Friday, March 15, 2013

நீர் முகாமைத்துவம்

நீர் முகாமைத்துவம்


நெற் பயிர்ச்செய்கையில் நீர்ப்பரிபாலனம்
  • எந்த நாட்டில் நெற் பயிர்ச்செய்கை செய்தாலும், நெற்பயிர் செய்கையின் போது முக்கிய காரணியாக அமைவது நீராகும்.உலகில் விவசாயத்துக்கு பயன்படு த்தக்கூடிய நீரின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
  • எமது நாட்டை தன்னிறைவு அடையச் செய்ததாக குறிப்பிடப்படும் ஆற்றல் மிக்க பராக்கிரமபாகு நிலத்தில் விழும் எந்த நீர்த் துளியையும் பிரயோசனப்படுத்தாது கடலில் கலப்பதற்கு வழிவகுக்கக் கூடாது என தெரிவித்தார்.
  • நெற் பயிரில் கூடிய வினைத்திறனை பெற்றுக் கொள்வதற்காக சிக்கனமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் நீரை பரிபாலித்தல், மற்றும் பாவித்தல்;;;;, முறையான நீர் பரிபாலனமாக குறிப்பிடலாம்.
சிறந்த நீர்ப்பரிபாலனம்
  • சேர்த்து வைக்கப்பட்ட நீரினை பரிபாலிக்கும் சந்தர்ப்பங்களில் சிறந்த நீர் வழங்கல், வடிகால் அமைப்பின் மூலம் பயிருக்கு தேவையான போது நீரை வழங்கல் போன்றவற்றை வினைத்திறனாக மேற்கொள்ளின் அதை சிறந்த நீர்பரிபாலனம் என குறிப்பிடப்படும்.
  • முக்கியமாக வரட்சியான கால நிலைகளில் தாவரத்திற்கு தேவையான ஏனைய காரணிகளுடன் நீர் பரிபாலனமும் உச்சளவு இருப்பின் அதை சிறந்த நீர் பரிபாலனமாக குறிப்பிட முடியும்.
  • மழை நீரைக்கொண்டு நெற் பயிர்ச் செய்கை செய்யும் சந்தர்ப்பங்களில் கூடிய மழைவீழ்ச்சி கொண்ட காலநிலை இருக்குமிடத்து தேவையற்ற நீரை அகற்றி பயிருக்கு தேவையான அளவினை தேவையான சந்தர்ப்பங்களில் மட்டும் கிடைக்கச் செய்வதனையும் சிறந்த நீர் பரிபாலனமாக குறிப்பிட முடியும்.
  • எனவே நெற் பயிர்ச்செய்கையில் மிகவும் பொருத்தமான நீர் பரிபாலன முறை பற்றி அறிந்து கொள்ளல் முக்கியமானதாகும். அவையாவன,
  1. தொடர்ச்சியாக நீர்வழங்கல்

    • இதை நீர் சுலபமாக கிடைக்கும் பிரதேசங்களில் அல்லது நீர்ப்பாசன வசதியுள்ள பிரதேசங்களில் செய்ய முடியும். இம்முறையின் கீழ் பயிரின் பல்வேறு கால கட்டங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டிய நீரின் தேவைகள் கீழ்கண்டவாறாகும்.
      (அ) நாற்று நடுகையில் 1-2 சென்றி மீற்றர் அளவான மெல்லிய நீர் மட்டத்தால் வயலானது மூடப்பட்டு இருத்தல் வேண்டும்.
      (ஆ) நாற்று நட்ட பின்னர் அதாவது வயலில் நாற்றுக்கள் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட பின் படிப்படியாக நீர் மட்டத்தை 3-5 செ.மீ. வரை உயர்த்த முடியும்.
      (இ) மட்டம் வெடிக்கும் பருவத்தில் நீர் மட்டத்தை இயன்றளவு குறைத்துக் கொள்க.
      (ஈ) பாற்பருவத்தின் பின்னர் பயிருக்கு நீர்ப்பற்றாக் குறை ஏற்படாத வண்ணம் பராமரிக்கவும்.
      (உ) பூத்தலின் பின்னர் படிப்படியாக வயலின் நீர் மட்டத்தை குறைத்தல் வேண்டும்.
  2. இடையிடையே நீர்வழங்கல்

    • நீர் அரிதாக கிடைக்கும் பிரதேசங்களில் கையாளும் முறையாகும் அடிக்கடி வயலிருந்து நீரை திருப்பி விடுவதுடன் அதன் மூலம் மண்ணினை ஈரலிப்பாக வைத்துக் கொள்ளப்படும்.
    நன்மைகள்
    1. மண்ணினுள் வளியூட்டல் அதிகரிக்கும், இதனால் தாவர வளர்சிக்கு பொருத்தமற்ற நச்சுத்தன்மையான பொருட்கள் உருவாதல் தடுக்கப்படும்.
    2. மண்ணின் மேற்பரப்பில் நீர்ப்பற்று இல்லாததால் மண்ணிற்குள் மிகவும் மெதுவாக நீர் வடிந்து செல்ல இடமளிக்கும் போது நீர்ப்பாசன வழங்களில் சிக்கனம் ஏற்படும்.
    3. மண் நீர் வடிப்பில் ஏற்படும் பிரச்சனைகள் குறைவு.
    4. முக்கிய போசணைக் கூறுகள் கழுவிச் செல்லப்படுவது தவிர்க்கப்படும்.
    தீமைகள்
    1. நாளாந்தம் கண்காணிக்க நேரிடும்.
    2. களைக் கட்டுப்பாட்டிற்காக கூடியளவு காலம்,பணம் செலவாக்கப்படும்
    3. இம்முறையை கையாளும் போது சில நேரங்களில் பயிருக்கு தேவையான காலகட்டங்களில் நீர் கிடைக்கப் பெறாமல் போகக்கூடும்
    4. பயிருக்குத் தேவையான நீரின் அளவு மண்ணின் ஈரப்பதன் பயிர்ச் செய்கையின் போகம்,மற்றும் பயிரின் வயது என்பவற்றிற்கு ஏற்ப வேறுபடக்கூடும்.
    5. சாதாரணமாக 4மாத வயது வர்க்கத்திற்காக சாதாரண முறையில் தேவைப்படும் நீரின் அளவு 5 ஏக்கர் அடி ஆகும்.
    6. உலர் வலயத்தில் 120 நாட்கள் வயதுள்ள நெல்லை பயிரிட பெரும் போகத்தில் 5 ஏக்கர் அடி நீரும் சிறு போகத்தில் 6 ஏக்கர் அடி நீரும் போதுமானதாகும்
    7. தேவைப்படும் நீரின் அளவை தீர்மானிப்பதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவை கவனத்தில் கொள்ளப்படும்.
  1. மழைவீழ்ச்சியின் அளவு
  2. வயலில் தேங்கி நிற்கும் நீரின் ஆழம்
  3. வரம்புகளின் அளவும் பராமரிப்பும்
  4. பயிரின் வயது
  5. பூமியின் மற்றும் மண்ணின் அமைப்பும், இடமும்.

No comments:

Post a Comment