சுனாமி
பேரலைக்கு-அழிவைத்தரும் இராட்சத அலைக்கு சுனாமி என்ற பெயரே வழங்கப்படலாயிற்று.
சுனாமி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னும் போது பின்வருவனவற்றை குறிப்பிடலாம் அவையாவன,
• ஏரிமலை வெடிப்பால் கடல் மட்டம் உயரும்,இதனால் பாரிய பேரலைகள் உருவாகும்.
• கடலின் அடிப்பகுதி நகர்வதால் உருவாகின்றது.
• விண்கற்கள் கடலில் விழும் போது உருவாகின்றது.
• கண்டத்தட்டு நகர்வதனால் நில அதிர்வு உண்டாகின்றது.
இவற்றின் செயற்பாடுகளின் அடிப்படையில் சுனாமி ஏற்படலாம். பூமியின் அடியில் தரையானது தட்டுத் தட்டாக உள்ளது. ஒருகண்டத்தின் தட்டு கண்டத்தை விட்டு வெளியே சமுத்திரத்தின் அடிவரை நீண்டிருக்கும் இப்படியாக உள்ள தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசி-மேலேயோ,கீழேயோ செருகப்படும் போது ஏற்படும் அசைவு பூமிஅதிர்வாக வெளிவருகின்றது. இப்படியாகத்தான் ஆசிய-அவுஸ்ரேலிய தட்டுக்கள் செருகப்பட்டதனால். சமீபத்தில் பெரியளவிலான பூகம்பம் சுமேத்திராத்தீவில் ஏற்பட்டது. இந்த செருகள் ஏற்படும் போது ஒரு தட்டு கீழேயும் மறுதட்டு மேலேயும் அசைவுறுகின்றது.அப்போது கீழே செருகப்படுகின்ற தட்டிற்கு மேலேயுள்ள அவ்வளவு எடையான கடல் நீரும் சமநிலையில் இருந்து கீழே இறங்குகின்றது. இதனால் சமநிலையை மீளப்பெற்று நீர்மட்டத்தை பேண நீர் அசைவுகள் இடம் பெறுகின்றது. இந்த நீர் அலைகள் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. குளத்தினில் கல் எறிந்தால் எப்படி அலை அலையாக புறப்பட்டு கரையைச் சேருகின்றனவோ அது போல் இந்த அலையும் ஆரம்பித்த இடத்தில் இருந்து வட்ட வட்டமாக செல்ல ஆரம்பிக்கின்றன. இவை சுற்று வட்டத்தில் உள்ள தரைகளை நோக்கிச் செல்கின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக மணிக்கு 450-600 மைல்கள் வேகத்தில் கடலில் பயனிக்கின்றன.சுனாமி அலைகள் கரையை நெருங்க,நெருங்க அவற்றின் அலை நீளம் குறைந்து வேகம் குறைகின்றது. ஆனால் அவற்றின் உயரம் சில வேலைகளில் 100அடி வரை உயர்கின்றது. ஆனால் 10-20 அடி உயரமுள்ள சுனாமி அலைகள் கூட பாரிய பலத்த சேதங்களை தரவல்லன.
2004.டிசம்பர்26ல் ஏற்பட்ட சுமேத்திரா,அந்தமான்,தீவுகள் இந்தியா, அவுஸ்ரேலிய, தகடு மற்றும் ஆசியத்தட்டின் எல்லையில் உள்ளன.எனவே இப்பகுதியும் பூகம்ப அபாயப் பகுதியாக கருதப்படுகின்றது.மற்றுமொரு வகையில் கூறுகையில் அவுஸ்ரேலியா என்ற நிலத்தட்டும் யுரேசியன் நிலத்தட்டின் ஒரு பகுதியான பர்மா நிலத்தட்டும் ஒன்றை ஒன்று உரசுவதனால் உருவாகும் அசைவுக்கு எதிரான சக்தி மிகவும் பலம் வாய்ந்தது.அதுதான் டிசம்பர்26ல் உருவான சுனாமிக்கு காரணம். இந்தோனேசியாவை அடுத்துள்ள கடல் பிரதேசத்தில் பாரிய பூமி நடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டது.இதன் அளவு 9.0ரிச்டர் அளவாகும்
பெரும்பாலான சுனாமிகள் பூகம்பத்தினால் ஏற்படுகின்றன.ஆனால் எல்லாப் பூகம்பங்களினாலும் சுனாமியை ஏற்படுத்த முடியாது.உதாரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 140ற்கு மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டன.7.0ரிச்டர் அளவைவிட அதிக அளவுள்ள பூகம்பங்கள் சுனாமியை ஏற்படுத்தக்கூடியயன.ஆனாலும் கடலில் ஏற்படும் 7.0ரிச்டர் அளவுக்கு அதிகமான எல்லாப் பூகம்பங்களும் சுனாமியை ஏற்படுத்தக்கூடியன அல்ல.செங்குத்தான பாரிய கடலடி இடப்பெயர்வே சுனாமியை ஏற்படுத்தும்.ஆனால் பூகம்பத்தின் போது ஏற்பட்டுள்ள கடலடி இடப்பெயர்வு எத்தகையது என்பதை உடனடியாக அறிந்து கொள்ளமுடியாது.
2004.டிசம்பர்26ல் உலகவரலாற்றில் மறக்கமுடியாத ஒருகறுப்பு ஞாயிறு.சுமேத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்து மகாசமுத்திரத்தில் சுனாமியாக உருவெடுத்து ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளது.இந்தோனேசியாவின் சுதே;திரா தீவில்மையம் கொண்ட 9.0ரிச்டர் அளவான பூகம்பம் அந்தமான்,தாய்லாந்து,இந்தியா,இலங்கை, மலேசியா,மியன்மார், ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகளை சூறையாடியது. இந்த நூற்றாண்டின் 5வதும் மிகப்பெரியதுமான நிலநடுக்கம் இதுவாகும். அத்துடன் 40 வருடங்களுக்குப்பிறகு ஏற்பட்ட பாரிய அதிர்வும் இதுவே.இந்த நிலநடுக்கத்தினால் கடலடிப்பிரதேசத்தில் ஏற்பட்ட தாக்கம் 1000 மைல்களுக்கு அப்பாலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சுனாமி அலையானது உலகம் பூராகவும் பரவியிருக்கலாம. என்று பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் புவி ஆராய்ச்சியாளரான கலாநிதி 'டேவிட்யூத்' கூறுகிறார்.
ருளுயு புவியியல் மையத்தினால் இந்த அதிர்வு ஆரம்பத்தில் 8.5ரிச்டர் என பதிவு செய்யப்பட்டது.பின்பு 9.0 என மீள அறிவிக்கப் பட்டது. மிகவும் ஆழமான கடல் தாக்கத்தினால் மணித்தியாலயத்திற்கு 880ம.அ வேகத்தில் கடல்நீர் பாயுமென அமெரிக்க ஆய்வுமையம் கூறுகின்றார்.இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி பற்றி இன்னுமொரு காரணம் இந்திய அவுஸ்திரேலிய நிலப்பரப்பு வடபிராந்தியத்தை நோக்கி நகர்வதும் ஆகும்.
சுழன்றடித்து சுடுகாடாக்கிய,உலகை உலுக்கிய சுனாமி இராட்சத அலையானது ஈவிரக்கமின்றி தனது நெடும்பயணத்தை முடித்து உலக மக்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியது.இதற்கு உட்பட்ட பல்வேறு நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.உலகின் பல பாகங்களிலும் சுனாமி அலைகள் அடிக்கடி ஏற்படுகின்ற போதும் இலங்கைக்கு இது புதியதொரு விடயம்.சுனாமி பற்றிய போதிய விளக்கமின்மையாலேயே இராட்சத அலைகள் தாக்கிய போதுஎவ்வித தற்காப்பு நடவடிக்கையுமின்றி சொல்லிலடங்கா தாக்கங்களை தனதாக்கிக் கொண்டது.9.0ரிச்டர் அளவில் இலங்கையை தாக்கிய சுனாமியின் தாக்கங்கள் பற்றி நாம் பின் வருமாறு கண்டு கொள்ளமுடியும்.
அளவு ரிச்டர் ஏற்படும் பாதிப்புக்கள்
0-1.9 பூமி அதிர்வை அறியும் கருவியினால் மட்டுமே அறிய முடியும்.
2-2.9 சுவரில் மாட்டியுள்ள படங்கள் தொங்கும் மின்சார விளக்குகள் அசையும்.
3-3.9 மாடிவீடுகளில் மூன்றாவது மாடிக்கு மேல் வசிப்பவர்கள் உணர்வர்.பாதையில்பலமான லொறி போகும் போது ஏற்படும் அதிர்வு போல் இருக்கும்.
4-4.9 ஜன்னல்கள் அடித்து மூடப்படும்.ஜன்னல்அ கண்ணாடிகள் உடையும்.பீரோ அழுமாரிகள் மீது வைத்த பொருட்கள்நகர்ந்து விழும்.
5-5.9 தளபாடங்கள் அசையும் சுவரில் இருந்து காரைப்பூச்சு வெடித்து விழும்.
6-6.9 ஸ்திரமில்லாத அத்திவாரமுள்ள கட்டடங்கள் சாதாரண செங்கள் கட்டிடங்கள் நொறுங்கலாம்.
7-7.9 கட்டிடங்கள் அத்திவார மட்டத்தில் முழுதாக அசையும்.நிலத்தில் வெடிப்புக்கள் தோன்றும் நிலத்தடி நீர்க்குழாய்கள்,எண்ணெய் குழாய்கள்,காஸ் குழாய்கள் உடையும்.
8-8.9 பாலங்கள் உடையும் அனேகமான கட்டிடங்கள் உடையும்.
9மேல் பாரிய சேதம்,தரையில் அதிர்வு அலைகள் பரவிச் செல்வதைக் காணலாம்.முற்றாக கட்டிடங்கள் உடையும்.
இலங்கையில் 2004-12-26 அன்று ஏற்பட்ட சுனாமி 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்டதால் இலங்கை பாரிய அளவிலான தாக்கங்களை அடைந்தது. இறப்பு,உடைமைகள் அழிவு,கல்வி,போக்குவரத்து, சுகாதாரத்துறை வேலைகள் என்பன பாதிக்கப்பட்டன.இன்னும் பல்வேறு தாக்கங்களை எதிர்கொண்டது.அவறிறினை பழன்வருமாறு ஆராயலாம்.
சுனாமியினால் இலங்கையில் பல தாக்கங்கள் ஏற்பட்டாலும் அவற்றில் முதலிடம் பெறுவதும் எம் கண்களை ஒரு கணம் கலங்க வைப்பதும் இறப்பு பற்றியதுமாகும்.இலங்கையை அண்மித்த சுனாமி பேரலையானது கடற்கரையில் இருந்து சுமார் 1ம.அ வரை உள்நகர்ந்தது. இவ் இயற்கை அனர்த்தம் பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை.அத்துடன் காலை வேளையில் இது இலங்கையை தாக்கியமையால் அதிகமானோர் இறப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.பெரும்பாலும் உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகமானோர்.இந்த சுனாமி கரையோர மாவட்டங்கள் ஒன்றையேனும் விட்டுவைக்கவில்லை.
எடுத்துக்காட்டாக அம்பாறையில் 10436 பேரும் மட்டக்களப்பில் 2794 பேரும் முல்லைத்தீவில் 3000பேரும் அம்பாந்தோட்டையில் 4500பேரும் திருகோணமலையில் 1077பேரும் இறந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.அதிலும் முக்கியமான விடயம் அம்பாறை மாவட்டமே அதிகூடிய உயிரிழப்புக்களை சந்தித்ததுடன் அனைத்து விதமான வகையிலும் பாரிய தாக்கங்கயை சந்தித்தது எனலாம்.அத்துடன் காணாமல் போனோர் பட்டியலும் காயமடைந்தவர்கள் பட்டியலும் நீண்டே செல்கின்றன.மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பில் 1061பேரும் முல்லைத்தீவில் 1300பேரும் யாழ்ப்பாணத்தில் 540 பேரும் காணாமல் போயுள்ளனர்.காயமடைந்தவர்களில் மட்டக்களப்பில் 1622பேரும் திருகோணமலையில் 164பேரும் முல்லைத்தீவில்2500 பேரும் யாழ்ப்பாணத்தில்656 பேரும் அடங்குகின்றனர்.
சுனாமியினால் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக்கப் பட்டனர்.இயற்கை அனர்த்தங்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் அகதிகளாக்கப்பட்டு உடனே அண்மையுலுள்ள பாடசாலைகளிலும் பின்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் அமர்த்தப்பட்டனர். ஊதாரணமாக மாவட்ட அடிப்படையில் அம்பாறை,காலி,களுத்துறை,மட்டக்களப்பு,திருகோணமலை என்பன முறையே 107885 அகதிகளும் 105 முகாம்களும்: 28298 அகதிகளும் 106 முகாம்களும்: 22275 அகதிகளும் 75 முகாம்களும்: 93062 அகதிகளும் 66முகபம்களும்: 171035அகதிகளும் 65 முகாம்களும் அமைந்து காணப்பட்டன.இத்தகைய பாதிப்புக்கள் பற்றி பல்வேறு தகவல்கள் எமது நாட்டின் பாதிப்புக்களை எமக்கு உணர்த்துகின்றன.பின்வரும் விளக்கப்படம் இதனை மேலும் விளக்குவதாக உள்ளது.
ய- அம்பாறை
டி- ஹம்பாந்தோட்டை
உ- காலி
ன- முல்லைத்தீவு
ந- மட்டக்களப்பு
க- யாழ்ப்பாணம்
ப- மாத்தறை
h- திருகோணமலை
i- கிளிநொச்சி
த- களுத்துறை
ம- கொழும்பு
ட- கம்பஹா
அ- புத்தளம்
n- வவுனியா
மேற்காட்டிய வரைபடம் இலங்கையில் சுனாமிக்கு பலியானவர்கள் பற்றி விளக்குகிறது இதில் முதலிடம் பெறும் அம்பாறை மாவட்டமானது அனைத்து விதத்திலும் கூடிய பாதிப்புக்களை எதிர் கொண்ட மாவட்டமாகும்.
மற்றும் உடமைகளும் பாரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளமையை அறியலாம். கடற்கரையில் இருந்து சுமார் 1மஅ வரை உள்நோக்கி விரைந்த அலையானது பொதுக்கட்டிடங்கள்,வீடுகள்,தொழிற்சாலைகள் எனப் னல்வேறு பட்டனவற்றை தகர்த்தெறிந்தன.இங்கு உடமைகள் என்னும் பொழுது மக்கள் வீடுவாசல்கள் அதில் உள்ளடங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அற்றும் தங்கள் வாழ்க்கையினை நாடாத்தும் பொருளாதார நடவடிக்கைகள் என பலதரப்பட்ட உடமைகளும் சுக்குநூறாக்கப்பட்டன.எடுத்துக்காட்டாக அம்பாறை மாவட்டத்திலே கடற்கரைக்கு அண்மையழல் வாழ்ந்த மக்களில் 95 வீதமானோர் வீடு உட்பட அனைத்து உடமைகளையும் இழந்து தங்கள் உறவுகளின் உயிர்களையும் இழந்து இன்று அகதிகளாகவும் அனாதைகளாகவும் ஆக்கப்பட்டு முகாம்களிலே தங்கள் வாழ்க்கை கேள்விக்குறியென வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.பல வகையிலே உயர்ந்து காணப்பட்ட செல்வந்தர்கள் கூட இன்று கையேந்தி நிற்கும் நிலமைக்கு இச் சுனாமியானது பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
சுனாமியின் மற்றுமொரு தாக்கம் கல்வித்துறையில் காணப்படுகிறது.கடற்கரையை அண்மித்துக் காணப்பட்ட பாடசாலைகளும் கல்விநிறுவனங்களும் தொழில்நுட்ப கல்லூரிகளும் அழித்தொழிக்கப் பட்டன. அத்துடன் இங்கு கற்றல்,கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்,மாணவர்கள் கூட தங்கள் உயிர்களை மாய்த்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடிய தமிழ் பாடசாலைகளும் அம்பாறை மாவட்டத்தில் கூடிய தமிழ்-முஸ்லீம் பாடசாலைகளும் இவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டன. அம்பாறை மாவட்ட கல்முனை வலயக் கல்வி அதிகாரியின் அறிக்கையின்படி கல்முனை வலயப் பாடசாலைகளில் 861 மாணவர்கள் பலியானதுடன் 2686 பேர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் 28 மாணவர்கள் தாய் தந்தையரை இழந்து அனாதையாக்கப் பட்டுள்ளனர்.
மேலும் அழிவுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் வேறு பாடசாலைகளிலும் அகதிமுகாம்களிலும் வௌ;வேறுபட்ட கட்டிடங்களிலும் இன்று தம் கல்வியைத் தொடர்கின்றனர்.இக் கல்வி அவர்களுக்கு பூரணமானது எனக் கூற முடியாது.ஏனெனில் உளவியல் தாக்கம் அவர்களை ஆட்கொண்டதுடன் புதுமுக அனுபவங்களும் அவர்களை நிலைகுலையச் செய்யலாம். எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நாவலடி முழுமையாகப் பாதிக்கப்பட்ட இடம்.இங்குள்ள பாடசாலை மாணவர்கள் பிள்ளையாரடிப் பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.இங்கு அவர்களால் முழுமையான கல்வியைப் பெறமுடியும் என்பது சந்தேகமே.இதனடிப்படையில் கல்வித்துறையில் ஏற்பட்ட இத்தகைய தாக்கம் நாளை இலங்கையினை கேள்விக்குறியாகவும் மாற்றக் கூடும்.
இலங்கையில் சுனாமி ஏற்பட்டதனால் ஏற்பட்ட மற்றுமொரு தாக்கம் வேலை-தொழிற்பிரச்சனையாகும். தொழிலடிப்படையில் முதலிடம் பெறுபவர்கள் மீனவர்களாவர். இவர்கள்; மீனவக் குடியேற்றங்களை இழந்ததுடன் தங்கள் தொழிழுக்கு தேவையான படகு,வள்ளம்,தோணி,வலைவகைகள் என்பவற்றை இழந்தனர்.அத்துடன் கடல்-ஊர்-களப்பு என்பன போன்றன ஒன்றுடன் ஒன்று கலப்படமானதால் கடலுக்கோ களப்பு,வாவிக்கோ சென்று தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாது போனது.இதனால் சுனாமிக்கு பின்பும் அவர்களினது வாழ்க்கையை நடாத்துவது என்பது கஸ்டமான ஒரு விடயமாக உள்ளது.
எடுத்துக்காட்டாக திருகோணமலை மாவட்டத்தில் பள்ளத்தோட்டம்,நிலாவெளி,செல்வநாயகபுரம், சாம்பல்தீவு போன்ற இடங்களில் 46 மீனவக் குடும்பங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மேசன் தச்சுத் தொழிலாளர்,விவசாயிகள் என பல்வேறு வகைப்பட்டவர்களும் தங்கள் தொழில் உபகரணங்களை இழந்ததுடன் வேலையின்றி திண்டாடினர்.விவசாய நிலங்கள் சூறையாடப் பட்டதுடன் தோட்டங்கள் செய்தவர்கள் தங்கள் வாழ்வோதய தொழிலினை இழந்து அனாதரவாகினர். ஊதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வாழுமத் கிராமங்களின் சுமார் 10.000 ஏக்கர் அளவிலான தோட்டப் பயிர்ச் செய்கை முற்றாகப்பாதிக்கப்பட்டது. இத்தகைய வேலை –தொழில் பிரச்சனைகளின் அடிப்படையில் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவினை நோக்க முடியும் எனலாம்.
போக்குவரத்துத்துறையும் சுனாமியினால் தாக்கத்தை எதிர்நோக்கியது சுனாமியினால் கடலோரப்பாதைகள் யாவும் அழிவுக்குள்ளாயின. அத்துடன் பாலங்களும் முற்றாக சேதமடைந்தன.போக்குவரத்து சாதனங்கள் அனைத்தும் அழிவுற்றன.அம்பாரை,மட்டக்களப்பு மாவட்டங்களில் வீதிகள்யாவும் கரையோரங்களை அண்டி காணப்பட்டமையினால். ஆவை அனைத்தும் அழிக்கப்பட்டன.மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு,பெரியகல்லாறு,பாலங்களும் அம்பாரை மாவட்டத்தில் தம்பிலுவில்,பெரியமுகத்துவாரபாலமும் முற்றாக செயலிழந்தன.இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் பாதைகளும்,பாலங்களும் சிதைவுண்டதால் போக்குவரத்து துறையில் சுனாமியின் தாக்கம் பாரியளவாக காணப்படுகின்றது.
இலங்கை-சுனாமியின் தாக்கத்தில் மற்றொன்று சுகாதாரத்துறையாகும். மட்டக்களப்பு, திருகோணமலை,அம்பாறை,களுத்டதுறை, மாத்தறை,அம்பாந்தோட்டை காலி ஆகிய மாவட்டங்களில் 46 வைத்திய சாலைகள் சுகாதாரத்துறையில் முற்றாக பாதிக்கப்பட்டன.வைத்திய சாலைகள் பாதிக்கப்பட்டதனால் நோயாளர்களை பராமரிப்பது கடினமானதாகவும் மருத்துவப் பொருட்களுக்கு பாரிய தட்டுப் பாடும் நிலவின.அத்துடன் சுனாமியினால் அதிகமானவர்கள் இறப்புக்குள்ளானமையாலும் சுகாதார ஊழியர்கள் உடனேயே வேலைக்கு திரும்பாமை போன்ற இடர்பாடுகளை எதிர் நோக்கியது.
தொழிற்சாலைகள் பல பாதிக்கப்பட்டதுடன் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.கடலை அண்டிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன.இலங்கை ஒரு தீவாக உள்ளமையினால் உள்ளாசப் பயணிகளை கவரக்கூடிதாக இருந்தது.இவர்களின் வரவினால் நாட்டுக்கு அந்நியச் செலாவணி அதிகமாகக் கிடைத்தது. ஆத்துடன் உள்ளாப் பயணிகள் தங்கும் உள்ளாச விடுதிகளும் அழிக்கப்பட்டன.உதாரணமாக பொத்துவில் பிரதேசத்தில் உள்ள உல்லை என்னும் இடம் அழிவுற்றது.இது போன்று பல உள்ளாசப் பயணிகளை கவர்ந்த இடங்களும் அழிந்து போயின.
அரச நிர்வாக செயற்பாடுகளும் சுனாமியினால் பாதிப்புற்றன.அதாவது அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் குறித்த காரியாலயங்களிலே தமது வரவைப் பதிந்து வேலைக்குச் சமூகமளித்தனர்.இதனால் குறித்த வேலைகளை செய்ய இயலாமல் போனது. இவ்வாறு இவை போன்ற பல நிர்வாகச் சிக்கல்களை எதிர் கொண்டது.
சுனாமி அனர்த்தம் காரணமாக சிறியோர் முதல் பெரியோர் வரை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகினர்.மனைவி,கணவன், பிள்ளைகள்,உறவினர்கள், நண்பர்கள்,உடமைகள் என பல்வேறு வகையிலும் இழப்புக்குள்ளானவர்களின் மனநிலை முழுமையாக பாதிப்படைந்தது.சிறு பிள்ளைகள் நித்திரைத்தூக்கத்தில் கடல் வருகிறது என பயந்து கத்தினர்.எடுத்துக்காட்டாக அம்பாறை-கல்முனை 'பேபி81' குழந்தைக்காக பல தாய்மார்கள் போட்டியிட்டனர். இதுபோன்ற தாக்கங்களை மக்கள் எதிர் கொண்டனர்.
சுனாமியினால் கலாச்சார சீர்கேடுகளும் ஏற்பட்டன. சுனாமிக்குப் பின் உதவுவதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்கள் உதவிகளை மேற்கொண்டமையினாலும் அவர்கள் தங்களது கலாச்சாரத்திற்கேற்றவாறு நடந்து கொண்டமையினாலும் முகாம்களிலும் பல பாலியல் சீர்கேடுகள் ஏற்பட ஏதுவாக அமைந்தன.
மேலும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் சமய தலங்களும் அரும்பொருட் சாலைகளும் அழிவுக்குள்ளாயின.
தொகுத்து நோக்குவோமாயின் 2004-12-26 இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் இலங்கைத் தீவானது மீள முடியாத பல்வேறு தாக்கங்களை அடைந்தது. இவை பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுனாமி இராட்சத பேரலையினால் இலங்கைத்தீவு பல்வேறு வகையில் தாக்கங்களை எதிர்கொண்டது.சுனாமியினால் இயற்கைச் சூiலானது மாற்றியமைக்கப்பட்டது.குறிப்பாக நீர்,நிலம்,மண்,உயிரினங்கள்,தாவரங்கள்,விலங்குகள், என்பன பல வகையிலும் பாதிப்படைந்தன.
சுனாமித்தாக்கத்தினால் மண்வளமானது கூடியளவு பாதிப்படைந்தது. கடல்நீரானது பயிற்செய்கை நிலங்களை ஊடறுத்து சென்றமையினால் மண்ணானது உவராக மாற்றமடைந்தது.இதனால் பயிற்செய்கை செய்யமுடியாமல் மாற்றமடைந்தது.அத்துடன் மண் கட்டமைப்பிலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை நீரால் களுவப்பட்டது இதனால் இங்கு மேற்கொள்ளப்படும் வெற்றிலைச் செய்கை கைவிடப்பட்டது.
-மேலும் சுனாமியினால் இலங்கையின் கரையோர மண்திட்டுக்கள்,மணற்குன்றுகள் என்பன தின்னலுக்குள்ளானது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் உள்ள மணற்காடுகள் சுனாமியின் பின் மண்ணரிப்புக்குள்ளாயிருந்தது.அதுமட்டுமன்றி கடல்மட்டமானது தனது முன்னைய நிலையில் இருந்து முன்னோக்கி சென்றுள்ளது.உதாரணமாக திருகோணமலை மாவட்ட பிரதேச மண்ணிலுள்ள 'ஆசனின்',மெக்கூறி,சைனட், போன்ற நச்சுப்பதார்த்தங்கள் அலையினால் கழுவப்பட்டு கடலுக்குள் செல்வதனால் கடல்மாசடைவதுடன் மீன் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.இந்நிலை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மண்ணரிப்பை தடைசெய்வதற்காக கல்வேலி அமைத்தல்,காற்றுத்தடை வேலி அமைத்தல் என்பன செயற்படுத்தப்படுகின்றன.இவையும் சுனாமியினால் அழிக்கப்பட்டன. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடியில் மண்ணரிப்பை தடைசெய்ய காற்றுத்தடை வேலியாக சவுக்குமரங்கள் நடப்பட்டிருந்தன.இவை அனைத்தும் சுனாமியினால் அழிக்கப்பட்டன.
சுனாமியின் சூழல்தாக்கத்திற்கு உட்பட்ட மற்றொன்று நீராகும். கடல்நீரானது உள்நோக்கி சுமார் 1மஅ வரை உட்புகுந்ததால் அனைத்து நீர்நிலைகளும் பாதிப்படைந்தன.கடலுக்கு அண்மையில் காணப்பட்ட அனைத்து நன்னீர்நீர் நிலைகளும் உவர்நீராக மாற்றப்பட்டன.கடல் நீர் தரைகீழே உட்புகுந்ததால் தொடர்ந்து தரைகீழ் நீர் உவர்நீராகவே காணப்படுகின்றது. இதனால் அந்நீரினை மக்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்த முடியாமலுள்ளது.
சுனாமியினால் ஏற்பட்ட முக்கிய பிரச்சனைகளில் ஒன்று சூழல்மாசடைதல் ஆகும்.கட்டடங்கள்,உயிரினங்கள்,தாவரங்கள்,போன்றன அழிவுக்குள்ளாயின.இத்தகைய கழிவுகள் உரு இடத்தில் குவிக்கப்பட்டன.இதனால் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட்டன.இது மட்டுமல்லாது இறந்த உடல்களை உடனே அகற்ற முடியாமையினால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன.இவை அழுகிய நிலையில் இருந்தமையினால் நோய்க்கிருமிகளின் செயற்பாடு அதிகரித்தது. இதனால் பல நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டது.இதனால் காய்ச்சல்,வயிற்றோட்டம்,வாந்திபேதி, போன்ற நோய்கள் ஏற்பட்டன.
சுனாமியின் பின் சூழலானது மாற்றமடைந்து புதியதொரு வடிவினைப் பெற்றது. மண்திட்டுக்கள்,நீர்நிலைகள்,உயிரின நடமாட்டங்கள், என்பன பலவாறாகவும் மாற்றமடைந்தன.இதனால் நீரியல்வட்டம்,வளிமண்டலம், மாற்றமடைந்தது.
வுpலங்குகள் என்னும் போது மனிதர்கள்,மிருகங்கள்,பறவைகள் என்பன அழிவுக்குள்ளான பல மனித உயிரினங்கள் சூறையாடப்பட்டதுடன் மாடு,ஆடு போன்ற மிருகங்களும் கோழி,வாத்து, போன்ற பறவைகளும் அழிந்தன. இத்தகைய உயிரினங்களின் அழிவினால் சூழல் பாரிய மாற்றத்தினை சந்திக்க நேர்ந்தது.இவற்றின் அழிவு அதிகளவாக சூழல் மாசடைவதற்கு வழிசெய்தன.இதனால் சூழலே சுடுகாடாக காட்சியழித்தது.
மேலும் கடலுக்கு வெளியே இத்தகைய சூழல் தாக்கம் நிகழ்ந்தது போன்றுகடலுக்குள்ளும் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டிருக்கும் எனலாம். மீன்களின் உணவு வகையான பிளாங்ரன் என்னும் உணவு வகை அழிந்து போயிருக்கும்.அத்துடன் அரிதான மீனினங்கள் அழிந்து போயிருக்கும் முருகைக்கற்பாறைகள் அழிந்து போயிருக்கும் இதனால் மீன் இனங்களின் வாழ்விடங்கள் அழிந்து போயிருக்கும்.சிப்பி,முத்து,சங்கு, என்பனவும் கடலுக்குள் அழிந்து போயிருக்கும்.இவை கடலுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் எனக்கூறலாம்.
எனவே சுனாமியின் எச்சங்கள் இலங்கையில் எந்தவிதத்திலும் விட்டபாடில்லை. மேற்கூறிய அனைத்து விடயங்களும் சுனாமியின் பின்பு சூழல் எவ்வாறு காட்சியளித்தது என்பதனை எமக்கு புலப்படுத்துவனவாக உள்ளன.சுனாமியின் பின்பு சூழலில் ஏற்பட்ட ஒவ்வொரு தாக்கமும் எம்மை நிலைகுழையச்செய்துள்ளன. இத்தகையது இயற்கைச் சூழலினை வெகுவாக பாதித்திருப்பதுடன் இவற்றினை சீர்செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
சுனாமி தாக்கம் என்பது பாரியதொரு தாக்கம். இதன் விளைவுகள் முன்னனுபவம் இல்லாது
விளங்குவது கடினம். இத்தகைய சுனாமி-இராட்சத பேரலையில் இருந்து பாதுகாக்க பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
சுனாமியின் முன்னறிவிப்புக்கள் பற்றி தெரிந்திருத்தல்:-
சுனாமி ஏற்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எம்மால் பூமிஅதிர்ச்சியை உணரமுடியும். அத்தோடு கடல்நீர்வற்றி கடலில் தரைதெரியத் தொடங்கும். வற்றிப்போன தரையில் மீன்கள் துடிப்பதனையும் கடலினுள் நிறுத்தப்பட்டுள்ள வள்ளங்கள்,படகுகள் போன்றவை தரையில் கிடப்பதையும் காணக்கூடியதாக இருக்கும். சுனாமி பகலில் மட்டுமன்றி இரவிலும் ஏற்படலாம்.
கடலலைகள் பல அலைகளாக தொடர்ந்து வருவதை அவதானித்தல் :-
சாதாரணமாக 10-45 நிமிடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அலைகள் மீண்டும்,மீண்டும் உருவாகளாம். இந்த நிலமை இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு கூடிய காலம் வரை தொடர்ந்திருக்கும்.
சுனாமி பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக உயரமான இடத்தினை நாடவேண்டும். குடல் ஓரத்தில் இருந்தும், மற்றும் நீரோடைகள்,ஆறுகள்,கடலுடன் சேரும் இடங்கள் என்பவற்றின் அண்மையில் இருந்து விலகி உயரமான இடங்களை நாடிச்செல்ல வேண்டும்.
பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்:-
ஆபத்தின் நிலையை எம்மால் நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் ஆபத்து இல்லை என்பது நிச்சயமாக தெரியும் வரை ஆபத்தான இடங்களை நாடவேண்டாம். முதலாவது அலையுடன் அழிவு முடிந்து விட்டது. அதன் பின் மிகவும் பலமான அலைகள் பின் தொடர்ந்து வரக்கூடும்.
சுனாமி அலைகள் மிகவேகமானவை, என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எம்மைச்சுற்றி ஒரு உயரமான இடம் தெரியவில்லையாயின் உடனடியாக உயரமான,வலுவான கட்டடம், உயரமான மரம் ஒன்றில் ஏறிக்கொள்ள வேண்டும்.
சுனாமி பற்றி அறிந்திருந்தால் சொத்துக்கள்,உடமைகள்,என்பவற்றை பாதுகாக்கச் செல்லக்கூடாது.எமது உயிரைவிட சொத்துக்கள்,உடமைகள், என்பவை பெறுமதிவாய்ந்தவை அல்ல. உயிர் இருந்தால் யாவற்றையும் தேடிக்கொள்ள முடியும்.
வள்ளம் அல்லது படகு போன்றவற்றில் ஒருவர் கடலுக்கு செல்வாராயின் அவர் கரைக்குவர முயற்சிக்க கூடாது.ஏனெனில் கடற்கரையினைவிட ஆழமானநீரில் சுனாமி அலைகளின் உயரம் குறைவானதாக காணப்படும்.
ஆசிரியர்,பெற்றோர்,பெரியவர்கள், என்போருடன் சுனாமியின் போது தப்பிக்கௌ;வது பற்றி உரையாட வேண்டும். அதாவது இவ்வாறான ஒரு நிலைமையின் போது உயிர் தப்புவதற்கு எம்மைச்சுற்றி, எமது வீட்டின் அருகில் அல்லது சுற்றியுள்ள உயரமான இடங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நாம் சுனாமி பற்றி அறிந்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இது எப்போதாவது இன்னுமொருவரின் உயிரைக்காப்பதற்கு உதவியாக அமையும்.
இவ்வாறான பல்வேறு வழிமுறைகளும் சுனாமியிலிருந்து நாம் தப்பிக் கொள்ள உதவி செய்யும் எனலாம். எனவே மீண்டும் ஒரு சுனாமி ஏற்படுமானால் மேற்கூறிய வழிகளின் அடிப்படையில் பாதுகாப்பு பெறலாம்.
சுனாமிதான் பேரழிவினை ஏற்படுத்தும் மோசமான இயற்கை அழிவு என கணிக்கக்கூடாது. மெகா சுனாமி என்ற படுகோரமான சுனாமிகளும் உண்டு. 1,10000 வருடங்களிற்கு முன்பு அப்படி ஒரு சுனாமி ஏற்பட்டது. அவை 100000 வருடத்திற்கு ஒருமுறை திரும்ப வரும். ஆக அடுத்த 10000 வருடத்திற்குள் அது எப்போது வேண்டுமானாலும் திரும்பவரலாம்...
msT hpr;lh;
|
Vw;gLk; ghjpg;Gf;fs;
|
0-1.9
|
G+kp mjph;it mwpAk; fUtpapdhy;
kl;LNk mwpa KbAk;.
|
2-2.9
|
Rthpy; khl;bAs;s glq;fs;
njhq;Fk; kpd;rhu tpsf;Ffs; mirAk;.
|
3-3.9
|
khbtPLfspy; %d;whtJ khbf;F Nky;
trpg;gth;fs; czh;th;.ghijapy;gykhd nyhwp NghFk; NghJ Vw;gLk; mjph;T Nghy;
,Uf;Fk;.
|
4-4.9
|
[d;dy;fs; mbj;J
%lg;gLk;.[d;dy;m fz;zhbfs; cilAk;.gPNuh mOkhhpfs; kPJ itj;j nghUl;fs;efh;e;J
tpOk;.
|
5-5.9
|
jsghlq;fs; mirAk; Rthpy; ,Ue;J
fhiug;G+r;R ntbj;J tpOk;.
|
6-6.9
|
];jpukpy;yhj mj;jpthuKs;s
fl;llq;fs; rhjhuz nrq;fs; fl;blq;fs; nehWq;fyhk;.
|
7-7.9
|
fl;blq;fs; mj;jpthu kl;lj;jpy;
KOjhf mirAk;.epyj;jpy; ntbg;Gf;fs; Njhd;Wk; epyj;jb ePh;f;Foha;fs;>vz;nza;
Foha;fs;>fh]; Foha;fs; cilAk;.
|
8-8.9
|
ghyq;fs; cilAk; mNdfkhd
fl;blq;fs; cilAk;.
|
9Nky;
|
ghhpa Nrjk;>jiuapy; mjph;T
miyfs; gutpr; nry;tijf; fhzyhk;.Kw;whf fl;blq;fs; cilAk;.
|
No comments:
Post a Comment