Tuesday, March 19, 2013

வெப்பமடையும் பூமி



வெப்பமடையும் பூமி!

பூமியில் நாம் வாழ்வது என்பது சூரிய வெளிச்சம், நிலம், நீர், வான்வெளி போன்றவற்றின் உதவியுடன்தான் நடைபெறுகிறது. தற்பொழுது சுற்றுப்புறச் சூழலிலும், சூழலியல் சமன்பாட்டிலும் மிகுதியான பாதிப்-புகள் ஏற்பட்டு வருவதால் நம் வாழ்க்கை-யானது அச்சுறுத்தப்படுகின்றது. இப்பாதிப்புகள், வளர்ந்து வரும் மக்கட்தொகை, உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பக்கவிளைவுகளாகும்.
வளி மண்டலம்
வளிமண்டலம் என்பது ஆக்சிஜன், நீர், கார்பன்டை_ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகிய வாயுக்கள் அடங்கிய மண்டலமாகும். எஞ்சியுள்ள வாயுக்கள் பூமியை, சூரியனிலிருந்து வரும் அபாயகரமான கதிர்வீச்சுகளிலிருந்து காப்பதோடு மட்டுமல்லாமல், வளி மண்டலத்தின் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. வளிமண்டலம் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையை, பசுமை இல்ல விளைவு என அழைக்கிறோம். இப்பசுமை இல்ல விளைவுக்குக் காரணமான வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல வாயுக்களான கார்-பன்_டை_ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், குளோரோ, ஃபுளோரோ கார்பன் மற்றும் அதிக அளவிலான நீராவி போன்றவையாகும்.
தொழில்மயமாக்கம், வேளாண்மை விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றால் வளி-மண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்கள் சராசரி அளவுகளிலிருந்து மாறுபட்டு வேகமாக அதிகரித்துள்ளது. இது உலகம் அதிக வெப்பமடைவதை நோக்கி இட்டுச் செல்கிறது.
விரைவில் நீர்த்துப் போகக்கூடிய புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவற்றை எரிப்பதனாலும், மேலும் மரங்களை வெட்டி எரிப்பதனாலும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளிவருகின்றன. பசுமை இல்ல விளை-வுக்கு 70 சதவிகிதம் கார்பன்_டை_-ஆக்ஸைடு காரணமாகிறது. சாண எரிவாயுத் தொட்டிகளிலிருந்து மீத்தேன் உற்பத்தியாகிறது. விவசாய நிலங்களின் நீர் நிறைந்த நெல் வயல்களில் போடப்படும் நைட்ரஜன் தொடர்-புடைய உரங்கள் மூலம் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியாகிறது.

இப்பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ச்சியாக இதேவேகத்தில் வெளியேறுமானால், கி.பி. 2030இல் பூமியின் வெப்பமானது 3 டிகிரி சென்டி கிரேட் அதிகரிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்-ளார்கள். உயரும் வெப்ப நிலை மாற்றத்தால் கடல்கள் சூடேறுகின்றன. பனிப் பாறைகள் உருகத் தொடங்கு-கின்றன. துருவப் பகுதியில் பனி மலை-களும் உருகிக் கடல் நீரின் அளவைப் பெரும் வெள்ள அபாயம் ஏற்பட வழி வகுக்கிறது. உலகின் பல பகுதிகளில் கடலரிப்பை ஏற்படுத்துகிறது.
1993 ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு கடல்நீரால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது. ஒரு சிறு மாற்றம் கடல் மட்ட அளவில் ஏற்பட்டால்கூட பல தீவுகள் எளிதில் அழியும் என்று இதிலிருந்து நாம் அறிய முடியும். மேலும், மாலத்தீவுகளில் உள்ள அதிக உயரமான நிலப்பரப்பானது கடல் மட்டத்தைவிட 2 மீட்டர் அளவு உயரத்தில் உள்ளது.
அமில மழை: புதை படிவ எரி-பொருள்கள் எரிவதனால் கந்தக மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் உண்-டாகின்றன. இந்த மாசுக்கள் வளி-மண்டலத்தில் உள்ள நிராவியுடன் வினைபுரிந்து கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தை உண்டாக்கு-கின்றன. இது அமில மழையாகவும், பனியாகவும் பெய்கிறது. அமில மழையானது ஏரிகள், காடுகள், காட்டு விலங்குகள், விவசாய நிலப்பகுதிகள், குடிநீர்ப் பகுதிகள் மற்றும் மனித உடல்நலத்திற்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஓசோன் படலம் மெலிவடைதல்: ஓசோன் படலம் பூமியின் மேற்பரப்பி-லிருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. ஓசோன் என்பது 3 ஆச்சிஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்ததாகும். சூரியனிலிருந்து வரும் அபாயகரமான புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் நம்மை ஓசோன் படலம் பாதுகாக்கின்றது. இப்படலம் பல மாசுக்களினால் அழிக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ ஃபுளோரோ கார்பன் என்ற வேதிப்பொருளைக் கூறலாம். ஒரு குளோரோ ஃபுளோரோ கார்பன் மூலக்கூறு 1 லட்சம் ஓசோன் மூலக்-கூறுகளை அழிக்க வல்லது. குளோரோ ஃபுளோரோ கார்பன் இயற்கையாகக் கிடைப்பதில்லை. மாறாக, செயற்-கையாகத்தான் தயாரிக்கப்படுகிறது. குளிர்பதனப் பெட்டிகள், குளிர்விக்கும் பெட்டிகள், தீயணைப்புப் பெட்டிகள் போன்றவற்றிலும், ஏரோசால் டின்களில் முன்செலுத்தியாகவும், பிளாஸ்டிக் பொருளாகவும், மின்னணுத் தொழிற் சாலைகளில் கரைப்பானாகவும் குளோரோ ஃபுளோரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது.
ஓசோன் படலம் மெலிவடைவதால், புற ஊதாக் கதிர்களின் வீச்சுகள் எளிதாகவும், வேகமாகவும் நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனையும் குறைக்கிறது. மனித உடலில் நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இது மீன் வளத்தையும், விவசாய விளைச் சலையும் குறைக்கும்.
புகை மூட்டம்: காற்று மாசுபடுவ தற்குத் தொழிற் சாலைகளிலிருந்தும், மின் நிலையங்களிலிருந்தும், போக்கு-வரத்து வாகனங்களிலிருந்தும் வெளி-வரும் புகையே முக்கியக் காரணமாகும். இப்புகையானது புதை படிவ எரி-பொருள்களை எரிப்பதனால் வெளி-வருகிறது. புகை மூட்டம் எனப்படுவது பின்னர் மூடுபனியுடன் புகை கலந்த கலவையாகிறது. இது சாதரணமாக, பனிக் காலத்தில் அதிகக் தொழிற்-சாலைகள் உள்ள பகுதியிலும், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும் காணப்படுகிறது. இப்புகைமூட்டமானது அதிகமான அளவில், நச்சுத் தன்மை கொண்ட உட்பொருளான ஓசோனைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கார்பன்_டை_-ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன், குளோரோ ஃபுளோரோ கார்பன் மற்றும் பல வாயுக்கள், ஆச்சிஜன் மூலக்கூறு ஒன்றுடன், ஒரு ஆக்சிஜன் அணுவை வேதிவினை புரியவைக்கும் வினையூக்கியாகச் செயல்பட்டு வளிமண்டலத்தின் கீழுள்ள அடுக்குகளில் இவ்வினையி-லிருந்து ஓசோன் உற்பத்தியாகிறது. வளிமண்டலத்தின் மேலுள்ள அடுக்-குகளில் இம்மாசுக்கள் ஓசோன் படலத்தை அழிக்க உதவி செய்கின்றன. இப்புகை மூட்டம் அதிகரிப்பதால் சுவாசித்தல் சம்பந்தமான நோய்களும், கண் எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சலும் அதிகமாகின்றன. மரங்கள் மற்றும் உணவுப் பயிர்கள் பாதிக்கப்-படுவதற்குப் புகை மூட்டம் முக்கியக் காரணமாக விளங்குகிறது. பகுதிப் பொருள்கள்: தூசி மற்றும் சிறிய துகள்கள் போன்றவையே பகுதிப் பொருள்களாகும். இவை வளி-மண்டலத்தில் கலந்து தம் பங்கிற்குக் காற்றை மாசுபடுத்துகின்றன. இப்-பொருள்கள் சுவாசித்தல் சம்பந்த-மான பிரச்சினைகளைத் தோற்று-விக்கின்றன. இப்பகுதிப் பொருள்கள் இலைகளின் மேற்புறத்தில் படிந்து தாவரங்களின் ஒளிச்சேர்க்கையிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன. புவி வெப்ப-மடைவதால், நமது உடலுக்கு, நமது உணவுப் பாதுகாப்பையும், உல-கின் பிற உயிரினங்களுக்கும் தாவரங்-களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, நமது புவியைக் காக்க, நாம் புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டு

No comments:

Post a Comment