான காலநிலையும், நடுத்தர அளவிலான கடற்காற்றும், ஈரத் தன்மைமிக்க காலநிலையையும் கொண்டு காணப்படும். சராசரி வெப்ப நிலையானது மத்திய மலைநாட்டின் நுவரெலியாவில் 15.80C (குளிர் காலத்தில் ஒரு சில நாட்கள் உறைபனியாக விழக் சுடும்.) ஆகக் குறைந்த பெறுமதியில் இருந்து வடகீழ் கடற்கரையின் திருக்கோணமலையில் 290C அளவில் ஆகக் கூடிய பெறுமதி (வெப்பநிலை 290C வரையில் அதிகரிக்கக் கூடும்) வரையிலான வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக எடுத்துக்கொண்டால் நாட்டின் சராசரி வருடாந்த வெப்பநிலை 160C - 280C இடைப்பட்டதாகும். பகல் இரவு வெப்பநிலை 4 – 7 வரையில் மாற்றமடையக் கூடும். ஜனவரி மிகவும் குளிரான மாதம் என்பதனால் முக்கியமாக மத்திய மலைநாட்டில் வாழும் மக்கள் கபாய் மேற்சட்டை மற்றும் குளிருக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டிய காணப்படும். கோடைக்கால பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் வருகின்ற மே மாதமானது சூடான காலப்பகுதியாகும்.
Seasonal Rainfall
மழைவீழ்ச்சி மாற்றமானது இந்து சமுத்திரத்தின் வங்காள விறிகுடாவின் பருவக் காற்றின் தாக்கத்திற்கேற்ப இடம்பெறுவதுடன், இது பிரதானமாக நான்கு காலங்களில் இடம்பெறுகின்றது. முதலாவது தென்மேற்குத் திசையில் இருந்து காற்று உருவாகி இந்து சமுத்திரத்தில் இருந்து ஈரத் தன்மையினைக் கொண்டுவரும் மே நடுப்பகுதி முதல் ஒக்தோபர் வரையிலான காலப் பகுதியாகும். இந்த காற்றானது மத்திய மலைநாட்டு சரிவினை அடையும்போது அந்தக் காற்றானது மலைச் சரிவுப் பிரதேசத்திற்கும் மற்றும் நாட்டின் தென்மேற்குப் பகுதிக்கும் கடுமையான மழைவீழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. காற்றின் முகப்பில் காணப்படுகின்ற சில பிரதேசங்களுக்கு ஒரு மாதத்தில் 250 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைக்கின்ற போதிலும் கிழக்கு மற்றும் வட கிழக்கு பருவக் காற்றின் சரிவுகளுக்கு மிகவும் குறைந்த மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. இரண்டாவது காலம் ஒக்தோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறும் பருவக்காற்றிற்கு இடைப்பட்ட ஒரு சில மாதங்களாகும். இந்தக் காலப்பகுதியில் திடீர் புயல் காற்று ஏற்படுவதுடன், நாட்டின் தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இருள் நிறைந்த மேகங்கள் இடையிடையே மழை பெய்யச் செய்கின்றது. மூன்றாவது காலம் அதாவது திசெம்பர் முதல் மார்ச் காலாண்டுப் பகுதி வரையில் வங்காள விறிகுடாவிலிருந்து ஈரத்தன்மையினை கொண்டுவந்து வடகிழக்குத் திசையிலிருந்து பருவப்பெயர்ச்சி காற்றினை கொண்டுவருகின்றது. இந்த ஒருசில மாதங்களினுள் நாட்டின் வடகிழக்குப் பிரதேசம் 125 மி.மீ. மழைவீழ்ச்சியின் ஊடாக வெள்ளப் பெருக்கு அபாய நிலையொன்றினைத் தோற்றுவிக்க முடியும். மென்மையாக மாற்றமடையக் கூடிய காற்றுத் தன்மை மற்றும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழையினைக் கொண்ட இடை பருவப்பெயர்ச்சிக் காலமொன்று மார்ச் முதல் மே வரையில் ஏற்படும்.
தென் மேற்கு மற்றும் மலைநாட்டுப் பிரதேசங்களில் பொதுவாக ஈரத் தன்மை உயர்வடைவதுடன், காலத்திற்குரிய மழை வீழ்ச்சித் தன்மைகள் அதில் தாக்கம் செலுத்தும் உதாரணமாக கொழும்பில் பகல் காலத்தின் ஈரத் தன்மையானது வருடம் முழுவதும் 70 வீதமாகக் காணப்படுவதுடன், பருவக் காற்று காலத்தில் யூன் மாதத்தில் 900C வரையில் அதிகரிக்கின்றது. அநுராதபுர பிரதேசத்தில் பகல் காலத்தில் ஈரத் தன்மையானது பருவப்பெயர்ச்சிக்கு இடைப்பட்ட காலமான மார்ச் காலப்பகுதியில் 60 வீதமளவில் மிகவும் குறைவான பெறுமதியினைக் கொண்டுள்ளபோதிலும், நவம்பர் திசெம்பர் மழைக் காலத்தில் 79 வீதம் வரையில் அதிகரிக்கின்றது. மத்திய மலைநாட்டிலே கண்டியில் பகல் காலத்தில் ஈரத் தன்மையானது பொதுவாக 70 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட பெறுமதியைக் கொண்டுள்ளது.
Climate - Colombo Climate - Nuwaraeliya
Climate - Anuradhapura
காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நிலையம்
காலநிலை மாற்றங்கள் பற்றிய பிரச்சினைகளை அறிமுகம் செய்வதற்காக 1999 யூன் மாதம் 11 ஆம் திகதிய அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் ஊடாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒரு பகுதியாக காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நிலையம் நிறுவப்பட்டது.
Centre for Climate change StudiesCentre for Climate change Studies
இந்த நிலையத்தின் பிரதான தொழிற்பாடுகள் பின்வருமாறு,

  1. காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள்
  2. காலநிலை மாற்றங்களை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல.
  3. காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி விளக்குதல்.
  4. தகவல்களை ஒன்றுதிரட்டலும் பங்கிடலும்.
  5. காலநிலை மாற்றங்கள் பற்றிய முன்மாதிரிகளை செயற்படுத்தல்.
  6. ஆவணத் தயாரிப்புச் சேவைகள்
  7. உரிய சர்வதேச முகவர் நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளல்.
  8. காலநிலை மாற்றங்கள் பற்றிய விரிவுரைகளுக்கு ஒத்துழைத்தல்.
தற்போது இந்த நிலையம் வளிமண்டலவியல் திணைக்கள வளாகத்திலேயே அமைந்துள்ளதுடன், அதன் தொழிற்பாடுகள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சிரேஷ்ட விஞ்ஞானிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலதிகத் தகவல்கள்
காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம்,
383, பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.

No comments:

Post a Comment