Friday, March 15, 2013

நெல் வர்க்கங்கள்

நெல் வர்க்கங்கள்


பி.ஜீ. 300

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 100-120 புசல்

சிறப்பியல்புகள்

நீண்ட, வெண்ணிற அரிசி எரிபந்தம் நோயை சகித்து வளரும். கபில நிறத் தத்திகளின் தாக்கத்தை ஓரளவு சகித்து வளரும்.

பி.ஜீ. 304

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 100-150 புசல்

சிறப்பியல்புகள்

நீண்ட, வெண்ணிற அரிசி கொப்புள ஈ, கபில நிறத் தத்தி, போன்ற பீடைகளின் தாக்கத்தை சகித்து வளரும். இலை வெளிறல், எரிபந்தம் போன்ற நோய்களைச் சகித்து வளரும் வர்க்கமாகும்.

பி.ஜீ. 305

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 110-130 புசல்

சிறப்பியல்புகள்

வெண்ணிறமான அரிசி இலை வெளிறல், எரிபந்தம், கொப்புள ஈ, கபிலநிறத் தத்திகளின் தாக்கம் என்பனவற்றை சகித்து வளரும்

ஏ.ரி. 303

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 100-120 புசல்.

சிறப்பியல்புகள்

செந்நிறமான அரிசி எரிபந்த நோயைச் சகித்து வளரும்.

பி.டபிள்யு 272-6-பி

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 60-80 புசல்

சிறப்பியல்புகள்

தரமான, சிறிய மணிகளைக் கொண்ட செந்நிற அரிசி. தாழ்ந்த நாட்டு ஈர வலயங்களில் வயல்களிற்கு உகந்தது. இரும்பு நஞ்சாதலை சகித்து வளரும்.

பீ. டபிள்யு 302

விளைச்சல் : 100 புசல்ஃ ஏக்கர்

சிறப்பியல்புகள்

  • கபில நிற அரிசியை கொண்டிருக்கும்.
  • எரிபந்த நோய்க்கு எதிர்ப்புத்தன்மை உடையது.
  • அமில,கார தன்மையை சகித்து வளரும்.
பிஜி 94-1

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல் (200 புசல் வரை பெறப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன)

சிறப்பியல்புகள்

நீண்ட, வெண்ணிறமான அரிசி இடப்படும்; உரப் பசளைகளிற்கு கூடிய விளைச்சலைத் தரும். அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள வர்க்கமாகும்

பிஜி 350

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

சிவப்பு அரிசி. இடப்படும் உர பசளைகளுக்கு கூடிய விளைச்சலைத் தரும். அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள ஓர் வர்க்கமாகும். பி.ஜி 94-1 எனும் வர்க்கத்தை மிகவும் ஒத்தது.

பிஜி 350

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

சிவப்பு அரிசி. இடப்படும் உர பசளைகளுக்கு கூடிய விளைச்சலைத் தரும். அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள ஓர் வர்க்கமாகும். பி.ஜி 94-1 எனும் வர்க்கத்தை மிகவும் ஒத்தது.

பி.டபிள்யு 351

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்.

சிறப்பியல்புகள்

சிவப்பு அரிசி. எரிபந்தம், இலை வெளிறல் போன்ற நோய்களை ஓரளவு சகித்து வளரும். இரும்பு நஞ்சுத்தன்மைக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது

பிஜி 352

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

வெண்ணிறமான, ஓரளவு நீண்ட அரிசி. கபில நிறத்தத்திகளை ஓரளவு சகித்து வளரும். இலை வெளிறல் நோயை எதிர்த்து வளரும்;.

ஏ ரீ 353

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 150 புசல்.

சிறப்பியல்புகள்

சிவப்பு அரிசி. பிரச்சனைகளுக்குரிய மண்களுக்கு உகந்தது. இலை வெளிறல் நோயை ஓரளவு தாங்கி வளரும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இவ் வர்க்கம் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.

ஏ ரி 354

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல் (ஏக்கரொன்றிற்கு)

சிறப்பியல்புகள்

வெண்ணிறமான அரிசி. உவர் தன்மையை சகித்து வளரும் வர்க்கமாகும். தென் மாவட்டங்களான அம்பாந்தோட்டை, மாத்தறை பிரதேசத்தில் அதிகம் பிரபல்யம் பெற்றுள்ள ஓர் வர்க்கமாகும்.

ஏ ரி 362

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

எரிபந்தம், இலை வெளிறல், கபில நிறத்தத்தியின் தாக்கம் என்பனவற்றை சகித்து வளரும். அம்பாறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.

பி டபிள்யு 361

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

சிவப்பு அரிசி எரிபந்தம், கொப்புளஈ, கபில நிறத்தத்தி என்பனவற்றிற்கு ஓரளவு எதிர்ப்புத்தன்மை கொண்டது. உலர் வலைய மாவட்டங்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

எல் டி 355

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

வெண்ணிறமான சம்பா அரிசி. கபிலப்புள்ளி நோய், இலை வெளிறல் என்பனவற்றிற்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. இரும்பு நச்சுத்தன்மையை சகித்து வளரும்.

எல் டி 356

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

தாழ் நாட்டு ஈர வலயத்திற்கு உகந்தது.

இரும்பு நஞ்சாதலை சகித்து வளரும். அநுராதபுர மாவட்டங்களில் அதிகம் பிரபல்யம் அடைந்துள்ளது.

பி ஜி 357

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 160 புசல் (ஏக்கரொன்றிலிருந்து 204 புசல் விளைச்சலும் பெறப்பட்டுள்ளது).

சிறப்பியல்புகள்

வெண்ணிற நடுத்தர அளவான அரிசி. கபில நிறத்தத்தி, கொப்புள ஈ போன்ற பீடைகளின் தாக்கத்தை சகித்து வளரும். இலை வெளிறல், எரிபந்தம் ஆகிய நோய்களை எதிர்த்து வளரும்.

பி ஜி 358

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 160 புசல் (190 புசல் வரை பெறப்பட்டுள்ளது).

சிறப்பியல்புகள்

வெள்ளை சம்பா அரிசி. கபில நிறத்தத்தியை எதிர்த்து வளரும். இலை வெளிறல், எரிபந்தம் ஆகிய நோய்களையும் எதிர்த்து வளரும்.

பி ஜி 359

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

எரிபந்தம், கொப்புள ஈ, இரும்பு நஞ்சாதல் என்பனவற்றை சகித்து வளரும். ஈர வலயத்திற்கு மிக உகந்தது.

பி ஜி 360

ஏக்கரொன்றில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

தரமான இயல்புகளைக்கொண்ட வெண்ணிற சம்பா அரிசி. எரிபந்தம், கொப்புள ஈ என்பனவற்றை எதிர்த்து வளரும்.

பி டபிள்யு 267- 3

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 70-80 புசல்

சிறப்பியல்புகள்

ஓரளவு நீண்ட அரிசி. எரிபந்தத்தை சகித்து வளரும். இரும்பு நச்சுத்தன்மையை நன்கு சகித்து வளரும். தாழ் நாட்டு ஈரவலயத்தில் மணல், சதுப்பு நிலங்களைக் கொண்ட வயலிற்கு மிகவும் உகந்தது.

பி ஜி 403 (மஹாசென்)

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

வெண்ணிற, ஓரளவு நீண்ட அரிசி. கபில நிறத்தத்திகளின் தாக்கத்தை சகித்து வளரும். எரிபந்தம், பக்றீரியா இலை வெளிறல் என்பனவற்றை ஓரளவு எதிர்த்து வளரும். முதிர்ச்சியடைந்த பின்னர் மணிகள் இலகுவாக உதிர்வதால் அறுவடை செய்வதை பிற்படுத்தக் கூடாது.

பி ஜி 379-2

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்

சிறப்பியல்புகள்

வெண்ணிற, ஓரளவு நீண்ட அரிசி கபில நிறத்தத்திகளின் தாக்கத்தை நன்கு சகித்து வளரும். இடப்படும் உரப்பசளைக்கேற்ப உயர் விளைச்சலைத் தரும் ஆற்றலைக் கொண்டது. கதிரில் இருந்து மணிகளைப் பிரித்தெடுப்பது கடினம்.

பி டபிள்யு 400

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

சிவப்பு அரிசி உவர் தன்மையை சகித்து வளரும்.

ஏ ரீ 401

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

உவர் தன்மையை நன்கு சகித்து வளரும்.

ஏ ரீ 402

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 150 புசல்.

சிறப்பியல்புகள்

ர் 4 வர்க்கத்திற்குப் பதிலாக செய்கை பண்ணலாம்.

ஏ ரீ 405 (லங்கா சமுர்த்தி)

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

பாஸ்மதியின் இயல்புகளைக் கொண்ட அரிசி. கபில நிறத்தத்திகளை சகித்து வளரும்

பி ஜி 450

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 140 புசல்

சிறப்பியல்புகள்

வெண்ணிறமான சம்பா அரிசி இரும்பு நச்சுத்தன்மையை சகித்து வளரும்.

பி டபிள்யு 451

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 100 புசல்.

சிறப்பியல்புகள்

வெள்ளம், கொப்புள ஈ என்பனவற்றின் தாக்கத்தை சகித்து வளரும். உவர் தன்மையை சகித்து வளரும்.

எச் 4

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 80 புசல்

சிறப்பியல்புகள்

கதிரிலிருந்து மணிகளை பிரித்தெடுப்பது ஓரளவு கடினமானது. பக்றீரியா இலை வெளிறலை சகித்து வளரும். இலங்கையில் இனக்கலப்புச் செய்து பெறப்பட்ட முதலாவது வர்க்கமாகும்.

பி ஜி 400 -1

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 140-150 புசல்.

சிறப்பியல்புகள்

பக்றீரியா இலை வெளிறல், கொப்புள ஈயின் முதலாவது வாழ்க்கை வட்ட பருவத்தை சகித்து வளரும். இரும்பு நச்சுத்தன்மையை ஓரளவு சகித்து வளரும். ஈர வலயத்தின் வயல்களிற்கு மிக உகந்தது.

பி ஜி 452

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 80 புசல்

சிறப்பியல்புகள்

எச் 4 வர்க்கத்தைப் பெரும்பாலும் ஒத்தது. ஈர வலயத்தில் வெள்ள ஆபத்துள்ள வயல்கள், இரும்பு நச்சுத் தன்மையுள்ள வயல்களிற்கு மிக உகந்தது. சதுப்பு நிலங்களிற்கு உகந்தது.

பி டபிள்யு 453

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

நன்கு மட்டம் பெயரும். பக்றீரியா இலை வெளிறலை ஓரளவு சகித்து வளரும். இரும்பு நச்சுத் தன்மை, கொப்புள ஈயின் முதலாவது வாழ்க்கை வட்ட பருவத்தை சகித்து வளரும்.

பி ஜி 407

ஒரு ஏக்கரில் பெறக் கூடிய விளைச்சல் 120 புசல்.

சிறப்பியல்புகள்

மணிகள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்னரும் இலைகள் பச்சை நிறமாகவே காணப்படும். பக்றீரியா இலை வெளிறலிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.

பி ஜி 38

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 120 புசல்;.

சிறப்பியல்புகள்

உரப் பசளைகளுக்கு அதிக தூண்டற்பேற்றினைக் கொண்டது. பக்றீரியா இலை வெளிறலை சகித்து வளரும் சம்பா வர்க்கமாகும்.

பி ஜி 3-5

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 100 புசல்.

சிறப்பியல்புகள்

நன்கு மட்டம் பெயரும். பக்றீரியா இலை வெளிறலை சகித்து வளரும்.

பி ஜி 745

ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைச்சல் 100 புசல்.

சிறப்பியல்புகள்

பொடிவீ, ஏ-8, முத்து சம்பா என்பனவற்றிற்கான பிரதியீடாகும். பக்றீரியா இலை வெளிறல், சாய்தல் என்பனவற்றைச் சகித்து வளரும்.
   


மாணவர்களின் நன்மை கருதி இதனைப்பெற்றுள்ளான்.


 

நீர் முகாமைத்துவம்

நீர் முகாமைத்துவம்


நெற் பயிர்ச்செய்கையில் நீர்ப்பரிபாலனம்
  • எந்த நாட்டில் நெற் பயிர்ச்செய்கை செய்தாலும், நெற்பயிர் செய்கையின் போது முக்கிய காரணியாக அமைவது நீராகும்.உலகில் விவசாயத்துக்கு பயன்படு த்தக்கூடிய நீரின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
  • எமது நாட்டை தன்னிறைவு அடையச் செய்ததாக குறிப்பிடப்படும் ஆற்றல் மிக்க பராக்கிரமபாகு நிலத்தில் விழும் எந்த நீர்த் துளியையும் பிரயோசனப்படுத்தாது கடலில் கலப்பதற்கு வழிவகுக்கக் கூடாது என தெரிவித்தார்.
  • நெற் பயிரில் கூடிய வினைத்திறனை பெற்றுக் கொள்வதற்காக சிக்கனமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் நீரை பரிபாலித்தல், மற்றும் பாவித்தல்;;;;, முறையான நீர் பரிபாலனமாக குறிப்பிடலாம்.
சிறந்த நீர்ப்பரிபாலனம்
  • சேர்த்து வைக்கப்பட்ட நீரினை பரிபாலிக்கும் சந்தர்ப்பங்களில் சிறந்த நீர் வழங்கல், வடிகால் அமைப்பின் மூலம் பயிருக்கு தேவையான போது நீரை வழங்கல் போன்றவற்றை வினைத்திறனாக மேற்கொள்ளின் அதை சிறந்த நீர்பரிபாலனம் என குறிப்பிடப்படும்.
  • முக்கியமாக வரட்சியான கால நிலைகளில் தாவரத்திற்கு தேவையான ஏனைய காரணிகளுடன் நீர் பரிபாலனமும் உச்சளவு இருப்பின் அதை சிறந்த நீர் பரிபாலனமாக குறிப்பிட முடியும்.
  • மழை நீரைக்கொண்டு நெற் பயிர்ச் செய்கை செய்யும் சந்தர்ப்பங்களில் கூடிய மழைவீழ்ச்சி கொண்ட காலநிலை இருக்குமிடத்து தேவையற்ற நீரை அகற்றி பயிருக்கு தேவையான அளவினை தேவையான சந்தர்ப்பங்களில் மட்டும் கிடைக்கச் செய்வதனையும் சிறந்த நீர் பரிபாலனமாக குறிப்பிட முடியும்.
  • எனவே நெற் பயிர்ச்செய்கையில் மிகவும் பொருத்தமான நீர் பரிபாலன முறை பற்றி அறிந்து கொள்ளல் முக்கியமானதாகும். அவையாவன,
  1. தொடர்ச்சியாக நீர்வழங்கல்

    • இதை நீர் சுலபமாக கிடைக்கும் பிரதேசங்களில் அல்லது நீர்ப்பாசன வசதியுள்ள பிரதேசங்களில் செய்ய முடியும். இம்முறையின் கீழ் பயிரின் பல்வேறு கால கட்டங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டிய நீரின் தேவைகள் கீழ்கண்டவாறாகும்.
      (அ) நாற்று நடுகையில் 1-2 சென்றி மீற்றர் அளவான மெல்லிய நீர் மட்டத்தால் வயலானது மூடப்பட்டு இருத்தல் வேண்டும்.
      (ஆ) நாற்று நட்ட பின்னர் அதாவது வயலில் நாற்றுக்கள் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட பின் படிப்படியாக நீர் மட்டத்தை 3-5 செ.மீ. வரை உயர்த்த முடியும்.
      (இ) மட்டம் வெடிக்கும் பருவத்தில் நீர் மட்டத்தை இயன்றளவு குறைத்துக் கொள்க.
      (ஈ) பாற்பருவத்தின் பின்னர் பயிருக்கு நீர்ப்பற்றாக் குறை ஏற்படாத வண்ணம் பராமரிக்கவும்.
      (உ) பூத்தலின் பின்னர் படிப்படியாக வயலின் நீர் மட்டத்தை குறைத்தல் வேண்டும்.
  2. இடையிடையே நீர்வழங்கல்

    • நீர் அரிதாக கிடைக்கும் பிரதேசங்களில் கையாளும் முறையாகும் அடிக்கடி வயலிருந்து நீரை திருப்பி விடுவதுடன் அதன் மூலம் மண்ணினை ஈரலிப்பாக வைத்துக் கொள்ளப்படும்.
    நன்மைகள்
    1. மண்ணினுள் வளியூட்டல் அதிகரிக்கும், இதனால் தாவர வளர்சிக்கு பொருத்தமற்ற நச்சுத்தன்மையான பொருட்கள் உருவாதல் தடுக்கப்படும்.
    2. மண்ணின் மேற்பரப்பில் நீர்ப்பற்று இல்லாததால் மண்ணிற்குள் மிகவும் மெதுவாக நீர் வடிந்து செல்ல இடமளிக்கும் போது நீர்ப்பாசன வழங்களில் சிக்கனம் ஏற்படும்.
    3. மண் நீர் வடிப்பில் ஏற்படும் பிரச்சனைகள் குறைவு.
    4. முக்கிய போசணைக் கூறுகள் கழுவிச் செல்லப்படுவது தவிர்க்கப்படும்.
    தீமைகள்
    1. நாளாந்தம் கண்காணிக்க நேரிடும்.
    2. களைக் கட்டுப்பாட்டிற்காக கூடியளவு காலம்,பணம் செலவாக்கப்படும்
    3. இம்முறையை கையாளும் போது சில நேரங்களில் பயிருக்கு தேவையான காலகட்டங்களில் நீர் கிடைக்கப் பெறாமல் போகக்கூடும்
    4. பயிருக்குத் தேவையான நீரின் அளவு மண்ணின் ஈரப்பதன் பயிர்ச் செய்கையின் போகம்,மற்றும் பயிரின் வயது என்பவற்றிற்கு ஏற்ப வேறுபடக்கூடும்.
    5. சாதாரணமாக 4மாத வயது வர்க்கத்திற்காக சாதாரண முறையில் தேவைப்படும் நீரின் அளவு 5 ஏக்கர் அடி ஆகும்.
    6. உலர் வலயத்தில் 120 நாட்கள் வயதுள்ள நெல்லை பயிரிட பெரும் போகத்தில் 5 ஏக்கர் அடி நீரும் சிறு போகத்தில் 6 ஏக்கர் அடி நீரும் போதுமானதாகும்
    7. தேவைப்படும் நீரின் அளவை தீர்மானிப்பதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவை கவனத்தில் கொள்ளப்படும்.
  1. மழைவீழ்ச்சியின் அளவு
  2. வயலில் தேங்கி நிற்கும் நீரின் ஆழம்
  3. வரம்புகளின் அளவும் பராமரிப்பும்
  4. பயிரின் வயது
  5. பூமியின் மற்றும் மண்ணின் அமைப்பும், இடமும்.

இலங்கையின் வயல் மண்

மண்


இலங்கையின் வயல் மண்

இலங்கையில் நெற்செய்கை பண்ணப்படும் வயல் நிலம் அண்ணளவாக 780000 ஹெக்டயர்களாகும்.

இவை பல்வேறு விவசாய காலநிலை வலயங்களில் பரம்பல் அடைந்துள்ளன.

வயல் மண், புவி அமைவிடம், நீர் வடிப்பு, மூலப் பொருட்களுக்குஏற்ப பிரதான மண் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நெல் பயிர்டப்படும் மண்

மண்வகை அமைந்துள்ள காலநிலை வலயம்

01. செங்கபில மண் உலர், இடை வலயம்
02. செங்கபில மண்ணும்
முதிராத கபில மண்ணும்
உலர், இடை வலயம்
03. செம்மஞ்சள் பொட்சோலிக் மண் ஈர, இடை வலயம்
04. களி மண் உலர் ,இடை ,ஈர வலயம்
05. அலுவியல் மண் (ஆற்றுமண்) உலர், இடை ,ஈரவலயம்
06. செங்கபில லடசோலிக்மண் இடை ,ஈர வலயம்
07. முதிராத கபில இருவாட்டி மண் ஈர வலயம்
08. பொக் பகுதி பொக்மண்
(சேதன, பகுதிசேதன மண்)
ஈர வலயம்
09. சொலனைட் மண்(கார,உவர்மண்) உலர் வலயம்
10. செலலனோசக் (கார உவர்மண்) உலர் வலயம்
11. குறுமுசோல் உலர் வலயம்
12. ரெண்டிசினா உலர்,இடை வலயம்


உலர் வலய வயல் மண்

உலர் வலய வயல் மண்ணானது வெளிப்புறமாக பள்ளமான கட்டமைப்பாகவும் கடற்கரையை அண்டி மேடாகவும் காணப்படுவதுடன் வெள்ளப் பெருக்கிற்கு உட்படக்கூடியதாகவும் காணப்படும்.

வெளிப்புறமாக காணப்படக்கூடிய பள்ளமான கட்டமைப்புகளில் உள்ள வயல் நிலங்கள் அகலமாக காணப்பட்டாலும் சாதாரணமாக காணப்படும். இந்நிலங்களின் வயல் மண்ணாக செங்கபில மண், களி மண், செங்கபில மண் முதிராத கபில மண் , மற்றும் அலுவியல் மண் (ஆற்றுமண்) என்பன காணப்படும்.

இதில் செங்கபில மண்ணின் pர் வீதம் 6-7 ஆக காணப்படுவதுடன் காற்றூட்டலுடன் கூடிய மணல், களி, இருவாட்டியில் இருந்து மணல் கலந்த இருவாட்டி வரை வேறுபடும்.

உலர் வலயத்திலுள்ள களிமண் சாம்பல் நிறத்தை கொண்டதுடன் மண் காற்றூட்டல் அளவு மணல், களி, இருவாட்டியில் இருந்து மணல், களி வரை வேறுபடும். pர் வீதம் 6-7 - 7.5 ஆக காணப்படும்.

இங்கு பிரதான களி கனிப்பொருட்களாக மொன்டி மொரிலோனைட், கவோலினைட், இலைட் என்பன காணப்படும். இம்மண் உலர் வலயத்தில் காணப் படும் மிகவும் வளமான மண்ணாகும்.நீர் தட்டுப்பாடு இல்லை என்றால் உயர் விளைச்சளை பெற்றுக் கொள்ள முடியும்.

செங்கபில மண், முதிராத கபில மண் என்பன உலர் வலயத்தில் கிழக்கு பகுதியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆழமற்ற மண்ணாகும். இதன் காற்றூட்டல் ஆனது மணல்கலந்த இருவாட்டியில் இருந்து இருவாட்டி கலந்த மணல் வரை வேறுபடும். மத்திமமான காற்றூட்டலை கொண்டது,நடுத்தரமான நீர் வடிப்பை கொண்டதுடன் பௌதீக நீர் பற்றுத்திறன் சிறிது குறைவாக காணப்படும்.

ஆனாலும் இலங்கையின் மஹவ பிரதேசத்தில் உள்ள செங்கபில மண்,முதிராத கபில மண் ஏனைய பிரதேசங்களிலுள்ள அம்மண்ணை விட அதிகளவு பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனைக் கொண்டது.இம்முதிராத கபில மண்ணுக்கு கீழ் அருகாமைலேயே களி மண் காணப்படும்.

ஆனால் இக்களி மண்ணின் பயிர் உற்பத்தி திறன் செங்கபில மண்ணுக்கு அருகாமையில் உள்ள களிமண்ணின் பயிர் உற்பத்தி திறனிலும் மிக குறைவாகும்.

உலர் வலயத்தில் நெற்செய்கையை மேற்கொள்ள கூடிய அலுவியல் மண் (ஆற்றுமண்) உண்டு.

ஆறு,வாவி,கங்கைகளை சூழவுள்ள நீரினால் மூழ்கடிக்கப் படக்கூடிய இடங்களில் அலுவியல் மண்ணை (ஆற்றுமண்) இலகுவில் அவதானிக்க முடியும்.

உலர்வலயத்தில்வடக்கு மற்றும் வடமேல் பிரதேசத்தில் கடற்கரை ஓரங்களில் சொலனேட் மற்றும் பொலனோவக்ஸ் போன்ற மண் வகை காணப்படுவதுடன் அவற்றில் உவர்,அமில தன்மை காணப்படுகிறது. இத்தன்மை நெல் அறுவடையில் பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் pர் வீதம் 8.5 ஆகும்.

இடைவலயத்தின் வயல்மண்

நெற்செய்கையை மேற்கொள்ளகூடிய நிலப்பரப்பில் 25 வீதமானவை இதற்குள் உள்ளடங்கும்.

காலநிலை, மண்ணின் செங்குத்து உயரத்திற்கு ஏற்ப இடைவலயம் மேலும் 3 பகுதிகளாக பிரிக்கப்படும்.

தாழ்நாட்டு இடைவலயம்

நெற்செய்கை மேற்கொள்ளப்படும் செம் மஞ்சள் நிற பொட்சொலிக் மண் சிறிதளவு குறைந்த நீர் வடிப்புள்ள பிரதேசங்களில் காணப்படுவதுடன் களிமண் நீர் வடிப்பு குறைந்த இடங்களில் காணப்படும். பள்ளமான இடங்களை அண்டி அலுவியல் மண் (ஆற்று மண்) காணப்படும்.

களிமண்ணின் காற்றூட்டல் அளவு மணல் களியில் இருந்து மணல்களி இருவாட்டி வரை மாறு படும். இதன் pர் வீதம் 5-4 ஆகும். செம்மஞ்சள் நிற பொட்சொலிக் மண்ணில் மிகக்குறைந்த அளவிலேயே நெல் பயிரிடப்படுகிறது. ஆமிலத் தன்மை, இரும்பு நஞ்சாதல் போன்ற மண் பிரச்சினைகளை இம்மண் வகைகளில் அவதானிக்க முடியும்.

இடைநாட்டு இடை வலயம்

இங்கு செங்கபில லட்டசோல்மண் மற்றும் முதிராத கபில மண்ணில் நெற்செய்கை பண்ணப்படுகிறது. கபில லட்டசோல் மண்ணில் நடுத்தர அளவான நீர் வடிப்பைக் கொண்ட பகுதிகளில் நெற்செய்கை பண்ணப்படும். pர் வீதம் 6 ஆக காணப்படுவதுடன் பொஸ்பரஸ் அளவு மிகவும் குறைவாக காணப்படும்.

பொஸ்பரஸ் வழங்கல் சிறந்ததாககாணப்பட்டாலும் கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிப் பொருட்களிள் வழங்கல் மத்திமமாகும். நீர் வசதி காணப்படின் 2 போகங்களிலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்.

மலைநாட்டு இடை வலயம்

இங்கு செம்மஞ்சள் பொட்சோலிக் மண் மற்றும் முதிராத கபிலநிற இருவாட்டி மண்ணில் நெற் செய்கை பண்ணப்படுகிறது. ஒரு போகத்தில் நெல் பயிரிடப்படுவதுடன் ஏனைய போகங்களில் மரக்கறி வகைகள் பயிரிடப்படுகிறது.

ஈரவலயத்தின் வயல்மண்

இலங்கையில் முழு வயல் நிலப்பரப்பில் 30மூகாணப்படுவது ஈர வலயத்திலாகும். ஈர வலயமானது இடவுயரம் மற்றும் புவி வரை படத்திற்கு ஏற்ப 3 பகுதிகளாக பிரிக்க முடியும்.

இடை நாடு,மற்றும் மலை நாட்டில் அமைந்து உள்ள ஒடுக்கமான பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலும் தட்டுக்களாக அமைந்து உள்ள வயல் நிலங்கள்.

தாழ்நாட்டு ஈரவலயத்தில் பள்ளத் தாக்குகளில் அமையப் பெற்றுள்ள வயல் நிலங்கள்.

கிழக்கு கடற்கரையை அண்டி அமைந்துள்ள வயல் நிலம் மற்றும் வெள்ளப் பெருக்கு நிலமைகளுக்கு பாத்திரமாகக் கூடிய பள்ளத்தாக்குகள் என்பனவாகும்.

இதில் இடைநாட்டு ஈரவலயத்தில் அமைந்துள்ள அலுவியல் மண்ணில் (ஆற்று மண்) மகா போகத்தில் நெற்செய்கையும் சிறு போகத்தில் மரக்கறி செய்கையும் மேற்கொள்ளப்படும்.

இம்மண் மகாவலி நதியில் இருந்து ஊற்றெடுத்து பள்ளக்தாக்குளாக ,கம்பொல,கன்னொருவை பிரதேசங்களில் பரம்பலடைந்து காணப்படுகின்றது.

இம்மண் கடும் கபில நிறமாக காணப்படுவதுடன் சிறந்த நீர் வடிப்பையும் கொண்டது.

காற்றூட்டல் களியுடன் கூடிய இருவாட்டியில் இருந்து களிமண் வரை அதிகரிக்கும். pர் வீதம் 4.5-5 ஆக காணப்படுவதுடன் சேதன பொருட்கள் 1.4மூ காணப்படும்.

களி மண்ணும் இவ்வலயத்தில் காணப்படுகிறது.

காற்றூட்டல் களியுடன் கூடிய இருவாட்டி மண்ணில் இருந்து களிமண் வரை வேறுபடும்.

pர் வீதம் 4.5-5 ஆக காணப்படும். இம்மண்ணில் இரண்டு போகங்களில் நெற் பயிரிட முடியும்.

தாழ்நாட்டு ஈர வலயத்தில் களி மண்ணை அவதானிக்கலாம்.

நலிந்த காற்றூட்டலை கொண்டதுடன் மேல் மண் மணல் கலந்த இருவாட்டி மண்ணில் இருந்து களி வரையான மண் காற்றூட்டலை கொண்டது.

மழை அதிகமாக பெய்யும் காலங்களில் புவி நீர்மட்டம் புவிக்கு அண்மித்து காணப்படும். இந்த மண் ஆழமாக காணப்படுவதுடன் சாம்பல் கலந்த கபிலம், சாம்பல் நிறம் மற்றும் கடும் சாம்பல் நிறமாகும்.

நெற்செய்கை காரணமாக தொடர்ந்து மேல் மண் படை கலப்பதனால் சிறந்த காற்றூட்டலை காண முடியும். புவி நீர் மட்டம் கீழ், மேல் செல்வதனால் உறிஞ்சப்படும் களி கனிப்பொருள் கழுவப்பட்டு மண்ணில் இருந்து நீங்குவதனால் கீழ் படையில் தடிப்புடைய மணலை அதிகம் காண முடியும். pர் வீதம் 4 -5.5 ஆக இருக்கலாம்.

தாழ்நாட்டு ஈரவலயத்தில் கிழக்கு மற்றும் வட கீழ் கடலுக்கு அண்மையிலுள்ள பள்ளதாக்கு, மேட்டு நிலங்களில் நெற்செய்கை பண்ணப்படும்.

நலிந்த நீர் வடிப்பைக்கொண்ட மண் வகைகள் மூன்றினை இப்பகுதியில் காண முடியும். அவை கனிப்பொருள் அடங்கியுள்ள மண், குறை சேற்று மற்றும் சேற்று மண் என்பவையாகும்.

கனிப்பொருள் அடங்கியுள்ள மண் சிறந்த நீர் வடிப்பை கொண்ட மண் அல்லது நலிந்த நீர் வடிப்பை கொண்ட வலையங்களாக காணப்படும். pர் வீதம் 5.5 ஆக காணப்படுவதுடன் மண் வளி மணல்,களி கலந்த இருவாட்டியில் இருந்து களி,

இருவாட்டி வரை அதிகரிக்கும் குறை சேற்று மண் விருத்தி அடைந்து உள்ளமைக்கான காரணம் ஓடை, கலப்புகளில் உள்ள சேதன பொருட்களாலும் நீர் தாவரங்களில் இருந்து கிடைக்கின்ற பொருட்களினாலும் ஆகும்.

இம்மண் அமிலமாவதுடன் pர் வீதம் 5 - 5.5 ஆக காணப்படும் மேற்படையில் சேதனப்பொருள் அளவு 15-25மூ ஆக காணப்படும். மண் வளி களியை ஒத்தது.

சேற்று மண் கடலை அண்டிய கலப்பு மற்றும் சேற்று நிலங்களில் படிந்துள்ள சேதன பொருட்கள் மற்றும் களி கனிப் பொருட்களினால் உருவாகியுள்ளது. pர் வீதம் 5.2-5.4 ஆகும். பொஸ்பரஸ் மிக குறைந்தளவே காணப்படும்.

நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டுமெனின் நீர் வடிப்பை மேம்படுத்த வேண்டும்.

இலங்கையின் மண் வகைகள்



இலங்கையின் மண் வகைகள் - SriLanka Soil Types

பாறைகள் சிதவடைவதால் உருவாகிய நுண்ணிய துகள்கள் மண் எனப்படுகின்றன. மண்ணின் முக்கியத்துவமானது இன்று பல வழிகளில் எடுத்துக் காட்டப்படுகின்றது. ஓர் உயிர் வாழ்வதற்கும் அதன் அன்றாட செயற்பாட்டிற்கும் பயிர்வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்குகின்றது. அதுபோல் சூழல் சுற்றுவட்ட செயற்பாட்டிலும் மண் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதனால் மண் தாவரங்களின் ஊடகமாகவும், விலங்குகளின் வீடாகவும் போசாக்கான மீழ்சுழற்சி ஒழுங்குத் தொழிற்பாடுகளுக்கு உதவியாகவும், பொறியியல் ஊடகமாகவும் தொழிற்படுகின்றது என்று கூறலாம்.

 
மண் உருவாக்கமானது வானிலையாலழிதல், பக்கப்பார்வை விருத்தி ஆகிய செயன்முறைகளின மூலம் விருத்தி செய்யப்படுகின்றது. மண் உருவாக்கத்தில் தாய்ப்பாறை, காலம், காலநிலை, தரைத்தோற்றம், உயிரியல் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றனவாக உள்ளன.
  இலங்கையின் பிரதான மண் வகைகளின் விருத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய ஏதுவாக காலநிலை நிலவுகின்றது. எனவேதான் இலங்கையின் மண்வகைகளை ஆராய்ந்து அடையாளம் கண்ட  C.R. பாணபொக்கே இலங்கையின் காலநிலை வலயங்களுக்கு இணங்க மண் வகைகளை இனங்கண்டுள்ளார். 
 
தேசிய மண் அளவீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் நீர்ப்பாசனத் தினைக்களத்தைச் சேர்ந்திருந்த நிலப்பயன்பாட்டுப் பிரிவு மண் அளவீடு ஒன்றினை   1960-1970களில்                                 C.R.பாணபொக்கே  தலைமையில் மேற்கொண்டது. அந்த அளவீட்டின் பிரகாரம் உலர்வலயத்திலும் ஓரளவு உலர்- இடைவலயத்திலும் 15 மண்வகைகள் அடையாளம் காணப்பட்டன. ஈரவலயத்திலும் ஓரளவு ஈர-இடைவலயத்திலும் 12 மண் வகைகள் அடையாளம் காணப்பட்டன. இவற்றை விட இலங்கையெங்கும் பரவலாக நான்கு வகையான நில அலகுகள் அடையாளம் காணப்பட்டன. ஆக மொத்தம் 31 மண் அலகுகள் இலங்கையின் மண்வகைகள் என்ற படத்தில் குறிக்கப்பட்டன.

இவ்வாறு பாணபொக்கே அவர்களால் 31 மண் அலகுகள் இலங்கை முழுவதிலும் அடையாளப்படுத்தப்பட்டன. பின்னர் 1975 களில் அவை 12 அல்லது 14 பிரதான பிரிவுகளாகப் பிரித்து நோக்கப்பட்டது. அந்தவகையில் பிரதான 14 மண் வகைகளும் அவற்றின் பண்புகள் மற்றும் முக்கியத்துவம் அல்லது அவற்றின் பயன்பாடு என்பவற்றை இங்கு நோக்கலாம்.
1. செங்கபில நிறமண்:-
 
மழைவீழ்ச்சி மிகக் குறைவாகவுள்ள இலங்கையின் உலர்வலயப் பிரதேசங்களில் இது பரவிக் காணப்படுகின்றது. அதாவது வவனியா, அநுராதபுரம், பொலநறுவை, அம்பாந்தோடடடை, மொனராகலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது. இம் மண் நுண்ணிய இழையமைப்பையும், மிதமான அமித்தன்மையையும் உடையது. இது ஈரமாயிரக்கும்போது  இளகி ஒட்டும் தன்மையுடனும், காய்ந்திருக்கும்போது  இறுகிக் கடியமானதாகவும் காணப்படும். இங்கு சேனைப் பயிhச்செய்கை, நெற்செய்கை என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
 2. செம்மஞ்சள் பொட்சோலிக் மண் (செம்பூரன் ஈரக்களிமண்):-
 
மத்திய மலைநாட்டின் பெரும்பகுதியையும், தென்மேல் தாழ்நிலத்தின் மேற்கயர் பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் செம்மஞ்சள் பொட்சோலிக் மண் பரந்துள்ளது. குறிப்பாக இம்மண்ணானது குருநாகல், கொழும்பு, கம்பகா, கழுத்துறை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. மென்சாய்வான மலைசார்ந்த பகுதிகளிலெ பூரண வடிதலுக்கட்பட்டும், சிவப்பு மஞ்சள் நிறத்தைக் கொண்டும் ஓரளவுக்கு நுண் இழைகளைக் கொண்டும்அ அடர்த்தியான திரவத்தைக் கொண்டும் விளங்கும் மண் இதுவாகும். இம்மண்ணில் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
3. செம்மஞ்சள் லற்றோசல் :- 
 
செம்மஞ்சள் லற்றோசல் மண்ணானது  புத்தளத்தின் வடகீழ் பகுதி, சில வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் என்பவற்றில் காணப்படுகின்றது. இம்மண்ணானது மிகவும் ஆழமாக பொதுவாக 6மீற்றர் ஆழத்தில் காணப்படும். இடைநிலைத் தன்மை கொண்ட இழையமைப்பையும், நன்கு நீர்வடிந்து செல்லக்கூடிய தன்மையையும் உடையது. குழாய்கிகணறுகள் மூலம் நீhப்பசனம் செய்யக்கூடிய தரைக்கீழ் நீhவளத்தைக் கொண்டுள்ளமையால் நீர்ப்பாசனத்துடன் இடம்பெறுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும்.

4. 
கல்சியமற்ற கபிலநிறமண்:-
 
வரண்ட பிரதேச மலைச்சரிவுகள், கிழக்குத் தாழ்நிலப் பகுதிகளில் கல்சியமற்ற கபில நிறமண் காணப்படுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு, பொலநறுவையின் கிழக்குப் பகுதி, அநுராதபுரம்வடக்கு குருநாகல், மொனராகலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. இம்மண்னானது செங்கபில நிறமண்ணுடன் இணைந்த வகையில் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இடைத்தரமான இழையமைப்புடனும், மட்டுப்படுத்தப்பட்ட நீரை வடியவிடும் இயல்பையம் கொண்டது. செங்கபில நிறமண் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பயிhச்செய்கை நடவடிக்கைகளை இம்மண்ணிலும் மேற்கொள்ளக்கூடியதாகவிருந்தாலும், இம்மண்ணானது கூடிய நீர்ப்பாசனம், மற்றும் உர உபயோகம் என்பவற்றை வேண்டி நிற்கின்றது.
5. செங்கபிலநிற லற்றோசோலிக் மண் (செங்கபில ஈரக்களிமண்):-
 
செங்கபில ஈரக்களிமண்ணானது கண்டிமேட்டுநிலம், நுவரெலியா, கல்கெதர, மாவனெல்ல, மிட்டினியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. பூரணம் முதல் மத்திமம் வரையான வடிதலக்குட்பட்ட செங்கபில நிறமான மத்திம இழைகளைக் கொண்ட அமிலச் செறிவு கொண்ட மண்இதுவாகும். பள்ளத்தாக்கின் அடிமட்டம் மதல் கன்றகள் நிலத்தோற்றம் லரை பரந்துள்ளது. இம் மண் பயிhகளில் பெருந்தோட்டப் பயிhகளான தேயிலை, இறப்பர் போன்றவற்றுடன் வேறுபல பயிர்வகைகளும் வளர்கின்றன.
6. முதிர்ச்சியில்லாக் கபிலநிறமண்:-
 
முதிராக் கபிலநிறமண்ணானது மலைநாட்டின் கண்டி, மாத்தளை, மாவனெல்ல போன்ற ஈரவலய பகுதிகளிலும் , உலர்வலயத்தின்  அம்பாறையின் மேற்கு எல்லை, பதுளையின் வடகிழக்கு எல்லை போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றது. அதிக ஆழமற்ற, பூரண வடிதலுக்குட்பட்ட, கடும் கபில நிறம் முதல் மஞ்சள் கலந்த கபில நிறம் வரையான நிறமாறுபாட கொண்டதாகவும், மத்திம இழையமைப்பையும், ஓரளவுக்கு அமிலத்ன்மை வாய்ந்ததாகவம் இம் மண் விளங்குகின்றது.
 
 
 
செங்குத்தான தேய்ந்த சாய்வகள் முதல் இன்று நிலத்தோற்றம் வரை இம்மண் பரந்தள்ளது. காட்டுவளப்பிற்கு எற்றதாகும். அத்துடன் நிhப்பாசன வசதியுடன் காய்கறிப் பயிhச்செய்கை மேற்கொள்ளலாம்.
7. அண்மைக்கால மணல் மண் (மணல்சார் றெகோசோல்ஸ்):-
 
இலங்கையின் கரையோரங்களில் அண்மைக்கால மணற்படிவுகளைக் காணலாம். இவை கடலோரங்களில் மணற்குன்றுகளாகவும், கடற்கரைகளாகவும் உருப்பெறுகின்றனஅதிகமாக யாழ்ப்பாணம் மெற்க கரையோரம், தலைமன்னார், கற்பிட்டி, மட்டக்களப்பு மதலான கரையோரங்களில் இவ்வகை மண் காணப்படுகின்றது. இம் மண் மிகவும் ஆழமானதாகும் அதாவத 3 மீற்றருக்கு மேற்பட்ட தடிப்பையுடையதாகும். வெள்ளை நிறத்துடனும், தனி மணியுருத் தன்மையான இழையமைப்புடனும் காணப்படுகின்றது. நீர் வடிந்த செல்லும் தன்மை அதிகமாகக் இம் மண் கொண்டுள்ளது.. வரண்ட வலயத்தில் மரமுந்திரிகைப் பயிhச்செய்கைக்கும், ஈரவலயங்களில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றது.
8. வண்டல் மண்:-
 
நீரினால் அரித்துக் காவி வரப்பட்ட அடையல்களானது நதிப்பள்ளதாக்குகள், நதி வடிநிலங்கள் என்பவற்றில் வண்டல் மண்ணாகப் படிந்துள்ளன. மண் இழையமைப்பானது மணல் தன்மை முதற்கொண்டு களித்தன்மை வரையில் காணப்படுகின்றது. மண்ணின் நிறமானது வெள்ளை, செங்கபிலம், சாம்பல், கறுப்பு எனப் பலவாகும். அத்துடன் இம்மண்ணின் நீhவடிந்து செல்லும் தன்மை அதிகளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

 
நீர் அதிகம் வடிந்து செல்லாத களித்தன்மை கொண்ட மண் நெற் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாகும். மென்மையான இழையமைப்பைக் கொண்ட மண் உப உணவுப் யிhச்செய்கைக்கு உகந்ததாகவம் காணப்படுகின்றது.
9. கருமண்(கிரமுசோல்ஸ்):-
 
இது கரும் பருத்தி மண் எனவும்  கிரமுசோல்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்வகை மண்ணானது முருங்கன், கெட்டிபொல(மாத்தறை), அம்பேவில(ரத்னபுரி) போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது. இது பருத்திப் பயிhச்செய்கைக்கும், நெற்பயிhச்செய்கைக்கும் ஏற்றது.
10. உவர்நிலமண்(சொலோடைஸ் சொலோநெற்ஸ்):-
 
சொலோடைஸ் சொலோநெற்ஸ் எனப்படும் உவர்நில மண் வகைகளைக் கரையோரக் களப்புக்களையடுத்துக் காணலாம்குறிப்பாக மகாவலி பி பிரதேசத்தின் கிழக்கு மற்றும் உள்ளக சமவெளிகள் (கண்டக்காடுதிரிகோணமடு) போன்ற பகுதிகளிலும் ஆணையிறவு, பூநகரி போன்ற பகுதிகளிலும் காணலாம்கபில நிறத்திலிருந்து கடும் கபில நிறம் வரை காணப்படுகின்றது. மண்ணின் இழையமைப்பு கரடு முரடானதாக இல்லாமலும் அமிலத்தன்மை குறைந்த மண்ணாகவும் காணப்படுகின்றது. இது காரத்தன்மையுடையதாயினும் இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தி நெற்பயிhச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
11. சதுப்பு நில மண்:-
சதுப்பு நில மண்ணானது கரையோரம் சார்ந்த நீர் தேங்கிநிற்கும் சேற்றுப் பாங்கான பகுதிகளில் குறைந்தளவு வடிதலுக்குட்பட்ட இம்மண் காணப்படுகின்றதுகுறிப்பாக கொழும்பு, கழுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் உள்ள சதுப்ப நிலங்களில் காணப்படுகின்றது. குறைந்தளவு வடிதலுக்குட்பட்ட மண் மேற்பரப்பப் படையானது கடும் கபில நிறம் முதல் கறுப்பு சேதனப் பொருட்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இம்மண் நெல் மற்றும் நாணற்புல் உற்பத்திக்கு பொருத்தமானதாகும்.
12. செம்மஞ்சள் மண்மீதுள்ள லற்றோசோல் மணல்சார்ந்த மண்:-
 
இவ்வகை மண்ணானது மாதம்பை, நீர்கொழும்பு ஆகிய தாழ்நில ஈரவலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.
13. கைவிடப்பட்ட நீர் நிலைகளில் படிந்துள்ள கியுமிக் மண்:- 
 
இவ்வகை மண்ணானது ஈரவலயத்திலும் உலர்வலயத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக மத்தியமலைநாட்டின் கிழக்குப் பகுதிகளில் இது காணப்படுகின்றது. கைவிடப்பட்ட நீர்நிலைகளில் இவ்வகை கியுமிக் மண்கள் படிந்துள்ளன.
14. கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல்:-
 
கல்சியம் நிநை; செம்மஞ்சள் லற்றோசல் மண்ணனாது பெரிதும் செம்மஞ்சள் லற்றோசல் மண்வகையை ஒத்தாகும். இருப்பினும் இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு கல்சியம் நிறைந்த செம்மஞ்சள் லற்றோசல் மண்ணானது ஒரு சில சென்ரி மீற்றர்கள் தொடக்கம் பல மீற்றர்கள் வரையில் ஆழத்தில் வேறுபடுகின்ற  சுண்ணாம்புக் கற்களை அடியில் கொண்டுள்ளமையே ஆகும். நீர்ப்பாசனம் செய்யப்படுகின்ற உப உணவுப் பயிர்ச்செய்கைக்கு இம்மண் மிகவும் பொருத்தமானதாகும்.