மண்
இலங்கையின் வயல் மண்
இலங்கையில் நெற்செய்கை பண்ணப்படும் வயல் நிலம் அண்ணளவாக 780000 ஹெக்டயர்களாகும்.
இவை பல்வேறு விவசாய காலநிலை வலயங்களில் பரம்பல் அடைந்துள்ளன.
வயல் மண், புவி அமைவிடம், நீர் வடிப்பு, மூலப் பொருட்களுக்குஏற்ப பிரதான மண் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
நெல் பயிர்டப்படும் மண் | |
மண்வகை | அமைந்துள்ள காலநிலை வலயம் |
01. செங்கபில மண் | உலர், இடை வலயம் |
02. செங்கபில மண்ணும் முதிராத கபில மண்ணும் |
உலர், இடை வலயம் |
03. செம்மஞ்சள் பொட்சோலிக் | மண் ஈர, இடை வலயம் |
04. களி மண் | உலர் ,இடை ,ஈர வலயம் |
05. அலுவியல் மண் (ஆற்றுமண்) | உலர், இடை ,ஈரவலயம் |
06. செங்கபில லடசோலிக்மண் | இடை ,ஈர வலயம் |
07. முதிராத கபில இருவாட்டி மண் | ஈர வலயம் |
08. பொக் பகுதி பொக்மண் (சேதன, பகுதிசேதன மண்) |
ஈர வலயம் |
09. சொலனைட் மண்(கார,உவர்மண்) | உலர் வலயம் |
10. செலலனோசக் (கார உவர்மண்) | உலர் வலயம் |
11. குறுமுசோல் | உலர் வலயம் |
12. ரெண்டிசினா | உலர்,இடை வலயம் |
உலர் வலய வயல் மண்
உலர் வலய வயல் மண்ணானது வெளிப்புறமாக பள்ளமான கட்டமைப்பாகவும் கடற்கரையை அண்டி மேடாகவும் காணப்படுவதுடன் வெள்ளப் பெருக்கிற்கு உட்படக்கூடியதாகவும் காணப்படும்.
வெளிப்புறமாக காணப்படக்கூடிய பள்ளமான கட்டமைப்புகளில் உள்ள வயல் நிலங்கள் அகலமாக காணப்பட்டாலும் சாதாரணமாக காணப்படும். இந்நிலங்களின் வயல் மண்ணாக செங்கபில மண், களி மண், செங்கபில மண் முதிராத கபில மண் , மற்றும் அலுவியல் மண் (ஆற்றுமண்) என்பன காணப்படும்.
இதில் செங்கபில மண்ணின் pர் வீதம் 6-7 ஆக காணப்படுவதுடன் காற்றூட்டலுடன் கூடிய மணல், களி, இருவாட்டியில் இருந்து மணல் கலந்த இருவாட்டி வரை வேறுபடும்.
உலர் வலயத்திலுள்ள களிமண் சாம்பல் நிறத்தை கொண்டதுடன் மண் காற்றூட்டல் அளவு மணல், களி, இருவாட்டியில் இருந்து மணல், களி வரை வேறுபடும். pர் வீதம் 6-7 - 7.5 ஆக காணப்படும்.
இங்கு பிரதான களி கனிப்பொருட்களாக மொன்டி மொரிலோனைட், கவோலினைட், இலைட் என்பன காணப்படும். இம்மண் உலர் வலயத்தில் காணப் படும் மிகவும் வளமான மண்ணாகும்.நீர் தட்டுப்பாடு இல்லை என்றால் உயர் விளைச்சளை பெற்றுக் கொள்ள முடியும்.
செங்கபில மண், முதிராத கபில மண் என்பன உலர் வலயத்தில் கிழக்கு பகுதியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆழமற்ற மண்ணாகும். இதன் காற்றூட்டல் ஆனது மணல்கலந்த இருவாட்டியில் இருந்து இருவாட்டி கலந்த மணல் வரை வேறுபடும். மத்திமமான காற்றூட்டலை கொண்டது,நடுத்தரமான நீர் வடிப்பை கொண்டதுடன் பௌதீக நீர் பற்றுத்திறன் சிறிது குறைவாக காணப்படும்.
ஆனாலும் இலங்கையின் மஹவ பிரதேசத்தில் உள்ள செங்கபில மண்,முதிராத கபில மண் ஏனைய பிரதேசங்களிலுள்ள அம்மண்ணை விட அதிகளவு பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனைக் கொண்டது.இம்முதிராத கபில மண்ணுக்கு கீழ் அருகாமைலேயே களி மண் காணப்படும்.
ஆனால் இக்களி மண்ணின் பயிர் உற்பத்தி திறன் செங்கபில மண்ணுக்கு அருகாமையில் உள்ள களிமண்ணின் பயிர் உற்பத்தி திறனிலும் மிக குறைவாகும்.
உலர் வலயத்தில் நெற்செய்கையை மேற்கொள்ள கூடிய அலுவியல் மண் (ஆற்றுமண்) உண்டு.
ஆறு,வாவி,கங்கைகளை சூழவுள்ள நீரினால் மூழ்கடிக்கப் படக்கூடிய இடங்களில் அலுவியல் மண்ணை (ஆற்றுமண்) இலகுவில் அவதானிக்க முடியும்.
உலர்வலயத்தில்வடக்கு மற்றும் வடமேல் பிரதேசத்தில் கடற்கரை ஓரங்களில் சொலனேட் மற்றும் பொலனோவக்ஸ் போன்ற மண் வகை காணப்படுவதுடன் அவற்றில் உவர்,அமில தன்மை காணப்படுகிறது. இத்தன்மை நெல் அறுவடையில் பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் pர் வீதம் 8.5 ஆகும்.
இடைவலயத்தின் வயல்மண்
நெற்செய்கையை மேற்கொள்ளகூடிய நிலப்பரப்பில் 25 வீதமானவை இதற்குள் உள்ளடங்கும்.
காலநிலை, மண்ணின் செங்குத்து உயரத்திற்கு ஏற்ப இடைவலயம் மேலும் 3 பகுதிகளாக பிரிக்கப்படும்.
தாழ்நாட்டு இடைவலயம்
நெற்செய்கை மேற்கொள்ளப்படும் செம் மஞ்சள் நிற பொட்சொலிக் மண் சிறிதளவு குறைந்த நீர் வடிப்புள்ள பிரதேசங்களில் காணப்படுவதுடன் களிமண் நீர் வடிப்பு குறைந்த இடங்களில் காணப்படும். பள்ளமான இடங்களை அண்டி அலுவியல் மண் (ஆற்று மண்) காணப்படும்.
களிமண்ணின் காற்றூட்டல் அளவு மணல் களியில் இருந்து மணல்களி இருவாட்டி வரை மாறு படும். இதன் pர் வீதம் 5-4 ஆகும். செம்மஞ்சள் நிற பொட்சொலிக் மண்ணில் மிகக்குறைந்த அளவிலேயே நெல் பயிரிடப்படுகிறது. ஆமிலத் தன்மை, இரும்பு நஞ்சாதல் போன்ற மண் பிரச்சினைகளை இம்மண் வகைகளில் அவதானிக்க முடியும்.
இடைநாட்டு இடை வலயம்
இங்கு செங்கபில லட்டசோல்மண் மற்றும் முதிராத கபில மண்ணில் நெற்செய்கை பண்ணப்படுகிறது. கபில லட்டசோல் மண்ணில் நடுத்தர அளவான நீர் வடிப்பைக் கொண்ட பகுதிகளில் நெற்செய்கை பண்ணப்படும். pர் வீதம் 6 ஆக காணப்படுவதுடன் பொஸ்பரஸ் அளவு மிகவும் குறைவாக காணப்படும்.
பொஸ்பரஸ் வழங்கல் சிறந்ததாககாணப்பட்டாலும் கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற கனிப் பொருட்களிள் வழங்கல் மத்திமமாகும். நீர் வசதி காணப்படின் 2 போகங்களிலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்.
மலைநாட்டு இடை வலயம்
இங்கு செம்மஞ்சள் பொட்சோலிக் மண் மற்றும் முதிராத கபிலநிற இருவாட்டி மண்ணில் நெற் செய்கை பண்ணப்படுகிறது. ஒரு போகத்தில் நெல் பயிரிடப்படுவதுடன் ஏனைய போகங்களில் மரக்கறி வகைகள் பயிரிடப்படுகிறது.
ஈரவலயத்தின் வயல்மண்
இலங்கையில் முழு வயல் நிலப்பரப்பில் 30மூகாணப்படுவது ஈர வலயத்திலாகும். ஈர வலயமானது இடவுயரம் மற்றும் புவி வரை படத்திற்கு ஏற்ப 3 பகுதிகளாக பிரிக்க முடியும்.
இடை நாடு,மற்றும் மலை நாட்டில் அமைந்து உள்ள ஒடுக்கமான பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலும் தட்டுக்களாக அமைந்து உள்ள வயல் நிலங்கள்.
தாழ்நாட்டு ஈரவலயத்தில் பள்ளத் தாக்குகளில் அமையப் பெற்றுள்ள வயல் நிலங்கள்.
கிழக்கு கடற்கரையை அண்டி அமைந்துள்ள வயல் நிலம் மற்றும் வெள்ளப் பெருக்கு நிலமைகளுக்கு பாத்திரமாகக் கூடிய பள்ளத்தாக்குகள் என்பனவாகும்.
இதில் இடைநாட்டு ஈரவலயத்தில் அமைந்துள்ள அலுவியல் மண்ணில் (ஆற்று மண்) மகா போகத்தில் நெற்செய்கையும் சிறு போகத்தில் மரக்கறி செய்கையும் மேற்கொள்ளப்படும்.
இம்மண் மகாவலி நதியில் இருந்து ஊற்றெடுத்து பள்ளக்தாக்குளாக ,கம்பொல,கன்னொருவை பிரதேசங்களில் பரம்பலடைந்து காணப்படுகின்றது.
இம்மண் கடும் கபில நிறமாக காணப்படுவதுடன் சிறந்த நீர் வடிப்பையும் கொண்டது.
காற்றூட்டல் களியுடன் கூடிய இருவாட்டியில் இருந்து களிமண் வரை அதிகரிக்கும். pர் வீதம் 4.5-5 ஆக காணப்படுவதுடன் சேதன பொருட்கள் 1.4மூ காணப்படும்.
களி மண்ணும் இவ்வலயத்தில் காணப்படுகிறது.
காற்றூட்டல் களியுடன் கூடிய இருவாட்டி மண்ணில் இருந்து களிமண் வரை வேறுபடும்.
pர் வீதம் 4.5-5 ஆக காணப்படும். இம்மண்ணில் இரண்டு போகங்களில் நெற் பயிரிட முடியும்.
தாழ்நாட்டு ஈர வலயத்தில் களி மண்ணை அவதானிக்கலாம்.
நலிந்த காற்றூட்டலை கொண்டதுடன் மேல் மண் மணல் கலந்த இருவாட்டி மண்ணில் இருந்து களி வரையான மண் காற்றூட்டலை கொண்டது.
மழை அதிகமாக பெய்யும் காலங்களில் புவி நீர்மட்டம் புவிக்கு அண்மித்து காணப்படும். இந்த மண் ஆழமாக காணப்படுவதுடன் சாம்பல் கலந்த கபிலம், சாம்பல் நிறம் மற்றும் கடும் சாம்பல் நிறமாகும்.
நெற்செய்கை காரணமாக தொடர்ந்து மேல் மண் படை கலப்பதனால் சிறந்த காற்றூட்டலை காண முடியும். புவி நீர் மட்டம் கீழ், மேல் செல்வதனால் உறிஞ்சப்படும் களி கனிப்பொருள் கழுவப்பட்டு மண்ணில் இருந்து நீங்குவதனால் கீழ் படையில் தடிப்புடைய மணலை அதிகம் காண முடியும். pர் வீதம் 4 -5.5 ஆக இருக்கலாம்.
தாழ்நாட்டு ஈரவலயத்தில் கிழக்கு மற்றும் வட கீழ் கடலுக்கு அண்மையிலுள்ள பள்ளதாக்கு, மேட்டு நிலங்களில் நெற்செய்கை பண்ணப்படும்.
நலிந்த நீர் வடிப்பைக்கொண்ட மண் வகைகள் மூன்றினை இப்பகுதியில் காண முடியும். அவை கனிப்பொருள் அடங்கியுள்ள மண், குறை சேற்று மற்றும் சேற்று மண் என்பவையாகும்.
கனிப்பொருள் அடங்கியுள்ள மண் சிறந்த நீர் வடிப்பை கொண்ட மண் அல்லது நலிந்த நீர் வடிப்பை கொண்ட வலையங்களாக காணப்படும். pர் வீதம் 5.5 ஆக காணப்படுவதுடன் மண் வளி மணல்,களி கலந்த இருவாட்டியில் இருந்து களி,
இருவாட்டி வரை அதிகரிக்கும் குறை சேற்று மண் விருத்தி அடைந்து உள்ளமைக்கான காரணம் ஓடை, கலப்புகளில் உள்ள சேதன பொருட்களாலும் நீர் தாவரங்களில் இருந்து கிடைக்கின்ற பொருட்களினாலும் ஆகும்.
இம்மண் அமிலமாவதுடன் pர் வீதம் 5 - 5.5 ஆக காணப்படும் மேற்படையில் சேதனப்பொருள் அளவு 15-25மூ ஆக காணப்படும். மண் வளி களியை ஒத்தது.
சேற்று மண் கடலை அண்டிய கலப்பு மற்றும் சேற்று நிலங்களில் படிந்துள்ள சேதன பொருட்கள் மற்றும் களி கனிப் பொருட்களினால் உருவாகியுள்ளது. pர் வீதம் 5.2-5.4 ஆகும். பொஸ்பரஸ் மிக குறைந்தளவே காணப்படும்.
நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டுமெனின் நீர் வடிப்பை மேம்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment