http://subs.epaper.lk/Epaper_Digital/Read/13/9/1725#dflip-flipbookContainer/6/
கல்விக்கதிர்
Friday, August 30, 2024
சுயநலமிக்க மனிதர்கள் (காலநிலைமாற்றம் பாகம் -2)
http://subs.epaper.lk/Epaper_Digital/Read/13/9/1722#dflip-flipbookContainer/5/
http://subs.epaper.lk/Epaper_Digital/Read/13/9/1722#dflip-flipbookContainer/5/
சுயநலமிக்க மனிதர்கள் (காலநிலைமாற்றம் பாகம் -1)
http://subs.epaper.lk/Epaper_Digital/Read/13/9/1721#dflip-flipbookContainer/5/
http://subs.epaper.lk/Epaper_Digital/Read/13/9/1721#dflip-flipbookContainer/5/
Thursday, April 25, 2024
சங்ககால இலக்கியங்களில் வெளிப்படுகின்ற அறிவியல் வெளிப்பாடுகள்.
சங்ககால இலக்கியங்களில் வெளிப்படுகின்ற அறிவியல் வெளிப்பாடுகள்.
தமிழர்களின் வரலாற்றையும் பெருமையினையும் பறைசாற்றும் வகையாக பல்வேறுவிதமான இலக்கியப்படைப்புக்களும், தொல்லியல் ஆய்வுகளும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அவையனைத்தும் தழிழ் மரபினை மேலும் சிறப்படைய செய்வதுடன் தமிழின் தொன்மையை உலகறியச்செய்துள்ளது. தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலமாகவும் முதன்மைக்காலமாகவும் சங்ககாலம் காணப்படுகின்றது இக்கால இலக்கியப்படைப்புகளில் இயற்கையின் வெளிப்பாட்டினூடாக காதலும் வீரமும் வெளிப்பட்டு நிற்கின்றது. இப்படைப்புக்கள் அக்கால தமிழர் மரபின் வாழ்க்கை வரலாற்றை பறை சாற்றி காலத்தின் கண்ணாடியாக வெளிப்படுவதோடு. அவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துக்களும் அதிகமாக வெளிப்பட்டு காணப்படுகின்றது. இக்கால இலக்கியப்படைபு;புகளை வகைப்படுத்தும் போது அவற்றுள் பதினெண் நூல்கள் உள்ளடக்கப்படுகின்றது. அப்பதினெண் மேற்கணக்கு நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சங்ககால நூலில் காணப்படும் அறிவியல் கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை காணப்படுகின்றது.
இவ்விலக்கியங்களில் உயிரியல் சார்ந்த கருத்துக்களும்,மானுடவியல் சார்ந்த கருத்துக்களும் நிலத்தோற்றம் சார்ந்த கருத்துக்களும் காணப்படுகின்றது. இவை அனைத்தும் அறிவியல் கோட்பாடுகளை அடியொற்றி காணப்பட்டுள்ளமை இவ்விலக்கிய பாடல்களின் ஊடாக கண்டுகொள்ள முடியும். நாம் வாழும் புவியின் தோற்றம் பற்றிக்கூறும் பொழுது பெருவெடிப்பு கொள்கையூடாக அவை எடுத்துரைக்கப்படுகின்றது. இப்பெரு வெடிப்பு கொள்கையினை (டீபை டியபெ வாநழசல ) என்பர். உலக அறிவியல் சமுகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக காணப்படுகின்ற இக்கொள்கை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. இக்கொள்கை ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடுகளையும் (புநநெசயட வுhநழசல ழக சுநடயவiஎவைல)இ அண்டவியல் கொள்கையையும் ( ஊழளஅழடழபல) அடியொற்றி தோற்றம் பெற்றது. அண்டவெளியில் உள்ள பொருட்கள் வெப்பத்தின் காரணமாக விரிவடைந்து வெடித்து சிதறின எனவும் அவை அண்டவெளியில் பரவி அசையத் தொடங்கின எனவும் பெருவெடிப்பு கொள்கையை சுருக்கமாக கூறமுடியும். இப்பெரு வெடிப்பின் போது வெளிப்பட்ட தீக்குழம்பும், அவற்றின் காரணமாக தோற்றம் பெற்ற புகை மண்டலங்களும், கோள்களின் மேற்பரப்பில் தோற்றம் பெற்ற நிலத்திணிவுகளும், அதன் பின்பு கிடைக்கப்பெற்ற பெரு மழையும் அதனால் தோன்றிய சமுத்திரங்களும். நீர் பரப்பில் உயிரின தோற்றங்களும் என இக்கோள் மண்டலங்களின் வளர்ச்சிநிலை கூறப்படுகின்றது. இவ்வாறு கூறப்பட்ட பௌதீக அம்சங்கள் அனைத்தும் தமிழர் மரபில் பஞ்சபூதங்கள் எனப்படுகின்றது. கடவுளாக போற்றப்படும் பஞ்ச பூதங்களை விஞ்ஞான உலகம் பௌதீக அம்சங்கள் என கூறிச்செல்கின்றது. குறிப்பாக புவியியல் பாடப்பரப்பில் இவை அனைத்தும் பௌதீப்புவியியல் (Phலளiஉயட புநழபசயிhல) வகைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சங்ககால இலக்கியமான புறநானுற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் எனும் புலவரின் போரும் சோறும்! எனும் பாடலில் ஐம்பூதங்கள் பற்றி பாடுகின்றார்.
'மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்...' (புறநானுறு -2)
ஐம்பெரும் பூதங்களான நிலத்தையும், வானையும், காற்றையும்,நெருப்பையும், நீரையும் உலகம் கொண்டுள்ளது என குறிப்பிடுகின்றார். அது மட்டுமன்றி மணல் நிறைந்த நிலத்தையும் அதன் மீதுள்ள ஆகாயத்தையும், ஆகாயத்தில் தோன்றிய காற்றையும், காற்றினால் உண்டாகிய நெருப்பையும் நெருப்பினால் உண்டானது நீரும் எனவும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு புலவன் கூறும் உலகத்தின் பஞ்ச பூத தோற்றம் பற்றிய கருத்து இன்றைய ஆய்வாளர்களால் கூறப்படும் பெருவெடிப்பின் பின் நிகழ்ந்ததாக சொல்லப்படும் செயற்பாடுகளுக்கு ஒப்பானதாக காணப்படுகின்றது. இப்பெருவெடிப்பு கொள்கையின் முடிவுகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்த பட்டது ஆனால் இவர்கள் கூறும் கோடபாடுகளை கி.பி மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முட்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த சங்கப்புலவர்கள் கூறியுள்ளமை தமிழர் பாரம்பரியத்தின் அறிவியல் வெளிப்பாடுகளையும். அதன் ஆற்றலையும் கோடிட்டு காட்டுகின்றது.
இவ்வாறு பெருவெடிப்பின் ஊடாக தோற்றம் பெற்றதாக கூறப்படும் கோள்மண்டலம் அண்டவெளியில் மிதந்த வண்ணம் அசைந்து கொண்டு உள்ளது. அவை தன்னை தானாக சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றியும் வருகின்றது. அவ்வாறு சூரியனை சுற்றி வரும் இக்கோள்கள் ஈர்ப்பு விசை(புசயஎவைல) காரணமாக தன்னிடம் விட்டு விலகாமல் தமக்கான வட்டப்பாதையில் பயணிக்கின்றன. அவ்வாறு பயணம் செய்யும் பாதையினை நீள்வட்டப்பாதை என்பர். இவ்வாறான வானியல் செயல்பாட்டை சங்க காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவர்களின் பாடலில் அறியலாம். தலைவனின் இயல்பைப்பற்றி கூறும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பின்வறுமாறு கூறுகின்றார்.
'செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை....' (புறநானூறு 30)
இப்பாடலின் ஊடாக ஞாயிற்றுக்கோள் மண்டலத்தின் பயணப்பாதைகளும்,நீள்வட்ட பாதைகளின் செயற்பாடும்,அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கம் நடைபெறுகின்ற அண்டவெளி மண்டலமும் காற்று செல்லும் திசையும், ஆகாயமின்றி நிற்கும் வானமும் அவற்றின் வழி இயங்கிகொண்டுள்ள காற்று மண்டலம் பற்றியும் தாமே நேரில் சென்று கண்டவர் போல் பேசும் திறன்கொண்டவர் இங்குள்ளர் என புலவன் பாடிச்செல்கின்றார். இவ்வாறு புலவன் கூறிய வார்த்தைகள் நேரடியாக தலைவனின் தன்னிறைவை கூறுவதுடன். மறைமுகமாக விண்ணியல்(யுளவசழழெஅல) சார்பான கருத்துக்களையும் ஆழமாக எடுத்துரைக்கின்றது.
இப்பாடலில் உள்ள '...அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்...' எனு பாடல் வரியில் அந்த ஞாயிறு மண்டலம் சுமக்கின்ற சுமைகள் என கூறுகின்றார். இப்புலவனின் கருத்தானது இன்றைய விண்ணியல் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அழிக்ககூடிய விடையமாக உள்ளது. வெற்று கண்களால் நோக்கமுடியாது தொலைநோக்கிகளைக் கொண்டு நோக்கும் இன்றைய விஞ்ஞானிகளுக்கு ஒப்பான கருத்தை தன்னுடைய பாடலில் பாடியுள்ளார். வானில் கோள்கள் மட்டுமல்ல அவற்றினை விட பல சடப்பொருட்களை இவ் விண்மண்டலம் சுமந்து செல்கின்றது என்பதை மேற்கொண்ட அடிகளில் கூறிச்செல்கின்றார் சங்கப்புலவர்.
'ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
குடைக் குளத்துக் கயம் காயப... ' (புறநானூறு 229)
எனும் பாடலில் நட்சத்திரங்கள் வானில் தோன்றும் தோற்றம் பற்றி பேசப்படுகின்றது. இப்பாடலில் மேட ராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின் கண்நிறைந்த இருள் கொண்ட பாதி இரவு பங்குனி மாதத்து நடுப் பகுதியையொட்டி செறிந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில். வளைந்த பனை போன்ற தோற்றம் உடைய அனுச மீன் கூட்டத்தினை அடுத்து வருகின்ற கோட்டை மீன் தொடங்கி கயம் எனப்படும் குளம் போல் தோற்றம் அளிக்கும் புனர்பூச மீனுக்கு முன்னதாக உள்ள திருவாதிரை மீன் வரை உள்ள பதின்மூன்று மீன்களும் வானிலே ஒளிவிட்டுதிகழ (கேட்டை,அனுஷம்,விசாகம், சுவாதி,சித்திரை,அஸ்தம்,உத்தரம்,பூரம்,மகம்,ஆயில்யம்,பூசம்,புனர்பூசம்,திருவாதிரை) அப்பொழுது வானின் உச்சியில் இருந்த உத்தரம் என்னும் மீன் அவ்வுச்சியிலிருந்து மேல் திசை நோக்கி சாய்ந்தது அதே நேரத்தில் அந்த உத்தர மீனிலிருந்து எட்டாவதாக வரும் மூலம் மீன் கீழ் திசையில் அடிவானத்தில் எழுந்தது. அந்த உத்தர மீனுக்கு முன்னதாக மேல் திசை நோக்கி நகர்ந்து சென்றவற்றுள் எட்டாவதாக அமையும் மீனாகிய மிருககீரிடம் அடிவானில் மறையும் அந்நேரத்தில் ஒரு விண்வீழ் கொள்ளியானது கிழக்கும் போகாமல் வடக்கும் போகாமல் வடகிழக்காக கடல் சூழ்ந்த உலகுக்கு விளக்குப் போல் காற்றில் கிளர்ந்து எழுந்து தீர்ரந்து ஆடு போன்ற தோற்றம் உடைய மேட ராசியில் நிலைத்து நிற்கும் கார்த்திகை மீனின் முதலாம் பாதம் நோக்கி விசும்பில் இருந்தது வீழ்ந்தது. அதைக்கண்டு யாமும் பிறரும் பல்வேறு இரவலரும் இது தீய அறிகுறி ஆயிற்றே என்று கவலை கொண்டோம். என இப்பாடலின் பொருள் காணப்படுகின்றது.
இப்பொருளின் தன்மையை மேலோட்டமாக நோக்குமிடத்து நட்சத்திரங்கள் அண்டவெளியல் தோன்றும் வடிவங்களையும் அவற்றின் இடவமைவுகளையும் வெளிப்படையாக கூறிச்செல்கின்றது. ஆனால் உள்ளார்ந்து நோக்கும் போது நட்சத்திரங்களின் இடவமைவுகளுடன் காலத்தின் தன்மைகளும், அவற்றின் வடிவங்களும் வெளிப்பட்டு நிற்கின்றது. இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்ட சங்கப்புலவர்கள் வானியல் அறிவியலிலும் சிறப்பானவர்களாக காணப்பட்டனர் என்பதற்கு இப்பாடல் சான்றாக அமைகின்றது. அவர்களின் சிந்தனையில் வானில் உள்ள நட்சத்திரங்களின்; தோற்றங்களும்,அவற்றின் அசைவுகளும் புவியில் உள்ள உயிரினங்களின் செயற்பாடுகளில் செல்வாக்கை செலுத்துகின்றன என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்களது நம்பிக்கை பழமையானவற்றை அடியொற்றி காணப்பட்டாலும் அவர்கள் கூறும் நட்சத்திர தோற்றகாலங்கள் விஞ்ஞான பூர்வமாக நிருபிக்க தக்கவை . சங்கப்புலவன் கூறும் மாதாங்களும் அக்காலப்பகுதியில் தோற்றம் பெறும் நட்சத்திரங்களின் வடிவங்களும் இன்றும் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்திய தீபகற்ப பகுதியின் தென்பகுதி சார்ந்த நிலப்பகுதியில் வாழும் மக்களால்; இதனை வெற்றுக்கண்களால் நோக்கமுடியும்.
'கழிந்தது பொழிந்து என வான் கண்மாறிலும்
கொல்லது விளைந்து என நிலம் வளம் கரம்பிலும்
எல்லா உயிர்க்கும் இல்லாமல் வாழ்க்கை...'
ஏற்கனவே பொழிந்து கழிந்து விட்டோமே என்று வானம் பெய்யாது போனாலும் ஏற்கனவே விளைந்து விட்டோமே என்று நிலம் தன் வளத்தை ஒளித்துக்கொண்டாலும் எல்லா உயிர்க்கும் வாழ்க்கை இல்லாமல் போய்விடும் இவ்வாறு புலவன் கூறும் பொழுது புவியின் அடிப்படை மண்டலங்களான கற்கோளம் பற்றியும், நீர்க்கோளம் பற்றியும், உயிர்க்கோளம் பற்றியும் பேசப்படுகின்றது. ஆகாயத்தில் இருந்து பெய்யும் மழையூடாகவும் வளிக்கோளம் பற்றி கூறப்படுகின்றது இதனை கூறுவதற்கு 'அவ் வான் கண்மாறிலும்' எனும் பாடல் வரிகள்காணப்படுகின்றது. உயிர்க்கோள இயக்கம் இம்மூன்று மண்டலங்களையும் அடிப்படையாக கொண்டு இயங்கி கொண்டு உள்ளது. இவ்விடயத்தை உறுதிபடுத்தும் வகையில் சங்கப்புலவன் 'எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை...' எனும் அடிகளில் கூறுகின்றார். உயிர்கோளம் எனும் விடையம் பற்றி பேசப்படும் பொழுது வளி,நீர்,நிலம் பற்றியே பேசப்படும் இவைகள் இணைந்தவண்ணமே உயிர்க்கோளம் பற்றி பேசமுடியும் இதனையே ஆய்ந்து அறிந்த சங்கப்புலவர்களும் தமது பாடலில் உயிர்கோளத்தின் இருப்பிற்கான காரணத்தை வெளிப்படுத்தி நிற்கின்றார்.
'விரிகதிர் மதிமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து...' (பரிபாடல் 11)
எனும் பாடல்கலில் நிலவும் ஆகாயம் முழுவதும் வியாபித்துள்ள நாள் என கூறப்படுகின்றது இதனை பௌர்ணமிதினம் (குரடட ஆழழn) என்பர் இத்தினத்தில் கார்த்திகை நட்சத்திரம் அந்த நட்சத்திரம் அந்த நட்சத்திரத்தின் கூட்டங்கள் இடப வீதியை அடிப்படையாக கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து சிவனை பதியாக கொண்ட நட்சத்திரமான திருவாதிரை தன்னுள்ளே கொண்டுள்ளது. மிதுன வீதி யானைக்கு எரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேடவீதி ஆகிய மூன்று வீதிகளைக் கொண்டுள்ளது. தமிழர் மரபில் நவகிரகம் எனப்படும் கோள்மண்டலத்தில் ஒன்பது கோள்கள் உள்ளன அவை மூன்று நட்சத்திரங்கள் என 27 நட்சத்திரங்கள் உள்ளன இவற்றை அடிப்படையாக கொண்டு 12 இரசிகள் பிரிக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் 12 மாதங்கள் கணிக்கப்படுகின்றன. தமிழர் மாதங்களிள் சித்திரையில் தொடக்கம் பெற்று பங்குனியில் நிறைவடைகின்றது. இதனை பாரம்பரியமாக கொண்டு இருந்தாலும் இதனுடன் தொடர்பு பட்ட வகையில் சூரியனின் உச்சம் கொடுத்தல் நிகழ்வுக்கும் சம்பந்தம் உண்டு. சூரியன் மத்திய கோட்டிற்கு உச்சம் கொடுப்பதும் அதனை தொடர்ந்து வட அகலாங்கு நோக்கி பயணிப்பதும் என வருடப்பிறப்புக்கான சூரிய நகர்வு இடம்பெறுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு வருடங்களுக்கான மாதங்களும் கணிக்கப்படுகின்றன.
அண்டத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் மூன்று வீதிகளில் உள்ளன. அவை தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம் இருந்து ஏழு நட்சத்திரங்கள் வீதம் இருப்பத்து ஏழு நட்சத்திரங்கள் பண்ணிரன்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில் தனக்குரிய இடப ராசியை அடைய மேடம் மேஷ ராசியை செவ்வாய் அடைய புதன் மிதுன ராசியில் நிற்க சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்துடன் மேலுள்ள கடகத்தில் இருக்க சனியின் துணை இல்லங்களான மகரம் கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலவை மறைக்க(சந்திரகிரகணம்) அப்படிப்பட்ட நாளில் அகத்தியனுக்கு உரிய நட்சத்திரம் (ஊயnழிரள) மிதுன ராசியை அடைந்தது அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக புவியில் புதுப்புணல் வந்தது. இப்பாடலில் பல அறிவியல் கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. நட்சத்திரங்களின் பயணப்பாதைகளும்( ஆடைமல றயல) அவற்றின் செயற்பாடுகளும் அதனோடு இணைந்த வகையில் புவியில் இடம்பெருகின்ற பருவநிலைகளும் கூறப்படுகின்றது. இவ்வாறு காலங்களின் வருகையும் அவற்றின் மாற்றங்களையும் நட்சத்திரங்கள் கொண்டு அறியும் ஆற்றல் கொண்ட மக்கள் சங்க காலத்தில் காணப்பட்டுள்ளனர். அதனால் அக்காலப்புலவனும் அதனைத் தனது பாடலூடாக வெளிப்படுத்தி நிற்கின்றான்.
மழை பொழியும் போது வானில் இயற்கையினால் வடிகட்டப்பட்டு அனுப்பப்படும் நீர் தூய்மையானது அதனால்தான் புலவன் புதுப்புணல் என கூறுகின்றார். இவ்வாறான இயற்கை நிகழ்வான மழைபற்றி கூறும் சங்கப்புலவர்கள் அதன் சிறப்புகளையும் பற்றிகூறத்தவறவில்லை பதினெண் இலக்கிய வகைப்பாட்டில் முல்லைப்பாட்டு எனும் பாடல் தொகுப்பில் இதனை அறியலாம். முல்லை நிலத்து மக்களின் வாழ்க்கை முறையில் மழை என்பது இரண்டரக்கலந்துள்ளது என்பதை அறியமுடியும்.மழை எனும் இயற்கை நிகழ்வினை அடிப்படையாக கொண்டு காலமும் அதற்கிணங்க அவர்களின் காதலும் வீரமும் வெளிப்பட்டு நிற்கின்றது இதனை பின்வறும் பாடலடிகள் வெளிப்படுத்தியுள்ளன.
'...மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே...'(புறத்திணை 107)
மழையின் செயற்பாட்டை கூறும் அக்காலப் புலவர்கள் அதன் உருவாக்கமுறையையும் அதன் இயல்பையும் கூறிச்செல்கின்றனர். மழையின் சிறப்புகளை கூறும் சந்தர்ப்பங்கள் சங்க இலக்கியங்களில் வியாபித்து காணப்பட்ட போதும் அவற்றின் சிலவற்றை நோக்கலாம். நற்றினை பாடல் பகுதியில் 289ம் பாடலில்
'அம்ம வாழி தோழி காதலர்.....
வானம் நளி கடல் முகத்து செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி
கார் செய்து......'(நற்றிணை 289)
இப்பாடலில் மேகமானது நெருங்கிய கடனீரை முகர்ந்து செறிவு பொருந்த இருண்டு மிக்க மழையைப் பெய்து கடிய குரலைக் காட்டி...என பாடலின் பொருள் செல்கின்து. மேகங்கள் கடல்நீரை நெருங்கி கடல்நீரை உறிஞ்சிக் கொள்கின்றது என புலவன் கூறுகின்றான். இதுவே மழை உருவாகுவதற்கான முதல் செயல்பாடாகும். அதாவது மேற்பரப்பு நீர் ஆவியாதல் என்பதைக் குறிக்கின்றது எனலாம். இவ் நீர் ஆவியாகி கார் மேகங்களை உருவாக்கி இடி மின்னலைத் தருகின்றது. இந்நிகழ்வை அன்றைய புலவர்கள் கூறியமை தமிழின சமுகத்தின் அறிவாற்றலை கூறுகின்றது. அதுபோன்று காற்றில் மிதந்து செல்லும் கார்மேகம் மலைஉச்சிகளில் பட்டு மலையின் காற்றுப்பக்கம் மழையையம் காற்று ஒதுக்குப்பக்கம் வறட்சியையும் ஏற்படுத்தும் இதனால் காற்றுப்பக்கம் தாவரங்களின் செழிப்புத்தன்மை சிறப்பாக காணப்படும் இதனை நற்றினைப்பாடலின் சிலவரிகள் எடுத்துச்சொல்கின்றன.
' கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம் ....' (நற்றிணை)
இவ்வாறு இயற்கையுடன் வாழ்ந்த சங்கப்புலவன் இயற்கையின் நிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானித்து அதனை உணர்த்தும் வகையில் தமது பாடல்களில் வெளிப்படுத்தியும் உள்ளான் இக்கருத்துக்களை மேலும் வழுசேர்க்கும் வகையில் பதித்துப்பற்றில் 12ம் பாடலின் வரிகள் காணப்படுகின்றது.
வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவுடன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்' (பதித்துப்பற்று 12)
பரிபாடல் 12ம் பாடலில் நல்வழுதியார் எனும் புலவர் காற்றும் மின்னலுமாக வானம் கருத்து மேல்மழையில் மழை பெய்யத்தொடங்கியதே என மழை பெய்ய ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வு கூறிக்கொண்டு தான் கூறவந்த பொருளை நோக்கியவாரு பாடல் அடிகளை நகர்த்திச் செல்கின்றார்.
சங்க இலக்கியங்கள் வாழ்வியல் பொருளான காதலையும் வீரத்தையும் கூறிச்செல்வதோடு நின்றுவிடாது புவியின் பௌதீக தண்மைகளையும் அதனோடு இணைந்த இயற்கை செயற்பாட்டையும் கூறிச்செல்கின்றது. இப் பாடலில் இயற்கையின் நிகழ்வுகள் சாதாரணமாக கூறப்பட்டு இருந்தாலும் அவை தமிழரின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் ஆதாரங்களாகவே காணப்படுகின்றது. இன்றைய தழிழ் தலைமுறையினரின் அறிவாற்றலுடன் நோக்கும் போது பழமையான தமிழரின் அறிவாற்றலுக்கு அவை ஒப்பாகுமா என்பது நாம் ஒவ்வருவரும் நமக்குள் கேட்க வேண்டிய கேள்விகளாக உள்ளன. எனவே நமது முன்னோர்கள் பாடிச்சென்ற பாடல்கள் இலக்கியப்படைப்புக்கள் மட்டுமல்ல அவை அறிவின் வெளிப்பபிடுகளாகவும் காணப்படுகின்றது.
லதாகரன்.மயூரன் B.A, MA(GEO),MPhilR
திருகோணமலை
Tuesday, February 7, 2023
பூமியின் ஆழத்தில் மையப்பகுதி சுழல்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்
பூமியின் ஆழத்தில் மையப்பகுதி சுழல்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்
பூமியின் மையப்பகுதியை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்வது என்பது எப்போதும் அறிவியல் ஆய்வுகளில் நீங்காத மர்மமாகவே இருக்கிறது.
ஆனால் சமீப காலப்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் இந்த பூமியின் மையப்பகுதி எப்படி இருக்கும் என்பதையும் , அது எப்படி செயல்படுகிறது என்பதையும் ஓரளவு உறுதிபடுத்த துவங்கியுள்ளனர்.புவிநடுக்க செயற்பாடுகளைம் எரிமலை வெடிப்பின் மூலம் வெளியேற்றப்படும் கனிமங்களையம் அவற்றிற்கு ஆதாரமாக கொண்டனர். இதற்காக அவர்கள் பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர் அதன் மூலமான பல முடிவுகளை அவர்கள் பெற்றுகொண்டனர். அதேசமயம் அதனை முழுமையாக புரிந்துகொள்வது தற்போதைய விஞ்ஞான உலகில் இயலாத காரியமாக இருக்கிறது.
. தற்போது பூமிக்கு கீழ் 12கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் core என்று அழைக்கப்படும் பூமியின் அடிஆழ மையப்பகுதியானது மேற்பரப்பு நில பகுதியிலிருந்து கீழே மொத்தம் 5000 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுகுறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியானால், பூமிக்கு அடி ஆழத்தில் இருக்கும் பகுதி குறித்தும் அதில் நடக்கும் மாற்றங்கள் இங்கே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் புதிய கோணங்களில் நமது பார்வையை விரிவுப்படுத்தலாம்.
பூமியின் மையப்பகுதியில் இருக்கும் அந்த அடி ஆழப்பகுதியின் சுற்று வேகம் தற்போது குறைய துவங்கியுள்ளதாகவும், அது இனி வரும் காலங்களில் எதிர்திசையில் சுற்ற துவங்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியின் முடிவுகளில் கணித்துள்ளனர்.
உண்மையில் பூமி குறித்த இந்த ஆராய்ச்சிகள் முக்கியமானதா?
பூமியின் மூன்று அடுக்குகள் என்னென்ன?
பூமியை பற்றிய ஆராய்ச்சிகளை எளிதாக புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் பூமியின் வெவ்வேறு அடுக்குகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.பூமியின் அமைப்பு என்பது பூமியின் மேற்பரப்பு பகுதி (Crust), மேண்டில் (Mantle - மேற்பரப்பிற்கும் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட குளிர்ந்த பாறைகளினால் ஆன திடப்பகுதி ) மற்றும் மையப்பகுதி (core) என்னும் மூன்று வெவ்வேறு அடுக்குகளினால் அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதை இன்னும் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால் பூமியை நாம் முட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அதாவது பூமியின் மேற்பரப்பு பகுதியை முட்டை ஓடாகவும், மேண்டில் பகுதியை வெள்ளை கருவாகவும் மற்றும் மையப்பகுதியை மஞ்சள் கருவாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.பூமியின் உள் மையப்பகுதியானது இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருண்டையான வடிவில் காணப்படுகிறது. அதனுடைய ஆரம் (radius) சுமார் 1221கிமீ தொலைவிற்கு இருக்கிறது. இதன் வெப்பநிலை 5400டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளது. இது கிட்டதட்ட சூரியனுக்கு நிகரான வெப்பநிலையில் (5700 டிகிரி) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இது மிகவும் ஆழமான அமைப்பை கொண்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் இந்த மையப்பகுதியானது பூமியின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கிறது என்றும், ஒருவகையான உலோக திரவங்களால் இது பூமியில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது எனவும் கூறப்பட்டது. அதாவது பூமிக்கு உள்ளே இது தனித்து சுற்றுகிறது எனவும் இதற்கும் பூமியின் மற்ற பகுதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது.
ஆனால் பூமியின் இந்த மையப்பகுதி எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்வதில் பல தசாப்தங்களாக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விவாதங்கள் தொடர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை நிலை.
மையப்பகுதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்னென்ன?
நிலநடுக்கத்தின் போது ஏற்படும் நில அதிர்ச்சி அலைகள் (seismic waves) மூலமாக பூமியை துளையிடாமலேயே பூமியின் மையப்பகுதி குறித்து அறிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் தற்போது வந்துள்ளனர். பூமியின் மேற்பரப்பில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது இந்த நில அதிர்ச்சி அலைகளின் ஆற்றல்கள் பூமியின் உள் மையப்பகுதி வரை கடத்தப்பட்டு மீண்டும் மேற்பரப்பிற்கு பாய்ந்து வருகிறது. அப்படி பூமியின் உட்பகுதி வரை சென்று மேற்பரப்பிற்கு திரும்ப வரும் இந்த நில அதிர்ச்சி அலைகளுடைய ஆற்றல்களின் வழி தடங்களை பெக்கிங் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களான சாங்க் சியோடாங் மற்றும் யங் யீ ஆகியோர் ஆராய்ந்து வந்தனர்.
பல ஆண்டுகளாக மேற்கொள்ளபட்டு வந்த இந்த ஆராய்ச்சிகளின் மூலம், ‘கடந்த சில தசாப்தங்களாக இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை’ அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் உள் மையப்பகுதியானது தான் சுற்றுவதை தற்போது நிறுத்திவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அதேப்போல பல தசாப்தங்களாக சுற்றிவரும் இந்த மையப்பகுதியானது முதல் சில காலங்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலும், அடுத்த சில காலங்கள் மற்றொரு திசையிலும் சுற்றி வருவதாக அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களின் கணிப்புப்படி பூமியின் மையப்பகுதி 1970 காலக்கட்டங்களில் தனது சுற்று திசையை கடைசியாக மாற்றியுள்ளது என்றும், இதற்கு அடுத்து 2040ஆம் ஆண்டு மீண்டும் தனது சுற்று திசையை மாற்றிக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளின் நீளத்தில் (Length of a Day) நிகழும் சில மாற்றங்களின்போது பூமியின் உள்மையப்பகுதியில் நிகழும் இந்த சுழற்சிகளும் அரிதாக ஒத்துப்போகிறது. அதாவது பூமி அதனுடைய பாதையில் சுழலும்போது அதன் நேரங்களில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ஆகும்.
இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன ?
பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் இந்த மாற்றங்களானது பூமியின் மேற்பரப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.அதாவது பூமியின் மேல் நாம் செல்லும் திசைகளின் நீளத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலும், ஒரு நாளின் சராசரியான காலநேரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையிலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாற்றங்களுக்கு காந்த மண்டலம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அண்டத்தில் பூமி தனது பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும்போது, பூமிக்குள் உலோகங்களால் ஆன அதன் மையப்பகுதியும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இயக்கங்களினால் பூமியை சுற்றி ஒரு காந்த சக்தி உருவாகிறது. அதுவே காந்த மண்டலம் என கூறப்படுகிறது.
இந்த காந்த மண்டலத்தின் கதிர்வீச்சுகள் சூரியனிலிருந்து பூமியை காக்கும் அரணாக திகழ்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த காந்த மண்டலமானது பூமி தனது பாதையில் சுற்றி வரும் நேர அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது நமது நாளின் நீளங்களை தீர்மானிப்பதிலும் காந்தமண்டலம் பங்கு வகிக்கிறது."இந்த வித்தியாசங்களை எல்லாம் நாம் உணர்வதற்கு புவியியல் பதிவிற்கும், புதைப்படிவ பவளப்பாறைகளுக்கும்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். அதேப்போல் பூமி வேகமாக சுழலும்போது அதனுடைய நாட்களின் நீளங்கள் குறைவடைகிறது. மெசோசோயிக் காலத்தில் (Mesozoic Era)அதனுடைய நாட்களின் நீளம் 23 நேரமாகவே இருந்துள்ளது என்று குறிப்பிடுகிறது Institute of Geosciences of the Complutense University of Madrid”.
பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் இந்த மாற்றங்களின் காரணமாக வரலாற்றின் அனைத்து காலகட்டங்களிலுமே அண்டத்தில் சுற்றிவரும் பூமி தனது பாதையில் தொடர்ச்சியாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது.அதேப்போல் சமீப ஆண்டுகளாக பூமியின் வட காந்த துருவத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் விளைவாக பூமியின் மேற்பரப்புகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வணிகம், ராணுவம் மற்றும் கப்பல் வழிதடங்களில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ஆனால் அந்த மாற்றங்கள் எந்த அளவு ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்வது குறித்து சாங்க் சியோடாங் மற்றும் யங் யீ போன்ற ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.இவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளின் முடிவுரைகளை தீர்மானிப்பதற்கு முன்னால் இதுகுறித்து மற்றவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்தும் படிக்க வேண்டும் என மற்ற ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கலிஃபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் விடாலே இதுகுறித்து கூறும்போது, ‘பூமியின் மையப்பகுதியில் ஏதே ஒன்று நிகழ்ந்துக்கொண்டிருப்பது என்பது உண்மைதான். ஆனால் அது என்னவென்று தீர்மானிப்பதற்கு நமக்கு நிறைய ஆதாரங்கள் தேவை. அதற்கு இன்னும் பல தசாப்தங்கள் ஆகலாம்’ என்று கூறுகிறார்.
Monday, September 16, 2019
மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
Sunday, March 31, 2019
பாரதியின் பாடல்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பெருமகன்
பாரதியின் பாடல்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பெருமகன்
Tuesday, March 12, 2019
பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்
பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்
Thursday, January 10, 2019
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள்.
பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
மூன்றாண்டு ஆய்வுக்குப் பின் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் (IPCC) விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தென்கொரியாவில் நடந்தது. இதற்குப் பின் 1.5 செல்சியஸ் வெப்ப அதிகரிப்பு பருவநிலையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குமென சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்ட
இந்த பேச்சுவார்த்தையில் அறிவியலாளர்கள் பருவநிலை குறித்த தங்கள் ஆய்வை முன்வைத்து பேசினர், அரசு பிரதிநிதிகள் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை முன்வைத்து தங்கள் தரப்பை விளக்கினர். பொருளாதாரத்துக்காக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தவிர்க்க முடியாத சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
"புவி வெப்ப அதிகரிப்பை 2 செல்சியஸாக குறைப்பதற்கு பதிலாக 1.5 செல்சியஸில் நிறுத்துவது பல நல்ல பலன்களை தருகிறது" என்கிறார் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் இணை தலைவர் பேராசிரியர் ஜிம் ஸ்கே.
1.5 செல்சியஸாக நாம் வெப்பத்தை குறைக்க, நாம் நிலத்தை நிர்வகிப்பதில், எரிசக்தி பயன்பாட்டில் மற்றும் போக்குவரத்தில் நாம் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்கிறார் ஜிம்.
1.5 செல்சியஸாக நாம் வெப்ப அதிகரிப்பை குறைக்க என்ன வழிகள்?
1.2030க்குள் உலகில் வெளியேற்றம் 45 சதவீதம் குறையவேண்டும்.
2.புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் (சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி போன்றவை) 2050க்குள் 85% ஆக இருக்க வேண்டும்.
3.நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
4.எரிசக்தி உற்பத்திக்கு உதவும் பயிர் வகைகளுக்காக 7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலம் தேவைப்படும். (இந்தப் பரப்பளவு ஆஸ்திரேலிய கண்டத்தைவிட சற்று சிறியது.)
நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னவாகும்?
1.5 செல்சியசுக்கு கீழ் புவியின் வெப்பத்தை குறைக்க நாம் தவறிவிட்டால், சில அபாயகரமான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
2 டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்தால், கடல் நீரின் வெப்பம் அதிகரித்து பவள பாறைகள் இல்லாமல் போய்விடும்.
அதே போல, 2 டிகிரிக்கு மேல் புவி வெப்பமாகும்போது, கடலின் நீர்மட்டம் 10 சென்டிமீட்டர் அளவிற்கு உயரும். இதனால் உலகில் பல இடங்களில் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழுமிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும்.
கடலின் வெப்பநிலை மற்றும் அமிலத்தன்மையின் மாற்றம் ஏற்பட்டு, நெல், சோளம் மற்றும் கோதுமைப் பயிர்கள் வளர்வதில் தாக்கம் ஏற்படும்.
ல.த.மயூரன்
நன்றி.....BBC