இலங்கையின் காலநிலை மாற்றங்கள்
கலாநிதி. பீ.ஆர்.எஸ்.பீ. பஸ்நாயக்க
அறிமுகம்
காலநிலை மாற்றமானது, நீண்ட காலம் தொட்டு
(சாதாரணமாக பல தசாப்பங்கள் அல்லது அதை விடவும் கூடுதலான காலம்) காலநிலையின்
பொதுவான நிலையான தன்மையில் அல்லது அதில் மாற்றத்தில் புள்ளிவிபர ரீதியிலான
முக்கிய மாற்றங்கள் எனப் பொருள்படும். காலநிலை மாற்றங்கள் இடம்பெறுவதற்கு
இயற்கையான உள் செயற்பாடுகள் காரணமாக அல்லது வெளித் தாக்கங்கள் காரணமாக
அல்லது வளிமண்டலத்தில் மனிதர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற மாற்றங்கள்
அல்லது பூமியை பயன்படுத்துவதில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பன மூலம்
இடம்பெறலாம். (IPCC, 2001)
கைத்தொழில் புரட்சியின் பின்னர் அதிக
எரிபொருள் பாவனை மற்றும் பூமியின் பயன்பாட்டுச் செயற்பாடுகளின் மாற்றங்கள்
(முக்கியமாக ஏற்படுகின்ற மாற்றங்கள்), கைத்தொழில்களில் இருந்து நச்சு
வாயுக்களை வெளியிடல் போன்ற மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக மிகவும்
துரிதமாக காலநிலை மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. துரிதமாக அதிகரித்து
வருகின்ற பச்சை வீட்டு விளைவின் காரணமாகவும் வளிமண்டலத்தில் பூகோள வெப்ப
நிலையானது அதிகரித்துள்ளது. பச்சை வீட்டு விளைவின் காரணமாக பூமியின்
மேற்பரப்பிலே பூகோள வெப்ப நிலையானது சாதாரண நிலையிலும் பார்க்க (அதாவது 19
0C இற்குப் பதிலாக சராசரி மேற்பரப்பு வெப்ப நிலையானது 14 0C) 30 0C வரையில்
வெப்பமடைவதுடன், இதன் மூலம் உயிரியல் தன்மைகள் அழிந்துவருகின்றன. இயற்கை
வளிமண்டலத்தில் இவ்வாறு அதிகரித்து வருகின்ற பச்சை வீட்டு விளைவிற்கு
காரணமாக அமைகின்ற வாயுக்களாக நீராவி(H2O), காபன்டயொக்சைட் (CO2), நைட்ரஸ்
ஒக்சைட் (N2O), மீதேன் (CH4), ஓசோன் (O3), ஹைட்ரோபுளோரோ காபன் (HFC5),
சல்பர் ஹெக்சாபுளோரைட் (SF6) மற்றும் பர்ப்புளோகாபன் (PFC5) என்பன காரணமாக
அமைகின்றன. மனித வாழ்க்கையினை மிகவும் சுகபோகமாக அமைத்துக் கொள்வதற்காக
மேற்கொள்ளப்படுகின்ற மனித செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையால் வளிமண்டலத்தில்
CO2 செரிவானது கைத்தொழில் மயமாவதற்கு முற்பட்ட காலத்தில் 280 ppm இருந்து
இன்று 365 ppm வரையில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மழைவீழ்ச்சி மாற்றம்
1931 முதல் 1960 வரையிலான ஆண்டு
(சந்திரபால 1997) காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 1961 முதல் 1990 வரையிலான
காலப் பகுதியில் நடைமுறையில் காணப்பட்ட 234 மி.மி. முதல் 265 மி.மி.
வரையில் அதிகரித்துவரும் இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சியானது 177 மி.மி.
ஆல் அதாவது சுமார் 7% வீதத்தால் குறைந்துள்ளது. வடகீழ் பருவக்காற்று மழை
வீழ்ச்சியானது 1931-1960 வரையிலான காலப் பகுதியின் நிலையிலிருந்து
1961-1990 வரையான காலப் பகுதி வரையில் அதிகரித்துவரும் வித்தியாசத்தால்
குறைந்துள்ளது. தென்மேல் பருவக்காற்றானது இந்தக் காலப் பகுதியினுள்
குறிப்பிடத்தக்களவு மாற்றத்தினைக் கொண்டிராத போதிலும் அடிக்கடி மாறும்
தன்மையில் 1931 - 1960 வரையிலான காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 1961 –
1990 வரையிலான காலப் பகுதியில் குறைந்துள்ளது. ஏனைய காலநிலை அவதான
நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி
ஆகிய காலநிலை அவதான நிலையங்களில் இருந்து அண்மைக் காலத்தில் வருடாந்த மழை
வீழ்ச்சியிலே குறிப்பிடத்தக்களவு உயர் மாறுபடும் தன்மையொன்று
பதிவாகியுள்ளது. (வரைபடம் 01) கடந்த நூற்றாண்டு காலப் பகுதியினுள் வருடாந்த
மழை வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஒன்றினைக் காணக்கூடியதாக
இல்லை. வளிமண்டலத்தின் பச்சை வீட்டு விளைவானது அதிகரித்தமையால் பூகோள
காலநிலை மாற்றம் இடம்பெறுகின்றமை மழை வீழ்ச்சி முறைமைகளில் பரந்தளவில்
மாற்றடைவதற்குக் காரணமாக அமையலாம்.
வெப்பநிலை மாற்றம்
இலங்கையிலே வளிமண்டலத்தின் வருடாந்த
சராசரி வெப்ப நிலை மாற்றமானது கடந்த சில தசாப்தங்களாக குறிப்பிடத்தக்களவு
அதிகரிப்பினைக் காட்டி நிற்கின்றது. (பஸ்நாயக்க உட்பட மேலும் சிலர் 2012)
1961 - 1990 வரையிலான கால கட்டத்தில் சராசரி வளிமண்டல வெப்ப நிலையின்
அதிகரிப்பு வேகமானது வருடாந்தம் 0.0160C முறையே
அதிகரித்துள்ளது. (சந்திரபால 1996) பெரும்பாலும் அனைத்து காலநிலை அவதான
நிலையங்களிலும் வளிமண்டலத்தின் சராசரி வெப்ப நிலை அதிகரிப்பில் முன்னேற்றம்
ஒன்றினைக் காட்டியதுடன், ஆகக் கூடிய அதிகரிப்பு வேகமானது ஒரு வருட
காலத்தில் 0.0210C வீதம் புத்தளத்தில் பதிவாகி இருந்தது. இரவு
காலத்தில் வருடாந்த வளிமண்டல சராசரி வெப்பநிலையானது உயர் அளவில்
அதிகரிப்பொன்றினைக் காட்டியுள்ளது. இரவு காலத்தில் ஆகக் குறைந்த வருடாந்த
சராசரி வளிமண்டல வெப்பநிலையானது 0.020C நுவரெலியாவில் பதிவாகி இருந்தது.
கடந்த காலத்திலே நாட்டின் பொதுவான வெளி வெப்பநிலையானது அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக இரவு காலத்தின் மிகக் குறைந்த வெப்ப நிலை பகல் நேர ஆகக் கூடிய வெப்ப நிலையிலும் பார்க்க அதிகரித்தமையே என்பது தெளிவாகின்றது. இந்த முன்னேற்றமானது கடந்த நூற்றாண்டு முழுவதும் பூகோள வெப்ப நிலை அதிகரிப்பிற்கு சமமானதாகும். இந்த அதிகரிப்பிற்கு பச்சை வீட்டு விளைவானது அரைப் பகுதி அளவில் தாக்கம் செலுத்தி உள்ளதுடன், அண்மைக் காலமாக இடம்பெற்ற துரித நகரமயமாக்கலின் விளைவாக அதிகரித்த பிராந்திய வெப்பநிலை அடுத்த காரணமாக அமையலாம்.

மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை பற்றிய ஆரம்பக் காலநிலை ஆய்வு
வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக்
காலத்தில் (டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி) அதிக மறைவீழ்ச்சி மத்திய
மலைநாட்டில், கிழக்குப் பள்ளத்தாக்குகளிற்கு எல்லைப் படுத்தப்படுவதுடன்
உச்ச அளவான 1200 மி.மீ மலைவீழ்ச்சி மத்திய மலைநாட்டின் உச்சியிற்கு சற்றுக்
கீPழுள்ள பிரதேசத்திற்குக் கிடைக்கிறது. (படம் 3). இதற்குக் காரணமாவது
இந்தக் காலத்திற் அதிக ஈரப்பதனுடன் கூடிய வட கீழ்க் காற்றாகும். முதல்
பருவக்காற்று மலை காணப்படும் மார்ச் ஏப்ரல் போன்ற மாதங்களில் நாட்டின் தென்
மேல் பிரதேசங்களிற்கு கடுமையான மழை கிடைக்கும்.
இலங்கையின் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1931 இலிருந்து 1960 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1961 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் 144 மி.மீற்றரால் அதாவது 7% இனால் குறைவடைந்துள்ளதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னடைவு 234 மி.மீற்றரிலிருந்து 263 மி.மீற்றர் வரை அதிகரித்துள்ளது. (சந்திரபால 1997) இலங்கையின் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழை 1931 - 1960 வரையான காலப்பகுதியிலிருந்து 1961 – 1990 காலப்பகுதி வரை அதிகரிக்கும் மாற்றத்துடன் குறைந்துள்ளது. இந்த காலப்பகுதி இரண்டினுள்ளும் தென்மேல் பருவப் பெயர்ச்சி மறை தெளிவான வேறுபாடு ஒன்றைக் காட்டா விடினும் 1931 – 1960 காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1961 - 1990 காலப்பகுதி மாற்றத்துடன் குறைந்துள்ளது. ஏனைய வானிலை மத்திய நிலையங்களுடன் ஒப்பிடும் போது மட்டக்களப்பு, குருனாகல் மற்றும் இரத்தினபுரி போன்ற காலநிலை மத்திய நிலையங்களில் அண்மைக் காலங்களில் உயர் மாற்றத்துடன் கூடிய வருடாந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. (படம் 1). கடந்த நூற்றாண்டு காலப்பகுதியில் வருடாந்த மழைவீழ்ச்சியில் குறிப்பிடக் கூடிய மாற்றம் ஒன்று நிகழ்ந்ததில்லை. சிலவேளை மழைவீழ்ச்சிப் போக்கில் உயர் மாற்றத்திற்குக் காரணம் வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரிப்பதனால் ஏற்படும் பூகோள காலநிலை மாற்றமாக இருக்கலாம்.

மழைவீழ்ச்சியின் எதிர்கால நிலைமை
பிரதானமாக மழைவீழ்ச்சியின் மாற்றத்தினால்
காலநிலை மாற்றத்துடன் காலநிலை எல்லை கடந்த விளைவுகள் (வெள்ளப் பெருக்கு,
வறட்சி போன்றன) மிகவும் கொடூரமாக அடிக்கடி ஏற்படுகின்றன. இதைத் தவிர
காலநிலை மாற்றத்துடன் ஈர் நிலங்கள் மென்மேலும் ஈரத்தன்மைக்கு உட்படுவதுடன்
உலர் பிரதேசங்கள் மென்மேலும் வறண்டு போகின்றன. பெற்றுக் கொண்ட
பெறுபேறுகளிற்கு ஏற்ப நாட்டின் மேல் மற்றும் தென்மேல் பிரதேசங்களிற்கு
மட்டுப்படுத்தப்பட்ட தென்மேல் பருவ மழை A2 நிலைமையின் கீழ் 2025 (6ம் படம்)
2050 (8ம் படம்) மற்றும் 2100 (10ம் படம்) ஆகும் போது அதிகரிப்பதாகத்
தெரிகிறது. படம் 5, 7 மற்றும் 9இன் A2 இன் வெளிப்பாட்டுத் தன்மையின்
கீழ் வேறு வேறாக 2025, 2050 மற்றும் 2100 போன்ற வருடங்களில் வடகீழ்ப் பருவ
மழை நிலைமை காட்டப்படுவதுடன் அதனால் விசேடமாக கிழக்கு மற்றும் வடக்குப்
பிரதேசங்களில் வடகீழ்ப் பருவ மழையின் அதிகரிப்பொன்றைக் காட்டுகிறது.
வெப்பநிலை பற்றிய எதிர்கால நிலைமை
பல்வேறுபட்ட வெளிப்பாட்டுத் தன்மையின் கீழ் (2001) 2100 ஆம் ஆண்டாகும் போது பூகோள சராசரி வெப்பநிலை 1.4 - 5.80C
என்ற எல்லையில் அதிகரித்துச் செல்லும் எனக் காட்டப்படுகிறது. 2100ஆம்
ஆண்டு வடகீழ்ப் பருவக் காற்றுக் காலம் மற்றும் தென்மேல் பருவக் காற்றுக்
காலத்தில் சராசரி வெப்பநிலை ஆரம்ப மட்டத்திலிருந்து படிப்படியாக 2.90C இலிருந்து 2.50C
வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 11ஆம் படத்திலிருந்து 16ஆம்
படம் வரை 2025, 2050, 2100ஆம் ஆண்டு ஆகும் போது வடகீழ்ப் பருவக் காற்றுக்
காலம் மற்றும் தென்மேல் பருவக் காற்றுக் காலத்தில் சராசரி வெப்பநிலை
அதிகரிப்பதாகக் காட்டப்படுகிறது.
முடிவு
தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை மற்றும்
வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழை A2 விவரணத்தின் கீழ் Haddcm B மாதிரியுடன்
மழைவீழ்ச்சி அதிகரித்துச் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
மழைவீழ்ச்சி அதிகரிப்புடன் கூடிய மழைவீழ்ச்சி எல்லைப்படுத்தப்பட்ட வான்
வலயமும் விரிவாக்கம் பெறுவது உறுதி. வடகீழ்ப் பருவப் பெயர்ச்சியை விட
தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் மழைவீழ்ச்சி மாற்றம் அதிகமாகும்.
ஒவ்வொரு பருவப் பெயர்ச்சிக் காலத்திலும் மத்திய மலைநாட்டில் காற்றின்
முகப்பில் அதிக அதிகரிப்பும், காற்றின் எதிர்த் திசையில் குறைந்த
அதிகரிப்பும் காணப்படும். அதனால் எதிர்காலத்தில் சனத்தொகை அதிகரிப்பும்
நீரிற்கான அதிக கேள்வியுடன் மத்திய மலை நாட்டில் விசேடமாகக் காற்றின்
எதிர்த் திசைப் பிரதேசங்கள் மற்றும் அருகிலுள்ள மழைவீழ்ச்சி குறைந்த
பிரதேசங்களிற்கு பருவ காலங்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படும்
வாய்ப்புள்ளது. A2 விவரணத்தின்படி வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயு
அதிகரித்துச் செல்வதனால் சராசரி வெப்பநிலை அதிகரித்துச் செல்லும்
வாய்ப்பு உள்ளதால் இந்த நிலைமை இன்னும் மோசமாகும். இந்த நிலைமை விவசாயம்,
நீர்வளம் மற்றும் நிலப் பயன்பாட்டுத் துறைகளை நேரடியாகப் பாதிப்பதுடன்
முன் சொன்னபடி காலநிலை மாற்றங்களிற்கு முகங் கொடுக்க வேண்டி விசேடமாக உலர்
வலயங்களில் மழை நீரைப் பாதுகாத்தல், சிறிய குளங்களில் வண்டல் மண்
அகற்றல் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதிகரித்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை நிலைமைகளை பாதுகாப்பற்ற துறைகளில் நிகழும் காலநிலை மாற்றங்களிற்கு முகங் கொடுக்க வேண்டிப் பிரச்சினை மற்றும் பாதுகாப்பற்ற தன்மை மதிப்பீட்டு அலகாக இசைவாக்கமடையும் தன்மைகளை முன்னேற்றும் நுட்ப முறைகளை உருவாக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்த முடியும்.
இந்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை நிலைமைகள் 1 pcc இனால் ஆலோசிக்கப்பட்ட கருதுகோள் ரீதியான வெளிப்பாடுகள் நிலைமைகளின் கீழ் அமைந்துள்ளது. முன்பு பிரசுரிக்கப்பட்ட காலநிலை அழிவுகளிற்கு ஏற்ப எதிர்வரும் வருடங்களில் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலைகளில் மத்திய வெளிப்பாட்டு நிலைமைகள் Head cmb மாதிரியுடன் பாவிக்கப்படுகிறது. 1 pcc மூலம் உத்தேசிக்கப்பட்ட வெளிப்பாட்டு நிலைமைகளுடன் இணைந்துள்ளதுடன் நம்பகமற்ற தன்மை ஏற்படும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமாகும்.
நன்றிஅதிகரித்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை நிலைமைகளை பாதுகாப்பற்ற துறைகளில் நிகழும் காலநிலை மாற்றங்களிற்கு முகங் கொடுக்க வேண்டிப் பிரச்சினை மற்றும் பாதுகாப்பற்ற தன்மை மதிப்பீட்டு அலகாக இசைவாக்கமடையும் தன்மைகளை முன்னேற்றும் நுட்ப முறைகளை உருவாக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்த முடியும்.
இந்த மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை நிலைமைகள் 1 pcc இனால் ஆலோசிக்கப்பட்ட கருதுகோள் ரீதியான வெளிப்பாடுகள் நிலைமைகளின் கீழ் அமைந்துள்ளது. முன்பு பிரசுரிக்கப்பட்ட காலநிலை அழிவுகளிற்கு ஏற்ப எதிர்வரும் வருடங்களில் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலைகளில் மத்திய வெளிப்பாட்டு நிலைமைகள் Head cmb மாதிரியுடன் பாவிக்கப்படுகிறது. 1 pcc மூலம் உத்தேசிக்கப்பட்ட வெளிப்பாட்டு நிலைமைகளுடன் இணைந்துள்ளதுடன் நம்பகமற்ற தன்மை ஏற்படும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமாகும்.
இலங்கை காலநிலை மாற்றங்களிற்கு இசைவுபடும் பிரச்சினைகளிற்கான மதிப்பீட்டிற்கு அடிப்படை உதவிகளைச் செய்த GEF/UNEP/TWAS (பிரதான இலக்கம் AS - 12) நிறுவனங்களிற்கு விசேட நன்றிகள்.
No comments:
Post a Comment